தென் ஆப்ரிக்க மக்களுக்காகப் போராடி பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா இந்த உலகை விட்டு மறைந்ததன் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மடிபா என்று தென் ஆப்ரிக்க மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய அவரது மனைவி கிரேசா மிக்கேல், மறைந்தது அவரது உடல்தான். அவரது ஆத்மா என்றும் நிலையானது. அது என்றுமே இந்நாட்டு மக்களோடு நிலைத்திருக்கும் என்றார்.
நாடு முழுவதும் அவரது நினைவு தினத்தை ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்தனர்.
No comments:
Post a Comment