மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை பொது வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் . குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ், தொலைத் தொடர்பு உள்ளிட்ட பெரும்பாலான மத்திய அரசுத் துறைகளில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது . பஸ் போக்குவரத்தும்ஓடாது . மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர் நலன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் கொள்கைகள் முதலாளிகளுக்குச் சாதகமாக உள்ளன என்று கூறி FEBRUARY 28 ல் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் .
காங்கிரஸ் கட்சி சார்புள்ள ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment