WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Sunday, May 11
Friday, May 9
WRONG RULING BY TDSAT:
We are shocked to note recent wrong ruling by TDSAT( Telecom Dispute Settlement Apelate Tribunal) on the issue of sharing of 3G spectrum by some private telecom companies out of their licence areas.தவறான சட்ட விளக்கம் !
சமீபத்தில் தொலைத் தொடர்பு மேல் முறையீட்டு ஆணையம் 3G லைசன்ஸ் பயன்பாடு பற்றி கொடுத்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
ராசா அமைச்சராக இருந்தபோது 3G ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. அப்போது அகில இந்திய அளவிலான 3G லைசன்ஸை BSNLக்கு முன்னுரிமையாக தருகிறோம் என்ற ஹோதாவில் BSNL வைத்திருந்த
சுமார் 14,000 கோடி ரூபாயை அரசு தன்வயப்படுத்திக் கொண்டது.
3G வேண்டும் என்று மக்கள் கேட்காத மணிப்பூர், மிசோரம் போன்ற
வனாந்திர பகுதிகளுக்கான லைசன்ஸைக்கூட BSNL வாங்க வேண்டும் நிர்பந்திக்கப்பட்டது.அதுதான் BSNLன் நிதி நிலைமை மோசமாவதற்கான துவக்கமாக அமைந்தது.
ஆனால் தனியார் கம்பெனிகள் தங்களுக்கு வேண்டிய, மக்கள்
3G சேவையை கோரும் பகுதிக்கு மட்டும் லைசன்ஸ் பெற அனுமதிக் கப்பட்டனர். இந்த சலுகை காரணமாக தனியார் கம்பெனிகள் தங்களுக்கு வேண்டிய பகுதிகளுக்கு மட்டும் லைசன்ஸ் பெற்றனர்.அதன் காரனமாக அவர்களுக்கு முதலீடு குறைவு. அந்த முதலீடும் அரசு வங்கிகளிடமிருந்து கடனாக பெறப்பட்டன.
இதன் பிறகு ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலர் போன்ற அந்த தனியார் கம்பெனிகள் தங்களுக்குள் ரகசியமாக ஒரு உடன்பாட்டை உருவாக்கி கள்ளத்தனமாக இந்தியா முழுவதும் தொடர்பு ஏற்படுத்தும் இணைப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டன.
தொலைத்தொடர்புத் துறை இந்த ரகசிய உறவை கண்டுபிடித்து, அதை செய்யக் கூடாது என்று தடையாணை பிறப்பித்தது. மேலும் லைசன்ஸ் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி அதற்கு தண்டணையாக ரூ.12,000/- கோடியை கட்ட வேண்டும் என்று உத்திரவிட்டது.
அந்த தனியார் கம்பெனிகள் இந்த உத்திரவை ஏற்காமல் டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. டெல்லி உயர்நீதி மன்றம் DOTன் முடிவை ஆமோதித்தது.
அதை ஏற்காத அந்த தனியார் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
சுப்ரீம் கோர்ட் இந்த முறையீட்டை, சட்டப்படி தொலைத்தொடர்பு மேல் முறையீட்டு ஆணையம் தான் விசாரிக்க வேண்டும் என்று அந்த அமைப்பிற்கு திருப்பியது.
தற்போது TDSAT என்றழைக்கப்படும் அந்த அமைப்பு, DOTன் உத்திரவை ரத்து செய்துள்ளதோடு தண்டனை கட்டணம் ரூ.12,000 கோடி கட்ட வேண்டும் என்பதை ரத்து செய்துள்ளது.
. இந்த தீர்ப்பின் மூலம் நீதி வழிதவறிப்போக வேறு சில புற காரணங்கள் உள்ளதாக நாம் சந்தேகிக்கிறோம். இந்தியா முழுமையும் 3G சேவை வழங்க BSNL மிக அதிகமான லைசன்ஸ்
கட்டணம் கட்ட வேண்டும் என்று கறாராக பல ஆயிரம் கோடிகளை வசூலித்து விட்டு,
அதே சமயம் மற்ற தனியார் கம்பெனிகள் மட்டும் தாங்கள் பெற்ற லைசன்ஸ் ஏரியாவை விடுத்து அனைத்து பகுதிகளுக்கு அந்த சேவையை தரலாம் என்று தீர்ப்பு தருவது எப்படி நியாயமாக இருக்க முடியும் ?
நமது நாட்டில் இரு சக்கர வாகனம் ஓட்ட லைசன்ஸ் பெற்றவரை, பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை ஒட்ட னுமதிப்பதில்லை.அதுபோல லைசன்ஸ் பெறாத பகுதிகளில் மற்ற தனியார் கம்பெனிகளை 3G சேவை தர அனுமதிப்பது நியாயமன்று. இந்த முறையற்ற தீர்ப்பை பெற, திரைக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை யாரறிவார் ? துரதிர்ஷ்டவசமாக நமது தொழிற்சங்க தலைமைகள் இது பற்றி அமைதி காக்கின்றன.
தொழிற்சங்க தலைமைகள் விழித்து எழுந்து, BSNL ஐ பாதிக்கும் இந்த அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டும்.
இந்த அநியாயமான தீர்ப்பை எதிர்த்து DOTயும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும் என்று நம்புகிறோம். BSNL நிர்வாகம் அந்த மேல் முறையீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக் கூற வேண்டும். தேவையென்றால் தனியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலை நாட்டவேண்டும்
C.K.மதிவாணன்
துணைப் பொதுச் செயலர்
NFTE-BSNL
Thursday, May 8
Wednesday, May 7
400 நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத வாராக் கடன் ரூ.70 ஆயிரம் கோடி!!!!
24 பொதுத் துறை நிறுவனங்களில் வாராக் கடன் தொகை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.2.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு வாராக் கடனை திரும்பச் செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியல் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இ.அருணாசலம் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
வங்கித் துறைக்கு தற்போது சோதனைக்காலம் என்றே கூறலாம். நமது நாட்டில் வாராக் கடன் வைத்திருப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் இது தொடர்பாக அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முன்வராதது வேதனைக்குரியது.
வருமான வரி செலுத்தாதவர்கள் பட்டியலை அரசு வெளியிடுவதைப் போலவே வாராக்கடன் பட்டியலையும் உடனுக்குடன் வெளியிட வேண்டும்.
இது குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், வாராக் கடன் வைத்திருப்போர் பட்டியலை அரசு வெளியிட்டால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாறு வெளியிடாவிட்டால் மக்களின் வங்கி சேமிப்பு, வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதை அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் மக்களின் பணம் சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் வைப்புத்தொகையாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பிரபலமான தொழிலதிபர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் நீண்ட காலமாகியும் செலுத்தப்படவில்லை. வங்கிகளில் வைப்புத் தொகை உள்ளிட்ட முதலீடுகளைச் செய்துள்ள மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பொறுப்பு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு உள்ளது.
எனவேதான் இதனைக் கண்டித்து கடந்த ஆண்டு (2013) டிசம்பர் 5-ஆம் தேதி வாராக்கடன் செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் அதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலின்போது வாராக் கடனை வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால் அங்கும் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு சுமார் ரூ.70,300 கோடி வாராக் கடனை செலுத்த வேண்டிய 406 நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர் பட்டியலை வெளியிடுகிறோம்.
இந்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினரும், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபருமான விஜய்மல்லையாவின் பெயர் உள்ளது. அவர் சுமார் 7 ஆயிரம் கோடிக்கு மேல் வாராக்கடனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆடம்பரமாக செல்வது உள்ளிட்ட கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கும் அரசிடமிருந்து வழக்கம்போல் எந்தப் பதிலும் வராவிட்டால் அடுத்தடுத்த மாதங்களில் முறையே 3,250, 7,000 பெயர்கள் கொண்ட பட்டியல்களை வெளியிடுவோம்.
ஒருபுறம் வாராக்கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல வாராக்கடன் பெற்றவர்களுக்கு புனரமைப்பு என்ற பெயரில் திரும்பச் செலுத்தக் கூடிய கடனுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் பலரின் கடன்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடைசி 10 மாதங்களில் ரூ.2,40,000 ஆயிரம் கோடி வாராக்கடனை அரசு ரத்து செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் பெரும் பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுத்து விடும். இதைத் தடுக்க வங்கிகளிடம் பெற்ற வாராக் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.
வாராக் கடனை திரும்ப வசூலிக்க அரசும் ரிசர்வ் வங்கியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். "மக்கள் பணம் மக்களின் மேம்பாட்டுக்கே' என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வரை எங்கள் சங்கங்கள் சார்பில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து புது தில்லியில் உள்ள "டெக்னோ மேக்' என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதனைக் கண்டித்து புது தில்லியில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.
Tuesday, May 6
இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடொ பரேட்டோ (Vilfredo Pareto) 1906 ம்
ஆண்டு கவனித்த ஒரு விஷயம், இத்தாலி நாட்டில் 80% நிலத்தை நிர்வகித்து
வந்தது 20% மக்கள் தொகையே. தான் கவனித்த அந்த விஷயத்தை பல நாடுகளிலும்
சர்வே செய்தபோது கிடைத்த ஆச்சரியமான உண்மை எல்லா நாடுகளிலும் இதே சதவிகிதம்
ஒத்து காணப்பட்டதே.
இந்த விதி பொதுவாக எல்லா இடத்திலும் பொருந்தக்கூடியது. 80 சதவீத மக்கள் 20
சதவீத மக்களுக்காக வேலை செய்கிறார்கள், உலகின் 20 சதவீத பணக்காரர்கள் 80
சதவீத செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேட்டோ விதி நமது அன்றாட
வாழ்க்கையிலும் பெரும்பாலான இடங்களில் பொருந்தினாலும் யாரும் அதைப்பற்றி
சிந்திப்பதில்லை மேலும் அதை உணர்வதும் இல்லை.
'இலங்கை ராணுவம், தமிழர்களை விரட்டி பிடித்து 'என்கவுன்டர்' செய்து
வருவதால், இனி அங்கு வாழ முடியாது' என, தனுஷ்கோடிக்கு தப்பி வந்த அகதிகள்
கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம், முல்லைதீவை சேர்ந்த தயாபரராஜ், 34, மனைவி உதயகலா, 32, மகன் டியோரோன், 9, மகள்கள் டிலானி, 6, டில்சியா, 2, மற்றும் தவேந்திரன், 35, ஒரு படகிலும், கணேஷ் சுதாகர், 33, மனைவி ராமக்கா, 30, மகள் நிலக்சனா, 12,
மகன் விதுரன், 5, ஆகியோர் மற்றொரு படகில் ஏறி, தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர்.
இதுகுறித்து உதயகலா கூறியதாவது: போர் நிறுத்தத்திற்கு பின், முல்லைதீவு ராணுவ முகாமில் எங்களை அடைத்தனர். நீண்டநாள் கழித்து விடுவித்தனர். வேலை தேடி பல ஊர்களுக்கு சென்றோம். இறுதியாக கண்டியில் தங்கினோம். அங்கும் இலங்கை ராணுவத்தினர், எங்களை இருக்க விடவில்லை.விடுதலைபுலிகள் போர்வையில் தமிழர்கள் ஊடுருவி இருப்பதாக கூறிய ராணுவத்தினர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்களை தேடி பிடித்து கொலை செய்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், ஆயிரத்துக்கும் மேலான தமிழர்களை கைது செய்து வெலிக்கடை சிறையில் அடைத்துள்ளனர்.கடந்த 1985ல், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் போன்று, தற்போது ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலரை காணவில்லை. இனி தமிழர்கள், அங்கு வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் படிப்பிற்காக, இலங்கை ராணுவத்திற்கு தெரியாமல், அகதியாக
தமிழகத்திற்கு வந்துள்ளோம். இந்திய அரசு, எங்களை சிறையில் அடைக்காமல், முகாமில் தங்க வைக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கூறினார்.
தவேந்திரன் கூறியதாவது: இலங்கையில் நடந்த மாகாண தேர்தலுக்கு பின், ராணுவம், உளவுத்துறை இணைந்து நிம்மதியாக வாழும் தமிழர்களை விரட்டி பிடித்து 'என்கவுன்டர்' செய்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள், இளம்பெண்கள் வீடுகளில் தங்க முடியாமல்,
காடுகளில் தலைமறைவாக வாழ்கின்றனர். என் உயிரை காப்பாற்ற, மனைவி குழந்தையை வவுனியாவில் விட்டுவிட்டு, தமிழகம் வந்துள்ளேன். இலங்கை அரசின் கெடுபிடிக்கு பயந்து, 5000 தமிழர்கள் அகதிகளாக, தமிழகத்திற்கு வர காத்திருக்கின்றனர், என, வேதனையுடன் தெரிவித்தார்.
இலங்கை அகதிகள் சிறையில் அடைப்பு: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகள், பத்து பேர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தில் தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Saturday, May 3
Friday, May 2
Thursday, May 1
| RGB தேர்தல் முடிவுகள் விபரம் .......! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சென்னை தொலைபேசி 39
மொத்தம் 110 RGB
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Subscribe to:
Comments (Atom)