ஊழலில் ஆசிய பசிபிக் நாடுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கம்போடியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. ஹொங்கொங்கைச் சேர்ந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசனை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
அந்த நிறுவனம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளை தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது.0 முதல் 10 வரை புள்ளிகள் அளவீடாகக் கொண்டு இந்த நாடுகளில் ஊழலை செய்தது அந்த நிறுவனம்.அதில் கம்போடியா 9.27 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இந்தோனேசியா 9.25 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் பிலிப்பைன்ஸ் 8.9 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளன.இதற்கு அடுத்தபடியாக 8.67 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.இதற்கு அடுத்தபடியாக வியட்நாம் 8.3 புள்ளிகளுடனும், சீனா 7.93 புள்ளிகளுடனும் தாய்லாந்து 7.55 புள்ளிகளுடனும் உள்ளன.0.37 புள்ளிகளுடன் சிங்கப்பூர் மிகக் குறைவான ஊழல் கொண்ட நாடு என்ற பெருமைøயப் பெற்றுள்ளது.இதற்கு அடுத்தபடியாக ஹொங்கொங் 1.10 புள்ளிகளுடனும் அவுஸ்திரேலியா 1.39 புள்ளிகளுடனும் ஜப்பான் 1.90 புள்ளிகளுடனும் மிகக் குறைந்த ஊழல் நாடுகளாக உள்ளன