WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, July 24

BSNL நிறுவன சீரமைப்பு “M/s Deloittee Consultants” பரிந்துரை...

RECOMMENDATIONS OF "DELOITTEE"Consultants

BSNL நிறுவன சீரமைப்பு (ORGANISATIONAL RESTRUCTURING) மற்றும்
மனித வளத்திட்டத்தின்(HR PLAN) மீதான
“M/s Deloittee Consultants” பரிந்துரைகளின் சாராம்சம்

விற்பனையையும் வாடிக்கையாளர் சேவையையும்
முன்னிலைப்படுத்தும் நோக்கில்
SSAக்களை பகுதிவாரி அலுவலகங்களாக (AREA OFFICES)
சீரமைக்க வேண்டும்.
பூகோள அளவுதொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை
மற்றும் வருமான வாய்ப்பு அடிப்படையில்
சிறிய SSAக்களை பகுதி வாரி அலுவலகங்களுடன் இணைக்க வேண்டும்.
இதன் படி தற்போது அகில இந்திய அளவில் இருக்கும்
329 SSAக்களை 167 பகுதி அலுவலகங்களாக
மாற்றியமைக்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கும் 17 SSAக்கள்
10 பகுதி அலுவலகங்களாக மாற்றி அமைக்கப் பட வேண்டும்.
விருதுநகர்மதுரையுடனும்
தஞ்சை மற்றும் குடந்தைதிருச்சியுடனும்
ஈரோடுகோவையுடனும்
தர்மபுரி மற்றும் நாகர் கோவில்வேலூருடனும்
இணைக்கப் பட வேண்டும்.
Transmission, Network Planning போன்ற வேலைகளை
மாநில அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும்.

விற்பனை(SALES),
சந்தைப்படுத்துதல்(MARKETING),
வாடிக்கையாளர் சேவை(CUSTOMER SERVICE DELIVERY),
தகவல் தொழில்நுட்பம்(IT) போன்ற முக்கியமான பகுதிகளில்
BSNL பின் தங்கியுள்ளது.
அந்த துறைகளில் திறனை அதிகரிப்பதற்காக,
தொலைத்தொடர்பு விற்பனை பின்புலத்திறன் கொண்ட
8000 அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு சந்தைப்படுத்துதல் பின்புலத்திறன் கொண்ட
1300 அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர் மேலாண்மையில் திறன் கொண்ட
4000 அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும் ஊழியர்களில் பெரும்பகுதியினர்
நிறுவனத்தின் ஊதியப் பட்டியலில்
ஊதியம் வாங்குபவராக இருக்கக் கூடாது.

வருமானத்திற்கும் ஊழியர் ஊதியத்திற்கும் உள்ள விகிதாச்சாரம்
51% என்ற அதிக அளவில் உள்ளது.
போட்டி நிறைந்த இன்றைய சூழலில் 
இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சந்தை மதிப்பீட்டில் கண்டறியப்படும் உபரி ஊழியர்களின் ஊதியத்தில்  50%த்தைஅரசு ஏற்க வேண்டும்.
செயல்திறன் நிர்வாகத் திட்டத்தை(PERFORMANCE MANAGEMENT SYSTEM)அறிமுகப்படுத்தி ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

பகுதி அலுவலகங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊழியர் எண்ணிக்கை
ஒரு பொது மேலாளருக்கு 2 துணைப்பொது மேலாளர்கள்
2705 தரைவழி இணைப்புகளுக்கு ஒரு JTO/SDE/AGM
விற்பனைசந்தைப்பிரிவுவாடிக்கையாளர் சேவைப்பிரிவுகளுக்கு
சந்தையில் உள்ள நிலவரப்படி ஊழியர் எண்ணிக்கையை முடிவு செய்யலாம்.
பகுதி அலுவலகங்களில் உள்ள மொத்த ஊழியர் எண்ணிக்கையில்
20% நிதி/கணக்குப் பிரிவு ஊழியர்கள்.
7% மனித வள நிர்வாகப் பிரிவு ஊழியர்கள்.
409 இணைப்புகளுக்கு ஒரு TM/RM
2991 தரைவழி இணைப்புகளுக்கு ஒரு TTA
தற்போது இருக்கும் Sr.TOAக்கள்
ERP நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடரலாம்.
மற்ற பிரிவு NON EXECUTIVE ஊழியர்கள் தேவையில்லை;
அவர்கள் ஓய்வு பெறும் வரை தொடரலாம்.

தற்போது தொழில்நுட்பம், நிதி ஆகிய இரு பிரிவுகளில் மட்டுமே
நிர்வாகிகள் இருக்கிறார்கள்.
இது போதாது.
மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப
விற்பனை, சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை விநியோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பகுதிகளில்
புதிய திறனைப் புகுத்த வேண்டும்.
பொறியியல் பட்டத்தோடு மேலாண்மைப் பட்டமும் பெற்று
விற்பனை, சந்தைப்படுத்துதலில் அனுபவம் பெற்ற
14234 புதிய நிர்வாகிகளை
JTO/SDE/AGM/DGM/GM பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டும்.
இதில் DGM/GM பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் மட்டும் நிறுவனத்திலிருந்து ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
மற்றவர்கள் நிறுவன ஊழியர்களாக இல்லாது
OFF ROLL ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் மாநிலத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட
நிர்வாகிகள் எண்ணிக்கை(EXECUTIVES STRENGTH)
DESIGNATION
EXISTING
RECOMMENDED
CGM/PGM
1
4
GM/Sr.GM
24
29
DGM
107
90
JTO/SDE/AGM/CAO
3527
2589
TOTAL
3659
2712
 

தோழர்களே,
சாம் பிட்ரோடாவில் இருந்து Deloittee வரை
எத்தனை குழுக்கள் மதிப்பீடு செய்தாலும்
அவை அனைத்தின் சாராம்சம் ஒன்று தான்.
“ஊழியர் ஊதியச் செலவு அதிகம்,
ஏனென்றால், தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருக்கிறார்கள்”,
என்பது தான்.

நிறுவனத்தின் நிலையை சீரமைக்க வேண்டும் என்றால்,
ஊழியர்களின் வாழ்வைச் சீரழிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளையே தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.
போட்டி என்ற பெயரில்
சுரண்டல் முறைகளை ஊக்குவிக்கும் பரிந்துரைகளையே
கேட்டு வருகிறோம்.

ஏனென்றால்,
பரிந்துரைக்காக நியமிக்கப்பட்ட அத்தனை மதிப்பீட்டாளர்களும்
முதலாளித்துவ கார்ப்பொரேட் நிறுவனங்களும்
அதன் பிரதிநிதிகளுமே ஆவர்.
  
BSNL நிறுவனமும்
தொழிற்சங்கங்களிடம் தகவல் இருட்டடிப்பு வேலையைத்
தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.
பரிந்துரைக்காக இப்படி ஒரு நிறுவனத்தை நியமிக்கப் போவது தொடர்பாக
எந்த சங்கத்திடமும் ஆலோசிக்கவில்லை. அறிவிப்பு கூட இல்லை.
வந்த பரிந்துரையை எந்தச் சங்கத்திற்கும் வழங்கவில்லை,
அதுபற்றி ஆலோசிக்க அழைக்கவில்லை.
ஆனால், நிர்வாக ரீதியாக பொதுமேலாளர்கள் மட்டத்தில்
இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வதற்கு துவங்கி விட்டது.

Monday, July 21

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத, வார விழா கொண்டாடுவதற்கு எதிர்ப்பு!


பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா கொண்டாட உத்தரவிட்ட மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராணுவத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு வழிவகை செய்யப்படும் என்று மத்திய பாரதீய ஜனதா அரசு தெரிவித்து உள்ளது. இந்த செயலால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழக மீனவர்கள் காக்கப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் மோடி உறுதி கூறினார். ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்து உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீனவர்கள் பிரச்சினை தீர கண்டிப்பாக நாம் கச்சத்தீவை மீட்டாக வேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழக பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல. இந்தியாவில் அனைத்து தேசிய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Wednesday, July 16

சென்னை தொலைபேசி மாநிலத்தில் 
280க்கும்  மேற்பட்ட புதிய உறுப்பினர்கள், 
BSNLEU, NFTBE

 ஆகிய சங்கங்களிலிருந்து விலகி,  
NFTE-BSNL  சங்கத்தில் இணைந்துள்ளனர். 

NFTBEன் அனைத்து உறுப்பினர்களும் நமது சங்கத்தில் இணைந்துள்ளது மகிழத்தக்க செய்தியாகும்.


குறிப்பாக தோழர்.வெங்கடேசன் BSNLEU,  (North-West மா.செயலர்)
தோழர்.ராம்பிரபு   மாநிலச்செயலர் NFTBE, 

தோழர்,பஞ்சாச்சரம் மாநிலத்தலைவர் NFTBE

ஆகிய தோழர்கள் தாய் சங்கத்துடன் தங்களை இன்று படிவம் கொடுத்து இணைத்துக் கொண்டனர்.  இணைந்த தோழர்களை தென்சென்னை மாவட்டத்தின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்.

--நாகராஜன்
மாவட்டச் செயலர்

Tuesday, July 15

Welcome to New Members:......

The Circle union very happily announce the arrival of more than 280 members to NFTE-BSNL on 15/07/2014. We gained the new membership mainly from BSNLEU, NFTBE,TEPU and FNTO. Leading comrades of BSNLEU including its North-West district secretary K. Venkatesan have joined NFTE-BSNL due to the undemocratic and castiest activities of BSNLEU. Similarly comrades D.S.Ramprabhu and Panchatcharam of NFTBE left that union to join NFTE-BSNL with more than 51 comrades. It is to be noted that comrade D.S. Ramprabhu is the present circle secretary and Com. Panchatcharam is the present circle president of NFTBE. With this NFTBE in Chennai telephones is almost finished. The Circle union congratulates all the Divisional secretaries and District secretaries for this massive New membership and thank them for achieving the target fixed for 2014. A detailed breakup figures vide District unions will be released in a few days time.

news;chennai web side....

Friday, July 11

வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு......


      பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர், வருமான வரிவிலக்கு தொடர்பாக கூறியதாவது:-

தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பு ரூ.50,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 60 வயதிற்கு குறைவான தனிநபர் ஒருவர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கல்வி வரியில் மாற்றமில்லை. வருமான வரியில் கல்விக்கான வரி முன்பு இருந்த 3% ஆகவே நீடிக்கும்.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சேமிப்புக்கான வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தபட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை விரைவில் நடைமுறைபடுத்த அரசு உறுதிபூண்டுள்ளது; இது குறித்து மாநிங்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும்.

சிறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும்.

31.03.2017 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும். வருமான வரியை செலுத்த ஏதுவாக நாடு முழுவதும் புதிதாக 60 வருமான வரிச் சேவை மையங்கள் அமைக்கப்படும் இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

 

Thursday, July 10

பாரபட்சம்



அனைத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று BSNL ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு ப்ரிபெய்டு சிம்கார்டு தர நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
மாதம் தோறும் முதல் தேதியில் 200 ரூபாய் டாப் அப் செய்யப்படும். இது இலவசமே.
CUG வசதி SSA அளவில் மட்டுமே தரப்ப்படும்.
STD வசதி இல்லை.
மற்ற நிறுவனங்களின் தொலைபேசிகளுக்குப் பேசும் வசதி கிடையாது.
சிம் கார்டுக்கான விலையை ஊழியர்கள் செலுத்த வேண்டும்.
இது வரை ஊழியர்களுக்கு விலையில்லா சிம்கார்டு தரப்பட்டது. தற்போது அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிறது நிர்வாகம்.
மேலும் அதிகாரிகளுக்கு இலவசமாகத் தரப்படும் சிம்கார்டுகளைப் பயன்படுத்த செல்போன் வாங்க ரூபாய் 2000,3000,4000 என பதவிகளுக்கேற்ப நிர்வாகம் தருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்போன் வாங்க நிர்வாகம் பணம் தருகிறது.
ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடையாது.
ஒரு காலத்தில் அனைத்தையுமே விமர்சனம் செய்தவர்கள் இப்படிப்பட்ட பாரபட்சங்களை நிர்வாகம் செய்வதற்கு அவர்களே துணை போனது சரியா?
   NEWS;.. NFTE,ERODE..........

Tuesday, July 8

பாலன் இல்லத் திறப்பு விழா.......

              இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா. உடன், பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகமான 
      பாலன் இல்லத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த அக்கட்சியின் அகில இந்திய 
   செயலாளர் டி.ராஜா. உடன், பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் 
    ஆர்.நல்லகண்ணு, தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
IDA  2.9% உயர்வு
 
01-07-2014 முதல் IDA  2.9% உயர்வு
தற்போது பெறுவது  = 88.4%

உயர்வு             =   2.9%
01-07-2014 முதல்        = 91.3%