மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் !!
புதுதில்லி, ஜுன் 22 மக்களவை சபாநாயகர் மீராகுமார் தலைமையில் இன்று (ஜுன் 22) மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இருப்பினும் சமாஜ்வாடி, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. கூட்டம் மீண்டும் வேறு ஒரு நாளில் நடைபெறும் என தெரிவித்த சபாநாயகர் மீராகுமார், பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் மாற்றம் கொண்டு வரப்படும் எனவும், அது குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment