அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.அதிபர் தேர்தலுடன், 50 மாகாணங்களுக்கான தேர்தலும், பார்லிமென்ட் தேர்தலும் நடைபெற உள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் ஒன்பது இந்தியர்கள் போட்டியிட, வேட்பு மனு செய்திருந்தனர். தற்போது, நான்கு பேர் இந்த போட்டியிலிருந்து விலகி விட்டனர்; ஐந்து பேர் மட்டும் களத்தில் உள்ளனர்.
நியூஜெர்சியிலிருந்து உபேந்திரா சிவுக்லா, கலிபோர்னியாவிலிருந்து அமி பெரா மற்றும் ரஞ்சித், பென்சில்வேனியாவிலிருந்து மனன் திரிவேதி, மிச்சிகனிலிருந்து சையத் தாஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், ரஞ்சித் மட்டும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்; மற்றவர்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment