WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, October 12

தயாநிதி,கலாநிதி விரைவில் கைது?


 தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் வீடுகளில் நடத்திய சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
.
இதனிடையே மலேசிய நிறுவனம் சன் எஃப்எம்மில் ரூ.100 கோடி முதலீடு செய்திருப்பதன் மூலம் புதிய ஊழல் அம்பலமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்க செய்ததில் ரூ.600 கோடி அளவுக்கு அவருடைய சகோதரர் கலாநிதி
மாறனின் சன் டிவிக்கு வழங்கியது தொடர்பாக சிபிஐ லஞ்ச ஒழிப்பு சட்டத்திற்கு வழக்குப்பதிவு செய்தது. நேற்று முன்தினம் கலாநிதி, தயாநிதி மாறன் வீடுகள், சன் டிவி அலுவலகம், ஐதராபாத் மற்றும் டெல்லி அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள்.  இதில் முக்கிய தஸ்தாவேஜுக்கள் கிடைத்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் கைதுஇந்த வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் அவர்கள் கைது செய்யப்படக் கூடும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே தயாநிதி மாறன் புதிய ஊழல் அம்பலமாகி இருக்கிறது. மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் எஃப்எம் வானொலியில் ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளது.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் இந்த முதலீடும் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்திற்கு வலுக்கட்டாயமாக விற்க பிறகு இந்த பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களை விசாரிப்பதற்காக தயாநிதி மற்றும் கலாநிதிக்கு சம்மன் அனுப்பப் போவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்
.

No comments:

Post a Comment