WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Tuesday, July 29
Sunday, July 27
- 78.2 சத IDA இணைப்புக்கேற்ப ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றுதல்.
- ERP நடைமுறைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை தீர்த்தல்
- BSNL CDA நன்னடத்தை விதிகளில் திருத்தம்.
- GPF நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்துதல்.
- MRS மருத்துவத்திட்டத்தில் சகோதர சகோதரிகளை சேர்த்தல்.
- BSNL மாற்றல் கொள்கையில் திருத்தம்.
- மருத்துவப்படியை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வழங்குதல்.
- தொழிற்சங்க பொறுப்பாளர்களுக்கான மாற்றல் சலுகையில் திருத்தம்.
- ஆயுள் காப்பீட்டுத்தொகையை உயர்த்துதல்.
- ஓய்வுக்கு ஓராண்டு முன்பாக ஆண்டு உயர்வுத்தொகை தரும் திட்டத்தை உயிர்ப்பித்தல்.
- கூட்டு ஆலோசனைக்குழுக்களுக்கான விதிமுறைகளை வகுத்தல்.
- TELECOM FACTORY தயாரிப்புகளுக்கு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை தாமதமின்றி தருதல்.
- இரண்டாவது கேடர் சீரமைப்பு அமுல்படுத்துதல்.
- மக்கள் தொகைக்கு ஏற்ப வீட்டுவாடகைப்படியை உயர்த்துதல்.
- தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கேடர் சீரமைப்பு.
- பல்முனை திறமை கொண்ட ஊழியர்களை உருவாக்குதல்.
- விடுப்பைக்காசாக்கும் திட்டத்தில் ஆயுள் காப்பீடு உருவாக்குதல்.
- தேசியமொழி அதிகாரி பணியிடங்களை முறைப்படுத்துதல்.
- எதிர்மறை மதிப்பெண் திட்டத்தைக் கைவிடுதல்.
Thursday, July 24
உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் திட்டம் :
NFTE-BSNL ன் விடா முயற்சி
உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் திட்டத்தை உருவாக்குவதற்கான கமிட்டி கூட்டம் 23-7-14 அன்று நடைபெற்றது.
நமது சங்கம் கொடுத்த குறிப்பும், நிர்வாகம் வைத்த குறிப்பும் விவாதிக்கப்பட்டுள்ளது.
23-07-2014 : A note on PLI has been submitted to GM(Restg) on 13-07-2014 for the consideration.
The PLI committee consisting of Management Side and staff side will met today.
Letter No.-TF-7/1, dt-13-07-2014. Click Here
Management put forth its proposal which is linked here.
NFTE-BSNL ன் விடா முயற்சி
உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் திட்டத்தை உருவாக்குவதற்கான கமிட்டி கூட்டம் 23-7-14 அன்று நடைபெற்றது.
நமது சங்கம் கொடுத்த குறிப்பும், நிர்வாகம் வைத்த குறிப்பும் விவாதிக்கப்பட்டுள்ளது.
23-07-2014 : A note on PLI has been submitted to GM(Restg) on 13-07-2014 for the consideration.
The PLI committee consisting of Management Side and staff side will met today.
Letter No.-TF-7/1, dt-13-07-2014. Click Here
Management put forth its proposal which is linked here.
NFTE insisted for payment of minimum bonus this year over and above the amount becoming due based on Key Performance Indicators.
Few more meetings are expected on this issue shortly.
BSNL நிறுவன சீரமைப்பு “M/s Deloittee Consultants” பரிந்துரை...
RECOMMENDATIONS OF "DELOITTEE"Consultants
BSNL நிறுவன சீரமைப்பு (ORGANISATIONAL RESTRUCTURING) மற்றும்
மனித வளத்திட்டத்தின்(HR PLAN) மீதான
“M/s Deloittee Consultants” பரிந்துரைகளின் சாராம்சம்
விற்பனையையும் வாடிக்கையாளர் சேவையையும்
முன்னிலைப்படுத்தும் நோக்கில்
SSAக்களை பகுதிவாரி அலுவலகங்களாக (AREA OFFICES)
சீரமைக்க வேண்டும்.
|
பூகோள அளவு, தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை
மற்றும் வருமான வாய்ப்பு அடிப்படையில்
சிறிய SSAக்களை பகுதி வாரி அலுவலகங்களுடன் இணைக்க வேண்டும்.
|
இதன் படி தற்போது அகில இந்திய அளவில் இருக்கும்
329 SSAக்களை 167 பகுதி அலுவலகங்களாக
மாற்றியமைக்க வேண்டும்.
|
தமிழகத்தில் இருக்கும் 17 SSAக்கள்
10 பகுதி அலுவலகங்களாக மாற்றி அமைக்கப் பட வேண்டும்.
|
விருதுநகர், மதுரையுடனும்
|
தஞ்சை மற்றும் குடந்தை, திருச்சியுடனும்
|
ஈரோடு, கோவையுடனும்
|
தர்மபுரி மற்றும் நாகர் கோவில், வேலூருடனும்
|
இணைக்கப் பட வேண்டும்.
|
Transmission, Network Planning போன்ற வேலைகளை
மாநில அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும்.
|
விற்பனை(SALES),
சந்தைப்படுத்துதல்(MARKETING),
வாடிக்கையாளர் சேவை(CUSTOMER SERVICE DELIVERY),
தகவல் தொழில்நுட்பம்(IT) போன்ற முக்கியமான பகுதிகளில்
BSNL பின் தங்கியுள்ளது.
|
அந்த துறைகளில் திறனை அதிகரிப்பதற்காக,
|
தொலைத்தொடர்பு விற்பனை பின்புலத்திறன் கொண்ட
8000 அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
|
தொலைத்தொடர்பு சந்தைப்படுத்துதல் பின்புலத்திறன் கொண்ட
1300 அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும்.
|
வாடிக்கையாளர் மேலாண்மையில் திறன் கொண்ட
4000 அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும்.
|
அப்படி நியமிக்கப்படும் ஊழியர்களில் பெரும்பகுதியினர்
நிறுவனத்தின் ஊதியப் பட்டியலில்
ஊதியம் வாங்குபவராக இருக்கக் கூடாது.
|
வருமானத்திற்கும் ஊழியர் ஊதியத்திற்கும் உள்ள விகிதாச்சாரம்
51% என்ற அதிக அளவில் உள்ளது.
போட்டி நிறைந்த இன்றைய சூழலில்
இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
|
சந்தை மதிப்பீட்டில் கண்டறியப்படும் உபரி ஊழியர்களின் ஊதியத்தில் 50%த்தைஅரசு ஏற்க வேண்டும்.
|
செயல்திறன் நிர்வாகத் திட்டத்தை(PERFORMANCE MANAGEMENT SYSTEM)அறிமுகப்படுத்தி ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
|
பகுதி அலுவலகங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊழியர் எண்ணிக்கை
|
ஒரு பொது மேலாளருக்கு 2 துணைப்பொது மேலாளர்கள்
|
2705 தரைவழி இணைப்புகளுக்கு ஒரு JTO/SDE/AGM
|
விற்பனை, சந்தைப்பிரிவு, வாடிக்கையாளர் சேவைப்பிரிவுகளுக்கு
சந்தையில் உள்ள நிலவரப்படி ஊழியர் எண்ணிக்கையை முடிவு செய்யலாம்.
|
பகுதி அலுவலகங்களில் உள்ள மொத்த ஊழியர் எண்ணிக்கையில்
20% நிதி/கணக்குப் பிரிவு ஊழியர்கள்.
|
7% மனித வள நிர்வாகப் பிரிவு ஊழியர்கள்.
|
409 இணைப்புகளுக்கு ஒரு TM/RM
|
2991 தரைவழி இணைப்புகளுக்கு ஒரு TTA
|
தற்போது இருக்கும் Sr.TOAக்கள்
ERP நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடரலாம்.
|
மற்ற பிரிவு NON EXECUTIVE ஊழியர்கள் தேவையில்லை;
அவர்கள் ஓய்வு பெறும் வரை தொடரலாம்.
|
தற்போது தொழில்நுட்பம், நிதி ஆகிய இரு பிரிவுகளில் மட்டுமே
நிர்வாகிகள் இருக்கிறார்கள்.
|
இது போதாது.
மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப
விற்பனை, சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை விநியோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பகுதிகளில்
புதிய திறனைப் புகுத்த வேண்டும்.
|
பொறியியல் பட்டத்தோடு மேலாண்மைப் பட்டமும் பெற்று
விற்பனை, சந்தைப்படுத்துதலில் அனுபவம் பெற்ற
14234 புதிய நிர்வாகிகளை
JTO/SDE/AGM/DGM/GM பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டும்.
|
இதில் DGM/GM பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் மட்டும் நிறுவனத்திலிருந்து ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
|
மற்றவர்கள் நிறுவன ஊழியர்களாக இல்லாது
OFF ROLL ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
|
தமிழ் மாநிலத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட
நிர்வாகிகள் எண்ணிக்கை(EXECUTIVES STRENGTH)
DESIGNATION
|
EXISTING
|
RECOMMENDED
|
CGM/PGM
|
1
|
4
|
GM/Sr.GM
|
24
|
29
|
DGM
|
107
|
90
|
JTO/SDE/AGM/CAO
|
3527
|
2589
|
TOTAL
|
3659
|
2712
|
தோழர்களே,
சாம் பிட்ரோடாவில் இருந்து Deloittee வரை
எத்தனை குழுக்கள் மதிப்பீடு செய்தாலும்
அவை அனைத்தின் சாராம்சம் ஒன்று தான்.
“ஊழியர் ஊதியச் செலவு அதிகம்,
ஏனென்றால், தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருக்கிறார்கள்”,
என்பது தான்.
நிறுவனத்தின் நிலையை சீரமைக்க வேண்டும் என்றால்,
ஊழியர்களின் வாழ்வைச் சீரழிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளையே தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.
போட்டி என்ற பெயரில்
சுரண்டல் முறைகளை ஊக்குவிக்கும் பரிந்துரைகளையே
கேட்டு வருகிறோம்.
ஏனென்றால்,
பரிந்துரைக்காக நியமிக்கப்பட்ட அத்தனை மதிப்பீட்டாளர்களும்
முதலாளித்துவ கார்ப்பொரேட் நிறுவனங்களும்
அதன் பிரதிநிதிகளுமே ஆவர்.
BSNL நிறுவனமும்
தொழிற்சங்கங்களிடம் தகவல் இருட்டடிப்பு வேலையைத்
தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.
பரிந்துரைக்காக இப்படி ஒரு நிறுவனத்தை நியமிக்கப் போவது தொடர்பாக
எந்த சங்கத்திடமும் ஆலோசிக்கவில்லை. அறிவிப்பு கூட இல்லை.
வந்த பரிந்துரையை எந்தச் சங்கத்திற்கும் வழங்கவில்லை,
அதுபற்றி ஆலோசிக்க அழைக்கவில்லை.
ஆனால், நிர்வாக ரீதியாக பொதுமேலாளர்கள் மட்டத்தில்
இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வதற்கு துவங்கி விட்டது.
Monday, July 21
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத, வார விழா கொண்டாடுவதற்கு எதிர்ப்பு!
பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா கொண்டாட உத்தரவிட்ட மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராணுவத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு வழிவகை செய்யப்படும் என்று மத்திய பாரதீய ஜனதா அரசு தெரிவித்து உள்ளது. இந்த செயலால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழக மீனவர்கள் காக்கப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் மோடி உறுதி கூறினார். ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்து உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீனவர்கள் பிரச்சினை தீர கண்டிப்பாக நாம் கச்சத்தீவை மீட்டாக வேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழக பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல. இந்தியாவில் அனைத்து தேசிய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Wednesday, July 16
சென்னை தொலைபேசி மாநிலத்தில்
280க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள்,
BSNLEU, NFTBE
ஆகிய சங்கங்களிலிருந்து விலகி,
NFTE-BSNL சங்கத்தில் இணைந்துள்ளனர்.
NFTBEன் அனைத்து உறுப்பினர்களும் நமது சங்கத்தில் இணைந்துள்ளது மகிழத்தக்க செய்தியாகும்.
குறிப்பாக தோழர்.வெங்கடேசன் BSNLEU, (North-West மா.செயலர்)
தோழர்.ராம்பிரபு மாநிலச்செயலர் NFTBE,
தோழர்,பஞ்சாச்சரம் மாநிலத்தலைவர் NFTBE
ஆகிய
தோழர்கள் தாய் சங்கத்துடன் தங்களை இன்று படிவம் கொடுத்து இணைத்துக்
கொண்டனர். இணைந்த தோழர்களை தென்சென்னை மாவட்டத்தின் சார்பாக வருக வருக என
வரவேற்கிறேன்.
--நாகராஜன்
மாவட்டச் செயலர்
Subscribe to:
Posts (Atom)