GPF பட்டுவாடா
தோழர்களே.. இன்று வரை GPF
வைப்பு நிதி பட்டுவாடா நடைபெறவில்லை.
நிதி ஒதுக்கீடு வந்த பின்னரும் ஊழியர்களின்
வங்கிக்கணக்கில் வரவு வைக்க இயலாத நிலை நிலவுகின்றது.
ERP என்னும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் ஊழியர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்கு பதிலாக உபத்திரவங்களை அளிக்கும் நிலை உருவாகி விட்டது. ERP திட்டம் ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அனுபவங்களின் அடிப்படையில் அங்கெல்லாம் ஏற்பட்ட நடைமுறைச்சிக்கல்கள் இங்கு வராமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை நிர்வாகம் எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் கூடுதல் பிரச்சினைகளைத்தான்
ஊழியர்கள் சந்தித்துள்ளனர்.
உரிய நேரத்தில் பணம் என்பது வராததால்...
இனி என்று வந்தால் என்ன?
என்ற சலிப்பு மனநிலையை ஊழியர்கள் அடைந்துள்ளார்கள்.
பாரம்பரியம் மிக்க தொழிற்சங்கங்கள்
தடம் பதித்த நமது துறையில் சாதாரண ஊழியர்கள் தங்களுடைய சொந்தப்பணத்தை அடைவதற்கு கூட அல்லாடும் நிலை உருவானது கண்டு மனம் வேதனை அடைகின்றது.
வரும் காலங்களிலாவது இது சரிசெய்யப்பட வேண்டும் என்பதே அடிமட்ட ஊழியனின் எதிர்பார்ப்பு.
செய்தி காரைகுடி வலைத்தளம் .....
No comments:
Post a Comment