WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, December 25


வருடம் அச்சிடாத ரூபாய் நோட்டுகள்

மாற்றுவதற்கான அவகாசம்: ஜூன் 30 வரை நீட்டிப்பு



 
கந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம்  தேதி வரை நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எந்த வருடத்தில் அச்சிடப்பட்டது என்று குறிப்பிடாமல் புழக்கத்திலுள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்  திரும்ப பெறப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கான அவகாசம் ஏப்ரல் 1ம் தேதி முடியும் என்றும்  அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த கால அவகாசம் 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவகாசம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளின் மறு பக்கத்தில், கீழ் பகுதியில் வருடம் அச்சிடப்பட்டு இருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது

Monday, December 22

இன்னும் 10 நாள் தான் இருக்குது!பழைய நோட்டை மாத்திக்குங்க!

:ரூபாய் நோட்டுகளில், 2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகளை, செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள, இன்னும், பத்து நாள் அவகாசமே உள்ளது. அதற்குள், பொதுமக்கள் வசம் உள்ள, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த ஆண்டு ஜன., 22ல், ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை பிறப்பித்தது. 2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்டு, பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள ரூபாய் கரன்சி நோட்டுகள், ஏப்., 1 முதல் செல்லாததாகி விடும். எனவே, அதற்குள் தங்கள் வசம் உள்ள பணத்தை, வங்கிகளில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளுங்கள் என, உத்தரவிட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை, ஜன., 1 வரை, ரிசர்வ் வங்கி நீட்டித்தது. காலக்கெடு முடிவடைய, இன்னும் ஒன்பது நாட்கள் தான் உள்ளன.இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.

Sunday, December 21

ERP செயலாக்கம் 
ERP GO - LIVE 

தமிழகத்தில் 19/12/2014 நண்பகல் 12.00 முதல் ERP  திட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக CGM காணொளி மூலம் ERP திட்டசெயலாக்கத்தைத் துவக்கி வைத்தார். ERP திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் DELOITTEE  குழு அறிக்கை அமலாக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம். 
எனவே காணொளிகள் மார்கழி மாத பஜனை போல் 
தொடர்ந்து  தமிழகத்தில்  நடைபெறும். 

ERP செயலாக்கத்தை தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் மறந்த 
நமது அதிகாரிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். 

ஆனால் GPF,விழாக்காலப்பணம்,டிசம்பர் மாத சம்பளம்,
ஒப்பந்த ஊழியரின் நவம்பர் மாத சம்பளம்,
ஓய்வு பெற்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம்
 ஆகியவற்றை நினைத்து நமது தோழர்கள் 
தூக்கம் இழக்க ஆரம்பித்துள்ளனர்.

 ERP திட்டம் GO-LIVE ஆனதற்கு நமது வாழ்த்துக்கள்.
அதே நேரம்  LIFE - GOING  ஊழியர்களின் பட்டுவாடாக்களும் விரைவில் 
GO-LIVE ஆக வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
                                                                                                    செய்தி ...காரைக்குடி வலைத்தளம் ....

நபிகளின் மாண்புகளைத் தூக்கியெறியும் ஐ.எஸ்......

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள்: கோப்புப் படம்
இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள்: கோப்புப் படம்
தலையங்கத்தில் (19.12.2014) ஐ.எஸ். அமைப்பைத் தடை செய்ததாகச் செய்தி வெளியானது. இது முற்றிலும் இந்திய முஸ்லிம்களால் வரவேற்கத்தக்க ஒன்று. ஜனநாயக விரோதப் போக்கைக் கையாளுகின்ற, இஸ்லாமியப் பெயர் தாங்கிய எந்த அமைப்புக்கும், இஸ்லாத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இந்திய முஸ்லிம்கள் ஐ.எஸ். விவகாரத்தில் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் விரோதம் பாராட்ட வேண்டுமென ஜிஹாதிக்குத் தவறான கருத்தியலைப் பரப்புரை செய்கின்ற ஐ.எஸ். கொள்கையினால், உணர்ச்சிவேகமிக்க இளைஞர்கள் பலிகடா ஆவதைத் தடுக்க வேண்டும். நபிகள் நாயகத்தின் நேரடி ஆட்சி நடைபெற்றபோது, மதினாவில் வாழ்ந்த யூதர்களுக்கான முழுப் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
‘இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் பிற சமயத்தவர்களுக்கு யாரேனும் தீங்கிழைத்தால், அது எனக்கு நிகழ்ந்தது போலாகும். ஓர் இஸ்லாமியர், பிற சமயத்தைச் சார்ந்த நபரை அநியாயமாகத் தீண்டினால், சமயச் சகோதரருக்கு ஆதரவாக இறைவனிடம் வழக்காடுவேன்’ என்ற நபிகள் நாயகம் போதித்த ஜனநாயக மாண்புகளைத் தூக்கியெறிகின்ற இஸ்லாமியப் பெயர் தாங்கிய அமைப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே தடை செய்யப்பட வேண்டியவையே.
- சாதாத், சென்னை.

Saturday, December 20

கிரானைட் குவாரிகளுக்காக புராதன சின்னம், கண்மாய்கள் சிதைப்பு: நேரில் ஆய்வு செய்த சகாயம் அதிர்ச்சி

  • திருவாதவூர் கிரானைட் குவாரியில் வெட்டப்பட்ட கற்களின் அளவை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
    திருவாதவூர் கிரானைட் குவாரியில் வெட்டப்பட்ட கற்களின் அளவை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
  • திருவாதவூர் ஓவாமலையில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான சமணர் படுகையை ஆய்வு செய்யும் சகாயம் குழுவினர்.
    திருவாதவூர் ஓவாமலையில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான சமணர் படுகையை ஆய்வு செய்யும் சகாயம் குழுவினர்.
முறைகேடு நடந்த கிரானைட் குவாரிகளில் ஆய்வு நடத்திய ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம், சட்ட விதிகளை மீறி அதிகாரிகள் துணையோடு புராதன சின்னங்கள், நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஏகத்துக்கு அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து ஆய்வு செய்துவரும் சகாயம் நேற்று கிரானைட் குவாரி களில் நேரில் ஆய்வு மேற் கொண்டார். திருவாதவூரில் உள்ள குவாரிகளுக்கு அவர் தனது குழுவினருடன் சென்றார். கனிம வளம், வேளாண்மை, வருவாய், பொதுப்பணி, தொல்லியல் துறை அதிகாரிகள் பலர் உடன் வந்தனர். டிஎஸ்பி மங்களேஸ்வரன் தலைமையில் 50 போலீஸார் சகாயத்துடன் வந்தனர்.
சிதைக்கப்பட்ட புராதன சின்னம்
திருவாதவூர் மேலச்சுனைகுளம் அருகே அமைந்துள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை யான ஓவாமலை என்றழைக்கப் படும் சமணர் படுகையை அவர் பார்வையிட்டார். தமிழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ராமசாமி, தொல்லியல் ஆர்வலர் கபிலன் உட்பட பலர் பாதிப்புகள் குறித்து சகாயத்திடம் தெரிவித்தனர். 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதி, படித்ததை இங்குள்ள கல்வெட்டுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. மலைக்கு மேல் உள்ள சிவன் கோயிலுக்கு மாணிக்கவாசகர் வந்துசென்றுள்ளார். மலை குகையில் 10 சமணர் படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் குவாரி நடத்தியவர்களால் கடுமையாக சேதமாக்கப்பட்டுவிட்டன. மலையை ஆங்காங்கே வெட்டி சிதைத்திருந்தனர். இங்கு யாரும் நுழைந்துவிடாதபடி பாதையையே அடைத்துவிட்டனர் என்றனர்.
புராதன சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்கிறது சட்டம். ஆனால் இந்த மலையில் 125 முதல் 242 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததை சகாயம் பதிவு செய்தார்.
அழிக்கப்பட்ட கண்மாய்கள்
கீழச்சுனைகுளம், இரணிய ஊருணி முழுமையாக அழிக்கப் பட்டு கிரானைட் குவாரியாக காட்சி யளித்தன. கல்கட்டு ஊருணி, மாங்குளம் கண்மாய், மேலச்சுனை குளத்தின் பெரும் பகுதியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கண்மாய், கரைகளை தேடி சகாயம் அலைந்தார். அதிகாரிகளாலும் அடையாளம் காட்ட முடியவில்லை. அளந்து காட்டும்படி கூறியும் வருவாய்த் துறையினரால் முடியவில்லை. இறுதியாக சிறிய மேட்டுப்பகுதியை காட்டி இதுதான் கண்மாய் எனக்கூறியதை கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார். கண்மாய்கள் மூலம் விவசாயம் நடைபெற்ற நிலங்கள் முழுவதும் கிரானைட் கல் குவியல், 200 அடி பள்ளங்களாகக் காட்சியளித்தன.
காணாமல்போன 1000 ஏக்கர்
குவாரி அருகே பெட்ரோல் பங்க், சொகுசு அறைகளுடன் பல ஏக்கர் வளைக்கப்பட்டிருந்தது. இது யாருடைய இடம் என விசாரித்தபோது ‘கால்நடைகளுக் கான மேய்ச்சல் நிலம் அது. குவாரி அதிபர் பி.கே.செல்வராஜ் இப்பகுதியை ஆக்கிரமித்து குவாரி அலுவலகமாக பயன்படுத்திய தாகவும், தற்போது சீல் வைத்துள் ளதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். பின்னர் சீலை உடைத்து உள்ளே சென்று சகாயம் ஆய்வு செய்தார். இப்பகுதி யில் திரும்பிய பக்கமெல்லாம் கிரானைட் கற்கள் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. இதைப் பார்த்த சகாயம் இக்கிராமத்தில் மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என கேட்டார். 1800 ஏக்கர் இருப்பதாகவும், இதில் 1000 ஏக்கர் தரிசு, கண்மாய் புறம்போக்காக இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலம் எங்கே என கேட்டபோது, பெரும்பகுதி கிரானைட் குவாரி களால் ஆக்கிரமித்தும், அழிக்கப் பட்டும் விட்டன என அதிகாரிகள் கூறியதைக் கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார்.
பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு
திருவாதவூரில் பிஆர்பி, சிந்து உள்ளிட்ட 6 குவாரிகளை சகாயம் ஆய்வு செய்தார். பாசன வாய்க்கால் கரை முழுவதிலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. யாதவர் சமுதாய மயானத்துக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் என்பவர் கண்ணீர்விட்டபடி புகார் கூறினார். இப்பகுதிலிருந்த பலநூறு ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பலரும் புகாராக தெரிவித்தனர்.
சகாயம் ஆதரவு குழுத் தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் குவாரிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சகாயத்துக்கு விளக்கினர். இவர்களிடம் சகாயம் கூறுகையில், குவாரிகளால் நீரா தாரம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாதிப்புகள் குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்து நீதிமன்றத்தில் முறையீடு
மதுரை கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுகநயினார், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராம கிருஷ்ணன், மேலூர் தாசில்தார் மணிமாறன், வருவாய் ஆய்வாளர் பூமாயி, கிராம நிர்வாக அலுவலர் அனுராதா, அளவையாளர் வேல்முருகன், கிராம உதவியாளர்கள் ஆண்டி, அய்யாவு உட்பட பலர் வந்தனர். இவர்களிடம் கண்மாய், அரசு நிலம், அழிக்கப்பட்ட நிலங்களின் அளவு, அமைவிடம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சகாயம் கேட்டார். இதில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அலுவலர்கள் தயாராக வரவில்லை. கிராம கணக்குகளில் உள்ள நிலம் பற்றிய புள்ளிவிவரங்களைக்கூட முறையாக தெரிவிக்கவில்லை. கேட்டும், பார்த்தும் சொல்வதாக தெரிவித்தனர். ஆவணங்களை தேடிக்கொண்டே இருந்தனர். இவ்வளவு விதிமீறல் நடந்த பின்னரும் கண்மாயின் அமைவிடத் தைக்கூட காட்ட முடியாமல் அலுவ லர்கள் திணறினர்.
இதில் அதிருப்தியடைந்த சகாயம், விசாரணையில் உரிய விவரங்களை தெரிவிக்காவிடில் அதை நீதிமன்றத்தில் அப்படியே பதிவு செய்துவிடுவேன். இதற்கு உரிய அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஆய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.


Friday, December 19



கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு........!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடிப்படை ஊதியத்தில் 25 விழுக்காடு சிறப்பு ஊதியமாக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரத்து 930 முதல் 2 ஆயிரத்து 397 ரூபாய் வரை ஊதிய உயர்வை பல்வேறு நிலையில் உள்ள தொழிலாளர்கள் பெறுவர் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நல்லெண்ணத் தொகையாக ஆலைக்குடியிருப்பில் வசிக்கும் பணியாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஆலை குடியிருப்பில் வசிக்காதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு நல்லெண்ணத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை ஏற்க முடியாது என்றும், தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்
.

Wednesday, December 17

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை....////


ரூ.3,500 கோடி மதிப்பிலான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு விதிகளை மீறி அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது குறித்து, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது சிதம்பரம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய நிதியமைச்சர் என்ற முறையில், ரூ.600 கோடிக்கும் குறைவான மதிப்புடைய ஒப்பந்தத்துக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரத்திடம் அண்மையில் விசாரிக்கப்பட்டது.
ரூ.600 கோடிக்கும் அதிகமான ஒப்பந்தத்துக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களைக் கையாளும் அமைச்சரவைக் குழுவால் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும்.
அதனை மீறி, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணை இன்னமும் முடிவடையவில்லை' என்று சிபிஐ வழக்குரைஞர் கே.கே. கோயல் தெரிவித்தார்.