அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுத்ததற்கு நன்றிக் கடனாக அவருக்கு இந்தப் பதவி தரப்படும் என்று தெரிகிறது.
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது அந் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருந்த நிருபமா, இலங்கைக்கு இந்தியா வேண்டிய உதவிகளைச் செய்ய உதவினார். மேலும் வட இந்திய மீடியாக்களை இலங்கைக்கு வரவழைத்து போர் தொடர்பான செய்திகளில் இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்கும் அதிக பாதிப்பு வராமலும் பார்த்துக் கொண்டார்.
இந் நிலையில் இவரது பதவிக் கலாம் வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருக்கும் மீரா சங்கருக்கு பதிலாக நிருபமா ராவ் அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment