WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, March 30

தினம் ஒரு கேள்வி!!

2000 அக்டோபர் முதல் தொலைத் தொடர்பு துறை பொதுத் துறையானதுதான் இன்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் எதிர் கொள்ளும் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் என பிரச்சாரம் செய்கிறார் தோழர் அபிமன்யூ. அது உண்மையானால் அவர் ஏன் 6வது தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்கிறார்? பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர்ந்து மத்திய பொதுத் துறையாக நீடிக்கும் என்பதோடு அது மீண்டும் அரசு துறையாக மாறப் போவதில்லை. நலிவடைந்த நிறுவனத்தில் ஊழியர் பிரச்னைகள் எதையும் அபிமன்யூ தீர்க்கப் போவதில்லை. அப்படியானால் ஊழியர்கள் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? பொதுத் துறை நிறுவனத்தில் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க முடியாத சங்கத்திற்கு வாக்களித்து தங்களின் வாக்குகளை வீணாக்குவானேன்?  நம்முடைய கேள்வி: டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசில் எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறாரா அபி?
                                     நன்றி: சென்னை இணைய தளம்

No comments:

Post a Comment