கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு........!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடிப்படை ஊதியத்தில் 25 விழுக்காடு சிறப்பு ஊதியமாக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரத்து 930 முதல் 2 ஆயிரத்து 397 ரூபாய் வரை ஊதிய உயர்வை பல்வேறு நிலையில் உள்ள தொழிலாளர்கள் பெறுவர் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நல்லெண்ணத் தொகையாக ஆலைக்குடியிருப்பில் வசிக்கும் பணியாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஆலை குடியிருப்பில் வசிக்காதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு நல்லெண்ணத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை ஏற்க முடியாது என்றும், தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்
.
.
No comments:
Post a Comment