WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, March 31

 BSNLEU boast to much about NEPP Promotion schemes. The Executives in BSNL availed 5 Promotions at an interval of every 5 years where as the Non-Executive  Employees get only two promotions that to at an interval of 8 long years. Why this discrimination?. Why BSNLEU surrendered arrears on account of NEPP?. Why it agreed for denial of reservation in NEPP scheme for SC/ST Employees?. Why it has agreed  for belated discrimination between pre and post 01/10/2000 recruities in the case of NEPP promotion?

தினம் ஒரு கேள்வி - இரண்டு

புதிய பதவி உயர்வு திட்டம் குறித்து பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் மிகப் பெரும் சாதனையாக சொல்லிக் கொள்கிறது. பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவி பெறுகிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கோ 8 ஆண்டு இடைவெளி என்பதால் இரண்டு பதவி உயர்வுகள் மட்டுமே பெறுகிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்? பதவி உயர்வு காரணமாக பெறவேண்டிய ஊதிய நிலுவையை  பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சரண்டர் செய்தது ஏன்? பதவி உயர்வில் நியாயமாக எஸ்.சி / எஸ்.டி ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டினை நிர்வாகம் மறுத்ததை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஏன் ஏற்றுக் கொண்டது? பதவி உயர்வுக்கான சேவையில் 2000 க்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் 2000 க்குப் பின் வேலையில் சேர்ந்தவர்கள் என வேறுபாடு காட்டுவதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஒப்புக் கொண்டது ஏன்?
                                     நன்றி: சென்னை இணைய தளம்.

Saturday, March 30

தினம் ஒரு கேள்வி!!

2000 அக்டோபர் முதல் தொலைத் தொடர்பு துறை பொதுத் துறையானதுதான் இன்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் எதிர் கொள்ளும் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் என பிரச்சாரம் செய்கிறார் தோழர் அபிமன்யூ. அது உண்மையானால் அவர் ஏன் 6வது தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்கிறார்? பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர்ந்து மத்திய பொதுத் துறையாக நீடிக்கும் என்பதோடு அது மீண்டும் அரசு துறையாக மாறப் போவதில்லை. நலிவடைந்த நிறுவனத்தில் ஊழியர் பிரச்னைகள் எதையும் அபிமன்யூ தீர்க்கப் போவதில்லை. அப்படியானால் ஊழியர்கள் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? பொதுத் துறை நிறுவனத்தில் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க முடியாத சங்கத்திற்கு வாக்களித்து தங்களின் வாக்குகளை வீணாக்குவானேன்?  நம்முடைய கேள்வி: டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசில் எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறாரா அபி?
                                     நன்றி: சென்னை இணைய தளம்

Thursday, March 28

ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு புகார் : நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!!


நோக்கியா செல்போன் நிறுவனம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, வருமானவரித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையை நடத்திவருகிறது. அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, வருமானவரித்துறையினர் கடந்த ஜனவரி மாதம் நோக்கியா நிறுவன அலுவலகங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். செல்போன் விலைகளை குறைத்துகாட்டி, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முழுதையும் விரைவில் செலுத்துமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 . இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக சுமார் மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Wednesday, March 27

    மகத்தான வெற்றியை நோக்கி NFTE….
   6வது தேர்தல் பிரச்சாரம் பிப்ரவரி மாதம் தொடங்கிய போது நாம் 40% வோட்டுகள் வாங்கி முதல் இடத்திற்கு வந்து விடுவோம் என்று உறுதியாக நம்பினோம். ஏனென்றால், 2004-ல் இருந்து அங்கீகாரத்தில் இருந்த BSNLEU சங்கம் உருப்படியாக எந்த சாதனையும் செய்யவில்லை என்பதே காரணம். ஆனால் நம்முடைய இந்த ஒரு மாத தேர்தல் சுற்றுபயணத்திற்கு பிறகு நாம் உறுதியாக 51% மேல் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நாடெங்கும் BSNLEU-க்கு எதிரான அலை வீசுகிறது
ஆறாவது அங்கீகார தேர்தலில் வாக்களிக்க இருப்போர் சுமார் 2,04,000 பேர். நாம் உறுதியாக  இந்தியா முழுவதும் பெருவாரியான 1,05,000 வோட்டுகள் வாங்கி முதன்மை சங்கமாக ஆகுவது உறுதி. நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடந்த

