WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, January 3

சட்டத்துக்கு மாணவியின் பெயரை சூட்ட வாய்ப்பு இல்லை!! மத்திய அரசு அறிவிப்பு !!


கற்பழிப்பு தடுப்பு சட்டத்தை கடுமையாக்கி, அதற்கு டெல்லி சம்பவத்தில் இறந்து போன மாணவியின் பெயரை சூட்டலாம் என்ற கருத்தை மத்திய மந்திரி சசி தரூர் முன்வைத்தார். அதை மாணவியின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். இதேபோன்று மாயாவதி, கிரண்பேடி போன்றவர்களும் இந்த யோசனையை வரவேற்றுள்ளபோதும், இதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் யதார்த்த நிலை.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று கருத்து தெரிவிக்கும்போது, இந்தியாவில் எந்தவொரு சட்டத்துக்கும் தனி நபரின் பெயர் சூட்டப்பட்டது இல்லை. இந்திய தண்டனை சட்டமும் சரி, குற்றவியல் நடைமுறை சட்டமும் சரி அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. தேசிய கண்ணோட்டத்துடன்தான் ஒரு வழக்கை பார்க்க வேண்டும்.

கற்பழிப்பு தடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு டெல்லி மாணவி உந்துசக்தியாக அமைந்துள்ளார். ஆனால் அவரது பெயரை சூட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என கூறினர்.

நமது நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் குற்றவியல் சட்டமான ஐ.பி.சி. என்னும் இந்திய தண்டனை சட்டமும், அதை அமல்படுத்த கடைப்பிடிக்கப்படுகிற சி.ஆர்.பி.சி. என்னும் குற்றவியல் நடைமுறைச்சட்டமும் பிரிவு எண்களை கொண்டே குற்றங்களை, நடைமுறைகளை பிரித்துக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் கற்பழிப்பு தடுப்பு சட்டப்பிரிவை கடுமையாக்கினாலும், சட்டப்பிரிவு எண் மாறாது. தண்டனையில் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment