நபிகளின் மாண்புகளைத் தூக்கியெறியும் ஐ.எஸ்......
தலையங்கத்தில் (19.12.2014) ஐ.எஸ். அமைப்பைத் தடை செய்ததாகச் செய்தி வெளியானது. இது முற்றிலும் இந்திய முஸ்லிம்களால் வரவேற்கத்தக்க ஒன்று. ஜனநாயக விரோதப் போக்கைக் கையாளுகின்ற, இஸ்லாமியப் பெயர் தாங்கிய எந்த அமைப்புக்கும், இஸ்லாத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இந்திய முஸ்லிம்கள் ஐ.எஸ். விவகாரத்தில் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் விரோதம் பாராட்ட வேண்டுமென ஜிஹாதிக்குத் தவறான கருத்தியலைப் பரப்புரை செய்கின்ற ஐ.எஸ். கொள்கையினால், உணர்ச்சிவேகமிக்க இளைஞர்கள் பலிகடா ஆவதைத் தடுக்க வேண்டும். நபிகள் நாயகத்தின் நேரடி ஆட்சி நடைபெற்றபோது, மதினாவில் வாழ்ந்த யூதர்களுக்கான முழுப் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
‘இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் பிற சமயத்தவர்களுக்கு யாரேனும் தீங்கிழைத்தால், அது எனக்கு நிகழ்ந்தது போலாகும். ஓர் இஸ்லாமியர், பிற சமயத்தைச் சார்ந்த நபரை அநியாயமாகத் தீண்டினால், சமயச் சகோதரருக்கு ஆதரவாக இறைவனிடம் வழக்காடுவேன்’ என்ற நபிகள் நாயகம் போதித்த ஜனநாயக மாண்புகளைத் தூக்கியெறிகின்ற இஸ்லாமியப் பெயர் தாங்கிய அமைப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே தடை செய்யப்பட வேண்டியவையே.
- சாதாத், சென்னை.
No comments:
Post a Comment