ஐந்து சரிபார்ப்பு தேர்தல்களிலும் நாம் 35% வோட்டுகள் குறையாமல் வைத்திருந்தோம். அதுவும் கடந்த 8 வருடமாக BSNLEU- சங்கம் ஒன்பது சங்கங்களின் கூட்டணியோடு பணபலம், ஆள்பலம் மற்றும் அதிகார பலம் இவை எல்லாம் வைத்திருந்தும் அவர்களால் 46% வோட்டுகள் மட்டுமே வாங்க முடிந்தது. குறிப்பாக கடந்த தேர்தலில்கூட அது பெரும்பான்மை வோட்டுகள் பெற முடியவில்லை. ஆதலால் இந்த தேர்தலில் அது 30% வோட்டுகள் வாங்குவதே கடினம்,. BSNLEU- சங்க உறுப்பினர்களே கடந்த மூன்றாடுகளாக போனஸ் இல்லாதது, LTC CUT, 10 நாள் விடுப்பினை காசாக்குதல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெறுகின்ற மருத்துவ அலவன்ஸ் பறிபோனது ஆகியவற்றால் விரக்தியின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

78.2% கிராக்கிப்படி இணைப்பு 01/01/2007-ல் இருந்து பெறாததால் சுமார் 6000 கோடி ரூபாய் தொழிலாளி இழந்துள்ளான். அதுமட்டுமல்லாமல் NEPP-ல் SC/ST ஊழியர் பதவி உயர்வில் ஒதுக்கீடு என்பதை BSNLEU சரண்டர் செய்துவிட்டதால் SC/ST ஊழியர் கடும் அதிருப்தியில் உள்ளனர். TTA தோழர்களுக்கு கடந்த 8எட்டு வருடங்களாக 30% FITMENT, PENSION BENEFIT ஆகியவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதால் SNATTA இந்த முறை NFTE-BSNL –உடன் கூட்டணி வைத்துள்ளது.

மொத்தம் 35 மாநிலங்களில்  6 மாநிலங்கள் பெரிதானவை. அவை தமிழ்நாடு,ஆந்திரா,குஜராத், கர்னாடகா, கேரளா, மஹாராஷ்டிரா ஆகும்.  இதில் கேரளாவைத் (ஒருவேளை)  தவிர மற்ற மாநிலங்களில் நாம் வெற்றி பெறுவது உறுதி ஆகிவிட்டது. கடந்த 8 வருடங்களாக எதுவும் தொழிலாளிக்கு உருப்படியாக செய்யாத BSNLEU சங்கம் தனது தவறுக்கு NFTE-BSNL –ஐ நோக்கி கைகாட்டுவதை பார்த்து தொழிலாளி கைகொட்டி சிரிக்கிறான், அதுமட்டுமலாமல் அபிமன்யு கார்ப்பரேஷ்ன் ஆனதுதான் இதற்கு காரணம் என்று கூறுவது பேதமை. கடந்த 13 ஆண்டுகளாக ITS OFFICERS கார்ப்பரேஷன் வேண்டாம் என்று இதுவரை வெளியே இருக்கவில்லையா? அதுபோல் இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தது? BSNL நிர்வாகத்தில் எதாவது நல்லது நடந்தால் அதற்கு BSNLEU காரணம் என்றும் தவறு எதேனும் நடந்தால் 8 வருடமாக அங்கீகாரத்தில் இல்லாத NFTE-BSNL தான் காரணம் என்று கூறுவதையும் தொழிலாளி நன்கு கவனித்து கொண்டுதான் இருக்கிறான். DMK சங்கத்துடன் கூட்டணி வைப்பதற்காக அதன் மந்திரிகள் தயாநிதி மற்றும் ராசா செய்த ஊழலை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள்தானே இவர்கள். ஆதலால் வரும் 6வது சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU மண்ணை கவ்வப் போவது நிச்சயம். 18/04/2013 வோட்டுகள் எண்ணி முடிக்கும்போது NFTE-BSNL முதன்மை சங்கமாக வந்திருப்பது நிச்சயம்.

சி.கே.மதிவாணன், மாநிலச் செயலர், சென்னை தொலைபேசி.

Monday, March 25


வெற்றியின் அடுத்த மைல் கல் !!

மேற்கு வங்கத்திலும் கொல்கொத்தாவிலும் புதியதாக துவங்கப்பட்டுள்ள TEU BSNL சங்கம், BSNLEUவிற்கு சவால்விடக்கூடிய வலுவான சங்கமான Telecom Employees Union (BSNL), NFTEக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.


Friday, March 22

Election special Sangamuzhakkam !!

 A colorful 20 page Election special issue of Sangamuzhakkam journal will be distributed to all the employees before 31/03/2013. Apart from Com C.K.Mathivanan many senior comrades such as Mali(Erode), Jayaraman(Cuddalore) and Subbarayan(Coimbatore) have written articles explaining the need for electing NFTE_BSNL and exposing the betrayal of BSNLEU.



Thursday, March 21

 Tepu is almost finished in Karnataka and employees have joined NFTE.                                                                          CHQ........

Saturday, March 16


Election Campaign in Tamil Nadu: 
           
        Com. C.K.Mathivanan, Dy GS NFTE_BSNL will addressElection meeting at the following places in Tamil Nadu Circle.

26/03/2013…..Cuddlore      SSA
02/04/2013…. Erode            SSA
03/04/2013…..Coimbatore  SSA
11/04/2013… Trichy             SSA
12/03/2013… Thirunelveli   SSA(After Noon)
                    Tuticorin          SSA(Evening)  

எட்டு ஆண்டு அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் ! 

ஒவ்வொரு ஊழியரையும் அணுகுவோம் ! 

ஊழியர்கள்  நமக்கு வாக்களிக்க தயராகி விட்டனர் !! 

நமது வேலையெல்லாம் அவர்களை அணுகி  உறுதி செய்வது தான் ! அந்தப் பணியை உறுதியுடன் செய்யுமாறு அகில இந்திய தலைமை அறை கூவல் விடுத்து உள்ளது...... 

களம் இறங்குவோம் !!   வெற்றிகனி பறிப்போம் !!  



Thursday, March 14


  Com. C.K.Mathivanan will address four election meeting at Bengaluru SSA along with Com G.Jayaraman, secretary (CHQ) on 21&22/03/2013.

        SEWA-BSNL officially has not announced its decision to support any trade union in the forthcoming 6th Membership verification. However BSNLEU  is making false propaganda throughout the country.


Monday, March 11

தோழர்C.K. மதிக்கு நன்றி !!!


இரண்டாவது அங்கீகாரத்தில் நாம் வெற்றி வாய்ப்பை தவற விட்டபோதும்,
தொடந்து கோர்ட்டுகள், போராட்டங்கள், AITUC தலைமை மூலம் என அனைத்து விதமான
வழிகளிலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி இறுதி வெற்றி என

புதிய அங்கீகாரவிதி பெற்று தந்த தோழர்C.K. மதிக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியா
முழுதும் பணியாற்றும் NFTE தோழர்கள்  என்றும்
கடமை பட்டுள்ளதை நன்றியுடன் நினைவு கூர்வோம் !!

Sunday, March 10

தமிழக NFTE (BSNL) முதன்மைச் சங்கமாக பரிணமிக்க!!


.

தமிழகத்தில் நமது NFTE (BSNL) பேரியக்கம் வெற்றி பெற்று முதன்மைச் சங்கமாகப் பரிணமிக்க!!                

தலைவர்களின் சுற்றுப்பயணத் திட்டம்!!


