WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, January 7

கண்ணீர் அஞ்சலி !!!

                                        கண்ணீர் அஞ்சலி !!!




06/ 01/2013 அன்று நம்மை விட்டு பிரிந்த தன்னிகரில்லா தலைவனுக்கு நமது                  கண்ணீர் அஞ்சலி !!!




















Friday, January 4

அங்கீகார தேர்தல் ! 16-4-2013


மீண்டும் முதன்மை அங்கீகாரச் சங்கமாக
                 NFTE-BSNL ஐ ஆக்கிடுவோம் !


புதிய அங்கீகார விதிகளின்படி நடக்கும்
முதல் தேர்தல் ! 

அடுத்த மூன்றாண்டுகளுக்கு நமது 
தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் !

எட்டு ஆண்டுகள் பட்டது போதுமப்பா 
என்று சரண்டர் BSNLEU சங்கத்தின் 
செயல்பாடின்மைக்கு எதிராக ஊழியர்கள் 
திரண்டெழும் நாள்    16-4-2013

போனசை, LTCஐ,  LTC Encashmentஐ
மெடிக்கல் அலவன்சை , 
1.1.2007 முதல் வரவேண்டிய 78.2 சத அரியர்சை
சரண்டர் செய்தது போதாதா .....

இழந்ததை மீட்டிட , தற்போது இருக்கும்
மற்ற சலுகைகளையும் சரண்டர் செய்யாமல் 
தடுத்திட.....

அனைத்து ஊழியர்களையும் NFTE-BSNLக்கு
ஆதரவாக திரட்டிடுவோம் !!

NFTEஐ அங்கீகார முதன்மைச் சங்கமாக
ஆக்கிடுவோம் !!!

National Executive !!


                                                                       TF-4/1 Dated:-04-01-2013
                                             Notice

In continuation of Notice No.-TF-4/1, dt-31-12-2012 it is hereby notified that the meeting of National Executive will be extended one in which central office bearers, circle Secretaries, District Secretaries and special Invitees elected in AIC will participate.

                                                   (Chandeshwar Singh)
                                                      General Secretary

Thursday, January 3


சட்டத்துக்கு மாணவியின் பெயரை சூட்ட வாய்ப்பு இல்லை!! மத்திய அரசு அறிவிப்பு !!


கற்பழிப்பு தடுப்பு சட்டத்தை கடுமையாக்கி, அதற்கு டெல்லி சம்பவத்தில் இறந்து போன மாணவியின் பெயரை சூட்டலாம் என்ற கருத்தை மத்திய மந்திரி சசி தரூர் முன்வைத்தார். அதை மாணவியின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். இதேபோன்று மாயாவதி, கிரண்பேடி போன்றவர்களும் இந்த யோசனையை வரவேற்றுள்ளபோதும், இதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் யதார்த்த நிலை.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று கருத்து தெரிவிக்கும்போது, இந்தியாவில் எந்தவொரு சட்டத்துக்கும் தனி நபரின் பெயர் சூட்டப்பட்டது இல்லை. இந்திய தண்டனை சட்டமும் சரி, குற்றவியல் நடைமுறை சட்டமும் சரி அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. தேசிய கண்ணோட்டத்துடன்தான் ஒரு வழக்கை பார்க்க வேண்டும்.

கற்பழிப்பு தடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு டெல்லி மாணவி உந்துசக்தியாக அமைந்துள்ளார். ஆனால் அவரது பெயரை சூட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என கூறினர்.

நமது நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் குற்றவியல் சட்டமான ஐ.பி.சி. என்னும் இந்திய தண்டனை சட்டமும், அதை அமல்படுத்த கடைப்பிடிக்கப்படுகிற சி.ஆர்.பி.சி. என்னும் குற்றவியல் நடைமுறைச்சட்டமும் பிரிவு எண்களை கொண்டே குற்றங்களை, நடைமுறைகளை பிரித்துக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் கற்பழிப்பு தடுப்பு சட்டப்பிரிவை கடுமையாக்கினாலும், சட்டப்பிரிவு எண் மாறாது. தண்டனையில் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட நீதிபதி அனுமதி மறுப்பு!!


உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர் தமிழில் வாதாடியதால், அந்த வழக்கினை வேறொரு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் விவகாரங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி பி.ஆர். சிவகுமார் விசாரித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் வழக்குரைஞர் ம.பாரி ஆஜராகி தமிழில் வாதிட்டார்.

ஆனால் அவர் தமிழில் வாதிடுவதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முதன்மை அமர்வு உள்பட உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகள் முன்னிலையில் தான் தொடர்ந்து தமிழில் வாதிட்டு வருவதாகவும் வழக்குரைஞர் பாரி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை வேறொரு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழும் ஒரு வழக்காடு மொழிதான் என்று வழக்குரைஞர் பாரி கூறுகிறார். ஆனால் இது அரசியல் சாசன சட்ட விதிகளின்படி ஏற்புடையதாக இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மேலும் தேவையற்ற சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வேறு நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கினை மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Sunday, December 23

அஞ்சலி !!


காரைக்குடி முன்னாள் மாவட்ட செயலர், அருமைத்தோழர்;  வெங்கடேசன் உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த தோழருக்கு        நமது அஞ்சலி 

 தோழரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.