ஏர் இந்தியா விமானிகள் இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளதையடுத்து 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊதிய உயர்வு, போனஸ் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தைத் தொடங்கினர்.
முதல் நாள் நடத்திய போராட்டத்தின்போது விமானிகள் சங்கத்தை சேர்ந்த 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
நேற்று இரண்டாம் நாள் போரட்டத்தின் போது, டெல்லி உயர்நீதிமன்றம் விமானிகளின் போரட்டம் சட்ட விரோதமானது என்று அறிவித்ததை தொடர்ந்து, மேலும் 26 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள விமானிகளின் எண்ணிக்கை மொத்தம் 36 அதிகரித்துள்ள நிலையில், விமானிகளின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது
No comments:
Post a Comment