2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் பி. அகர்வால் ஆகிய இரு தொழிலதிபர்களை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவரான ஆசிப் பல்வா, இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள டி.பி.எடிசாலட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆவார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணம் கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டதில் இவ்விருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விருவரும் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டு வந்தனர். எனினும் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் தில்லியில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே மத்திய முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி ;தினமணி
No comments:
Post a Comment