வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு......
பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர், வருமான வரிவிலக்கு தொடர்பாக கூறியதாவது:-
தனிநபர் வருமான வரிவிலக்கிற்கான உச்சவரம்பு ரூ.50,000
அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 60 வயதிற்கு குறைவான தனிநபர் ஒருவர்
வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில்
இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கல்வி வரியில் மாற்றமில்லை. வருமான வரியில் கல்விக்கான வரி முன்பு இருந்த 3% ஆகவே நீடிக்கும்.
வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு
அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது. சேமிப்புக்கான வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக
உயர்த்தபட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை விரைவில் நடைமுறைபடுத்த அரசு
உறுதிபூண்டுள்ளது; இது குறித்து மாநிங்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளுக்குத்
தீர்வு காணப்படும்.
சிறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 25 கோடிக்கு மேல்
முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும்.
31.03.2017 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.
வருமான வரியை செலுத்த ஏதுவாக நாடு முழுவதும் புதிதாக 60 வருமான வரிச் சேவை
மையங்கள் அமைக்கப்படும் இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.
No comments:
Post a Comment