இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 75 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ராஜ்யசபாவில் அமைச்சர் பபன்சிங் கோடவர் தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.36 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 1,61,800 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால் 75 ஆயிரம் குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது துரதிருஷ்டவசமானதாகும்.
எல்லா காவல் நிலையங்களிலும் குழுக்களை அமைத்து இதுபோன்ற வழக்குளில் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து விசாரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக எலலா மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது என்றார்.
நாடு முழுவதும் குழந்தைதள் காணாமல்போவது அதிகரித்துள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment