2002 இல் நடந்த கோத்ரா கலவரத்தின்போது குஜராத் அரசு செயல்படாமலும், அலட்சியமாகவும் இருந்ததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
500 மத கட்டமைப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் உத்தரவின்போது, பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் ஜெ பி பர்டிவாலா அடங்கிய டிவிஷன் பென்ச் இவ்வாறு கூறியுள்ளது.
மாநில அரசு செயல்படாமலும், அலட்சியமாகவும் இருந்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள மத கட்டமைப்புகள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்வதும், இழப்பீடு வழங்குவதும் மாநில அரசின் பொறுப்பு என்று மேலும் கூறியுள்ளது.
சேதமடைந்த வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இழப்பீடு வழங்கிய அதே நேரத்தில், மத கட்டமைப்புகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment