ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை....////
ரூ.3,500 கோடி மதிப்பிலான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு விதிகளை மீறி அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது குறித்து, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது சிதம்பரம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய நிதியமைச்சர் என்ற முறையில், ரூ.600 கோடிக்கும் குறைவான மதிப்புடைய ஒப்பந்தத்துக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரத்திடம் அண்மையில் விசாரிக்கப்பட்டது.
ரூ.600 கோடிக்கும் அதிகமான ஒப்பந்தத்துக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களைக் கையாளும் அமைச்சரவைக் குழுவால் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும்.
அதனை மீறி, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணை இன்னமும் முடிவடையவில்லை' என்று சிபிஐ வழக்குரைஞர் கே.கே. கோயல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment