இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் பறக்கும் படையினரால் ஒட்டு மொத்தமாக ரூ.195 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.195 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆந்திராவில் மட்டும் ரூ.118 கோடி அதிகபட்சமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.18.31 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களில் சட்டத்துக்கு விரோதமாக கொண்டு செல்லப்பட்ட 26.56 லட்சம் லிட்டர் மதுபானம், 70 கிலோ ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக, 11,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment