WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, July 25

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைவு !!!


இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என புள்ளிவிபரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக திட்ட கமிஷன் புள்ளி விவரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புள்ளி விவரத்தின் படி இந்தியாவில் 2004-05ம் ஆண்டில் 40 கோடியே 71 லட்சம் பேர் ஏழைகளாக இருந்துள்ளனர். ஆனால் 2011-12ம் ஆண்டில் 26 கோடியே 93 லட்சம் பேர் தான் ஏழைகளாக உள்ளனர்.

அதாவது மொத்த மக்கள் தொகையில் 37.2 சதவீதமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை தற்போது 21.9 சதவீதமாக குறைந்துள்ளது.

கிராமப்புறத்தில் நாளொன்றிற்கு ரூ.27.20 செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையில்லை. அதுபோல் நகர்புறங்களில் நாளொன்றிற்கு ரூ.33.33 செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையாக கருதப்பட மாட்டார் என சுரேஷ் டெண்டுல்கரின் பரிந்துரை குழுவானது தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த புள்ளிவிபரத்தை மறு ஆய்வு செய்வதற்கு பிரதமரின் பொருளாதார ஆலோசனை தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கையானது அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ளவர்களும் Returns சமர்பிக்க வேண்டும் : வருமானவரித் துறை புதிய உத்திரவு !! 
நமது சொஸைட்டி தலைவர் திரு வீரராகவன், மெட்ராஸ் செண்ட்ரல் மத்திய கூட்டுறவு வங்கியின் டைரக்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலத்திற்கு பிறகு நமது கூட்டுறவு சொஸைட்டியைச் சார்ந்தவர் அந்த அமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

     அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!

Sunday, July 21


வீணாய்ப்போன வக்கிரங்களின் வசைபாடல்கள் !!!

நமது எதிரியே ஆனாலும்
பணிஓய்வு பாராட்டு விழாவென்றால்
பாங்குறவே சென்று பாராட்டுவது 
நம் பண்பாடு ! தமிழர்தம்  பண்பாடு !!

அருமைத் தோழர் ஜெகனுக்கு
சென்னை ஹேமாமாலினி மண்டபத்திலே
தோழர் ஆர்.கேவுக்கு சென்னை பெரியார் திடலிலே
தோழர் தமிழ்மணிக்கு சேலத்திலே
ஜெயபாலுக்கு கும்பகோணத்திலே

மதுரை சேதுவிற்கு கும்பகோணத்திலே
லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்தால்,
அது நன்றி பாராட்டும் விழா என்பார்கள்.........
பக்கம் பக்கமாய்  ஆகா ஓகோவென்று
எழுதுவார்கள்  பாராட்டுரையை  !!
கலர்கலராய் போடுவார்கள்  அட்டை படத்தை !
வெளியிடுவார் சிறப்பு  மலரையும்தான் !!

ஆனால், அந்தோ  அங்கீகாரம் பெற்றுத் தந்த
மாவீரன்   மதிக்கு பாராட்டு விழா என்றால் மட்டும்
வயிற்றெரிச்சல்   வந்ததுவே   சில வக்கிரங்கட்கு !

ராமனுக்கு முடி சூட்டுவிழா என்றவுடன்
மந்தரை கூனி சதி செய்து
முடிசூட்டுவிழாவை நிறுத்தியதுபோல

மதியின் மணி விழாவை தடுக்க
நினைத்தார் சில  கூனிகள்
தாய் கைகேயியின் நல்லிதயத்தை
நஞ்சுர வைத்தது போல
நல்ல தலைவர்களை,
நிதி வழங்கும் நல்ல உள்ளங்களை
நஞ்சாக்க நினைத்தார்கள் அக்கூனிகள் !

60 பவுன் தரப்போகிறார்கள் என்று
நஞ்சை கக்கினார் நாக்கிலே நரம்பின்றி

76 லட்சம் வசூலாகி விட்டதென்றும்
பிதற்றினார்  சில  அரைகுறைகள்

போகாதே ! போகாதே !! என் தோழா
என்றெல்லாம் கெஞ்சியும் தான் பார்த்தார்கள் ! 

எடுப்போம் பார்  நடவடிக்கை !! என்று
ஆணவத்தின் உச்சியில் நின்று
மிரட்டியும்தான்  பார்த்தார்கள்

மூத்த முன்னோடிகளாம்.......
திருச்சியிலே சில வக்கிரங்கள்                     

எழுதி வைத்தார் சில வாசகங்களை

அவர்களின் துரதிருஷ்டம்
மூன்று முன்னாள் மாநில செயலர்களின்
பெயர்கள் ஏனோ மிஸ்ஸிங்........

இதுகூட  அம்மூவரும் தியாகம் எதையும் செய்யவில்லை
என்று குத்திக் காட்டும்   ஈனச் செயலன்றோ !!

அனைத்தையும் புறந்தள்ளி
எழுந்தது பார் வீரர் திருக் கூட்டம்
திருவாரூர், தஞ்சை, கும்பகோணம்
உள்ளிட்ட அனைத்து ஊர்களிலிருந்தும்
நிதியோடும் ஊழியர் துணையோடும்
திரண்டது பார் நம் தோழர்களின்  திருக்கூட்டம்
மதுரையிலிருந்து மும்மணியாய்
பாங்குறவே வந்தார்கள் வெற்றித் திருமகள்கள்
    
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும் என்பதுபோல்
கூனிகளின் சதிகள் எல்லாம்
சதிராடி போனதுவே !

நாடு போற்றும் நல்லவர் நல்லகண்ணு அவர்களின்
 மனமார்ந்த நல்வாழ்த்தும்
உலக தொழிற்சங்க தலைவரின் சிறப்பான நல்லுரையும்
புனிதமாக்கி  மேன்மையுறச் செய்ததுவே அத்திருவிழாவை  !

எளிமையாய் ஆயினும் கம்பீரமாய் நடந்தது பார்
எதற்கும் அஞ்சா மாவீரனின் பாராட்டு விழா !
நம் நெஞ்சை விட்டகலா திருச்சி திருவிழா  !

தங்கத் தலைவனுக்கு தங்கத்தால் அல்ல

பாராட்டு மழையால் பட்டாபிஷேகம் செய்தனரே !

காவிரித் தாய், மலைக்கோட்டை  பின்னணியில்
மறக்க முடியா நினைவு பரிசு வழங்கினாரே

நம் தியாகத் தலைவனுக்கு  தமிழகத்தின் தியாகச் செம்மல்

போற்றிடுவோம் நம் திருச்சி தோழர்களை !
CKM பணி நிறைவு பாராட்டு விழாவாய் ,
நெல்சன் மண்டேலா 95 வது பிறந்த நாள் விழாவாய்,
FDI எதிர்ப்பு மாநாடாய் பரிணமித்த
திருச்சி விழாவை எதிர் நீச்சல் போட்டு
வெற்றி கண்ட மாவீரர்களை !  



Saturday, July 20

தலைவர்கள் ......தோழர்களின் ......உணர்வுகள் ....உரைகளில் சில.. சில.. !!

தோழர் மதிவாணன் சிறந்த மதிநுட்பமிக்க,  நெஞ்சுரம் கொண்ட  உண்மையான கம்யூனிச போராளி.... அவருக்கு சிறப்பாக நடக்கும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்பதை எனது கடமையாகவே கருதுகிறேன்......கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் வயதில் மூத்தவன் என்ற அடிப்படையிலும் மதிவாணன் தம்பதியார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்........

" போராளிகளை அவர்களின் மார்பிலே உள்ள தழும்பை வைத்துதான் இனங்காண முடியும் ; பணி துவங்கிய நாள் முதல் பணி ஓய்வு பெறும் நாள் வரை எண்ணற்ற போராட்ட தியாக விழும்புகளை தாங்கியவர்தான் தோழர் மதிவாணன்.....

தெருவிலே நடந்து போனால் தென்றல் காற்று
தெருவிறங்கி போராடினால் புயல் காற்று
வாய் திறந்தால் வந்து வீசும் அனல் காற்று
அதிகார வர்க்கத்திற்கு ஒவ்வாத வாடைக் காற்று

பகைவரெல்லாம் பயந்து நடுங்கும் குளிர் காற்று
பாட்டாளி தோழனுக்கு பரவசமூட்டும் கடற் காற்று
சுற்றுப்பயணம் செய்வதிலே சூறைக்காற்று
சுற்றியுள்ள அனைவருக்கும் நீ சுவாசக் காற்று.........
 
இடியென்ன மழையென்ன எதிர்த்து நில்லு,
எது வந்த போதும் துணிந்து  நில்லு,
உனக்கென்று ஒரு வழியை வகுத்துக் கொள்ளு,
அதில் யார் குறுக்கிட்டாலும் எதிர்த்து வெல்லு !.......

எளிமையாய் ஆனால் கம்பீரமாய்..... பாராட்டு விழா !!





CKM பணி நிறைவு பாராட்டு விழா !!!!!!!!!!!!!


      

CKM பணி நிறைவு பாராட்டு விழாவாய் , நெல்சன் மண்டேலா 95 வது பிறந்தநாள் விழாவாய் , FDI எதிர்ப்பு மாநாடாய் பரிணமித்த திருச்சி விழா!

   எளிமையாய் ஆனால் கம்பீரமாய்.....
லட்சம் லட்சமாய் வசூலாகி விட்டது !
60 பவுன் தரப்போகிறார்கள் ! என்று                 
பிரச்சாரம் ஒருபுறம் !!
நிதி தராதே !! கூட்டத்திற்கு போகாதே
என்று பிரச்சாரம் மறுபக்கம் !

  தடை கற்கள் உண்டென்றால், அதை தகர்க்க தடந்தோள்கள் 
எமக்கு உண்டென்று ! தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 
ஆர்ப்பரித்தது பார் ! உண்மைத் தோழர்களின் திருக்கூட்டம் !!

உணர்வுகளின் பிம்பமாய் தோழர் காமராஜ் தலைமை ஏற்க,
அமைதியின் திருவுருவம், ஆற்றலின் மறு வடிவமாம்
தோழர் எஸ்.பழனியப்பன் வரவேற்புரை நல்க,
 திருச்சி மாநகரின் வரலாற்று சிறப்புமிக்க தேவர் ஹால் நிரம்பி வழிய,

நாடறிந்த நல்லோன் நல்லகண்ணு அவர்கள்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நீ !
என்று வாழ்த்துப் பா இசைத்திடவே !!

திருச்சி CPI மாவட்டச் செயலர் தோழர் இந்திரஜித்,
உன்னை சீதனமாய ஏற்க நாங்கள் தயார் என்று வரவேற்க,

உனது இரண்டாவது இன்னிங்க்ஸ்,
சிங்கம் இரண்டு போல மேலும் சிறப்பாய் அமைந்திடவே
என்று  வாழ்த்துப்பா இசைத்திட்டார் !
உலக தொழிற் சங்க தலைவர் தோழர் எச். மகாதேவன் !

முழு மதியாய் நீ பிரகாசிக்க வேண்டும்,
உனது இரண்டாம் பகுதி பிறையினிலே,
என்று வாழ்த்துபா வாசித்தார் !!
நமது எளிய பாராளுமன்ற உறுப்பினர் தோழர் பொ .லிங்கம், M.P,
உன்னைப்போல் ஒரு மதிநுட்பம் மிக்க வீர தீரனுண்டோ என்று
வியந்திட்டார் மக்கள் தொண்டன் குணசேகரன்,MLA அவர்கள்....

தமிழக மூத்த முன்னோடிகள் R.V, ரகு, மாலி, பூபதி ஆகியோர்
போற்றிப் புகழ்ந்திடவே,
AIBSNLOA தலைவர் குணசேகர் அவர்களின் ,
மதி ! நீ எத்தனை வகையான  காற்று என்று
அருமையான கவிதை வாசிக்க,

மதியின் வழித்தோன்றல்கள், சென்னை எம்.கே.ராமசாமி,
புதுவை அசோகராஜ், கோவை சுப்பராயன், நெல்லை பாபநாசம்,
மதுரை தோழியர் பரிமளம், கடலூர் அன்பழகன்,
மற்றும் சம்மேளனச் செயலர் ஜெயராமன் அவர்களின்  உணர்ச்சிமிகு உரையோடு
சிறப்புற்றது  திருச்சி திருவிழா !!

உலகறிந்த சமத்துவத்திற்கான போராளி
நெல்சன் மண்டேலா அவர்களின் ,
95வது  பிறந்த நாளை இனிதாக கொண்டாடியதும்
நாட்டிற்கு கேடு விளைவிக்கும் மத்திய அரசின்
FDI கொள்கைக்கு எதிராக
Declaring  War On FDI என்ற கொள்கை முழக்கத்தோடு
மேலும் சிறப்புற்றது திருச்சி விழா !!

இரண்டாவது இன்னிங்ஸில் மேலும்
சிறப்பாக விளையாடுவேன் என்று
ஏற்புரையில் முழக்கமிட்டார் !
தோழர் மதிவாணன் அவர்கள்..

விழா மலரை தோழர் RNK வெளியிட
தோழர்கள் GJ, திருச்சி சுந்தரம் பெற்றுக்கொள்ள 

 விழா சிறக்க பொறுப்பேற்று செயலாற்றிய
தொழிலாளர் கல்வி மைய திருச்சி செயலர்
அருமைத் தோழர் பாலகுரு நன்றி கூற
மன நிறைவோடு நிறைவுற்றது
திருச்சி திருவிழா.....

கடும் எதிர்நீச்சல் போட்டு,
போற்றுதலுக்குரிய செயலாற்றிய
அனைத்து திருச்சி தோழர்களயும்
வணங்கி மகிழ்கிறோம் நாமெல்லாம் !!