WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, November 30

உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியீடு!!!

உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா. இவர் பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

இந்நிலையில், 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை Ôகுலைல்Õ என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டு ள்ளது. அந்த பெண்ணின் பெயர் மாதுரி என்று கூறியுள்ள குலைல், அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்.

இளம்பெண்  மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மலைத் தோட்ட திட்டம் தொடர்பாக,  நான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.

அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Friday, November 29


"தருமம் மறுபடியும் வெல்லும்"

தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும் என்று பாஞ்சாலி சபதத்தில்  எடுத்துரைத்தான்  புரட்சிக் கவி பாரதி.

  அதுதான் உண்மை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

    பணி ஓய்வு பெற்ற CGM வேலுசாமி, அலுவலகத்திற்கு கள்ளத்தனமாக
வந்து ரகசியமாக சன் டீவிக்கு  323 ISDN இணைப்பு வழங்கிய தயாநிதி மாறனுக்கு எதிரான ஆவணங்களை அழிப்பதாக செய்தி வந்ததையடுத்து, அதை  தடுத்து நிறுத்த போராடிய தோழர் மதிவாணன் அவர்களுக்கு கடும்
மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாடகம அரங்கேறியது.

  அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களின் விடாமுயற்சி காரணமாகவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு நல்ல உள்ளங்களின்  நல்லாதரவு காரணமாகவும்
அவர் மீது மேற்கொண்ட விசாரணை அறிக்கை மீது எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளத் தேவையில்லை என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இனி தோழர் மதிவாணன் ஓய்வூதிய பலன்களைப் பெற தடையேதுமில்லை.

விசாரணையின் போது defence Assistant என்ற அடிப்படையில்  தனது
நீண்ட அனுபவ முத்திரையை பதித்த தோழர் மாலி அவர்களின்
செயல் பாராட்டத்தக்கது.

தண்டனையைக் கண்டு அஞ்சாமல் செயலாற்றிய தோழர் மதிவாணன் அவர்களின் செயல் நாமெல்லாம் பின்பற்றத்தக்கது. சிறிய பிரச்னை என்றாலும் பெரும்பாலானோர் கலங்கிப் போய் அங்கும் இங்கும் பிரச்னையை கொண்டு செல்வார்கள்.

ஆனால், தோழர் மதி அவர்களோ, M.P அந்தஸ்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் பிரச்னையை நான் பேசட்டுமா என்று கேட்டபோது,
" வேண்டாம், எனது சங்கத் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று கௌரவமாக கூறியது மெச்சத் தகுந்தது.

 ஊழல், ஏமாற்றுவேலை, அநீதி போன்றவை எங்கு நடந்தாலும், யார் செய்தாலும் எதிர்வினையைப்பற்றி அஞ்சாமல் வானமே எல்லையாகக் கருதி செயலாற்றும் தோழர் மதிவாணன் அவர்களின் மகுடத்தில் வைத்த வைரமாக அமைந்து விட்டது அவரது இந்த செயல்பாடு.

  கோவை இணையதளத்திலிருந்து . . .......

Wednesday, November 27

End of an harassment!
  At last the harassment finally is over. The CGM, Chennai telephones finally closed the disciplinary proceedings against comrade C.K. Mathivanan and the letter communicating the displeasure of CMD was received by him on 25/11/2013.   We Hope the necessary vigilance clearance will be issued without any further delay so that Com. C.K.Mathivanan could get his retirement benefit atleast by the end of this year. However, We extend our sincere thanks to our National president Com. Isalm Ahamad who consistently took up the case of victimization with the coporate office and helped to solve this case without any punishment or monetary loss. We also thank Com. S. Mahalingam, former CS, Tamil Nadu who acted as Defence Assistant in the disciplinary case and helped Com. C.K. Mathivanan by his intelligent questions during the enquiry. In the last we congratulate all those comrades who stood like rock behind Com. C.K.Mathivanan during this difficult period and expressed sympathies, affection to him. We proved once again that any number of false cases cannot shake the leaders of NFTE.  We will continue to fight  against corruption, high handedness and discrimination without fear. We will also serve the working people with renewed energy and commitment.

Circle union, NFTE_BSNL Chennai telephones.


Dated:26/11/2013

Saturday, November 23

AITUC இயக்கத்தின் தலைவர் தோழர் SST.......




தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள்(23-11-13) இன்று மாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர்களின்  மறைவிற்க்கு  செங்கொடி... தாழ்த்தி..
அஞ்சலி... செலுத்துகின்றோம்...


சாதித்து காட்டியது NFTE-BSNL
நமது நிர்வாகம் ஒருவழியாக போனஸ் பற்றி முடிவெடுக்க கமிட்டி ஒன்றை நியமித்து உள்ளது. அதில் நமது அகில இந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது ஊழியர் தரப்பு தலைவர் என்ற முறையில் இடம்பெற்றுள்ளார். நம்முடைய விடா முயற்சியால் மட்டுமே நிர்வாகம் நான்கு வருடங்களாக போனஸ் கொடுக்கமுடியாது என்ற பார்முலாவை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து அதனை பற்றி முடிவெடுக்க கமிட்டி அமைத்துள்ளது. ஊழியருக்கு போனஸ் கிடைக்காத்தற்கு காரணமான தவறான பார்முலாவை ஒத்துக்கொண்ட்து  BSNLEU. BSNLEUதான் அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை இதனை ஏற்றுகொண்ட்து என்பது அனைவரும் அறிந்ததே. நிர்வாகத்தை இந்த பார்முலாவை மாற்ற வேண்டும் என்று நிர்பந்திக்க தவறியது என்பதை ஊழியர்கள் அனைவரும் அறிவர். இப்போது NFTE-BSNL
அங்கீகாரம் பெற்ற சங்கமாக உள்ளதால் அது நிர்வாகத்தை இது குறித்து நிர்பந்திக்க முடியும். போனஸ் லாபம் வந்தாலும் வராவிட்டாலும் தரப்படவேண்டும் என நிர்பந்திக்க முடியும்.  கமிட்டி அமைக்கப்பட்ட்து நமது சாதனை என்று மார்தட்டி சொல்ல முடியும்.
ஆனால், சில BSNLEU தலைவர்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தாங்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறத் துவங்கிவிட்டனர். இது முழுவதுமாக தவறான மற்றும் கேவலமான செயல். இது இவர்களால் முடிந்தது என்று சொன்னால், இத்தனை நாளாக அங்கீகாரம் பெற்ற சங்கமாக இருந்தபோதே இதை செய்திருக்க வேண்டியதுதானே என்று சாதாரண தொழிலாளி கேட்கிறான். நான்கு வருடமாக எதுவும் செய்ய இயலவில்லையே? அனைவரும் நன்கு அறிவர் 78.2 கிராக்கி இணைப்பைNFTE-BSNL சேர்ந்து போராடியால்தானே பெறமுடிந்த்து! அதே போல இப்போது NFTE-BSNL இந்த தவறான போனஸ் ஒப்பந்தத்தை மாற்றியே தீரும் என உறுதி கூறுகிறோம்.

சி.கே.மதிவாணன், அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர்,

Friday, November 22






NFTE(BSNL)
    தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு 20-11-13 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

பல்வேறு ஊழியர் பிரச்னைகள், அமைப்பு பிரச்னைகள் முழுமையாக விவாதிக்கப்பட்டு மனநிறைவுடன்  முடிந்துள்ளது.

GPF..........?????????


நமது மத்திய சங்க தொடர் முயற்சியால் ...மாநிலங்களுக்கான  GPF நிதி ஒதுக்கீடு  , விஜய கார்த்திகை 9 ,மொஹரம் 21 நல்ல நேரம் காலை 6.15 -7.15 மாலை 3.00- 4.00,ராகு 7.30 -9 ,குளி 1.30-3,எம 10.30 - 3 சூலம் -கிழக்கு   , சிறிய நகசு  கூடிய ... வரும் நவம்பர் 25 -11.2013 திங்கள் அன்று ஒதுக்கப்படும் என நிதி துறை இயக்குனர் (DIRECTOR  FINANCE ) தெரிவித்துள்ளார்                                                                    செய்தி ;குடந்தை வலைத்தளம்.......

Thursday, November 21

60th Federation Day !!!        
  NFPTE was formed as per the scheme evolved by than Communication minister Hon'ble Jagjeevan Ram on 24/11/1954 to unify the postal worker and trade unions. On 24th November-2013, We celebrate the Federation day to remember the sacrifices and achievements of NFPTE.

Tuesday, November 19

    TMTCLU -கடலூர் மாவட்ட சங்கம்
             கருப்பு சின்னம் அணியும் போராட்டம்

                         20 -தேதி ஆகியும் இதுவரை சம்பள
பட்டுவடாவில் பிரச்சனை மாவட்டம் முழுதும்
நீலவி வருகிறது . மாதமாதம் இதனை
கடைபிடிக்கும் ஒப்பந்ததாரர்-ஐ  எதிர்த்தும்
கண்டுகொள்ளாத நிர்வாகத்தைஎதிர்த்தும்
இன்று முதல் கருப்பு சின்னம் அணியும்
போராட்டம் ..,