மாவட்டம்              நிர்வாகிகள்

கோவை =    ஜெயராமன், சுப்பராயன், பரிமளம்,                           அசோக்ராஜன்     

கடலூர்  =   அசோக்ராஜன், சுப்பராயன்

ஈரோடு  =  ஜெயராமன், அன்பழகன், பரிமளம்

காரைக்குடி=    சுப்பராயன், அன்பழகன்

நாகர்கோவில் =  சண்முகம், அன்பழகன்

தூத்துக்குடி =   பரிமளம், அசோக்ராஜன்

விருதுநகர் =   செல்வசுப்ரமணியன்

நெல்லை =    ஜெயராமன்.

தஞ்சை  =    ஜெயராமன், சுந்தரம், சுப்பராயன்

திருச்சி  =   சுந்தரம், சுப்பராயன், பரிமளம், ஜெயராமன்

வேலூர்  =   சுப்பராயன், ஜெயராமன்

மதுரை   =   பாபநாசம், ஜெயராமன்

கும்பகோணம் =      சுப்பராயன், ஜெயராமன்
                                               
     வாக்களிப்பீர் ! வெற்றி பெறச் செய்வீர் !!

Withdrawal of facilities extended to BSNLEU!!


Circle union has pressed upon the Chennai telephones management to withdraw all the facilities extended to BSNLEU on its recognition since the period of its recognition is already over on 13/02/2013. Our circle union has written a letter  to Mr. Ganesan, DGM(HR&ADMN) who is also the Returning officer for Chennai telephones circle requesting him to ensure level playing field to all the 18 applicant unions upto the  election date on 16/04/2013. We hope the Returning officer will stop the BSNLEU using the union office, Land Line and Fax Line illegally even after corporate office very clearly instructed the circle management to withdraw all the facilities extended to BSNLEU with effect from 14/02/2013.

Thursday, March 7

வெனிசூலா அதிபர் சாவேஸ் மறைவு!!


             
 இருபத்தோராம் நூற்றாண்டில் புரட்சி என்கிற சொல்லை புதிய கோணத்தில் மறு அறிமுகம் செய்து வைத்தவர் வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ். 1954ல் பிறந்து சாவேஸ் 1975ல் மிலிட்டரி அகாடெமியில் பட்டம் பெற்றார். கொரில்லா தாக்குதல் இல்லை... ராணுவத்தை வைத்து கலகம் செய்யவில்லை... ஒரு குண்டு கூட வெடிக்காமல், கத்தியின்றி ரத்தமின்றி முறைப்படி தேர்தலில் நின்று, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர் சாவேஸ். மக்களின் மனம் கவர்ந்தவர் இந்த புரட்சி நாயகன். வெனிசூலாவில் சாவேஸ் நிகழ்த்திக் காட்டியஅமைதிப்புரட்சி, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. எனவேதான் காஸ்ட்ரோவுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் புரட்சியாளராகவே கருதப்படுகிறார். 

75 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை:! அமைச்சர் தகவல்!!


இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 75 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ராஜ்யசபாவில் அமைச்சர் பபன்சிங் கோடவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.36 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 1,61,800 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால் 75 ஆயிரம் குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது துரதிருஷ்டவசமானதாகும். 

எல்லா காவல் நிலையங்களிலும் குழுக்களை அமைத்து இதுபோன்ற வழக்குளில் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து விசாரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக  எலலா மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது என்றார்.

நாடு முழுவதும் குழந்தைதள் காணாமல்போவது அதிகரித்துள்ளது      என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லாபம் இல்லை ! போனஸ் இல்லை !! BSNLEU உடன்பாடு !!!

 DPE 2011-12 க்கான பொதுத் துறை கிரேடிங்கை வெளியிட்டுள்ளது BSNL தனது சுய செயல்பாடு பரிசீலனையின்படி (  self evaluation ) Excellent grading பெற்றுள்ளது. ஆனாலும் போனஸ் கிடையாது. ஏனெனில் BSNLEU  ஏற்றுக்கொண்ட போனஸ் திட்டப்படி லாபம் இல்லை என்றால் போனஸ் கிடையாது