அசன்அலிக்கு பாஸ்போர்ட் வழங்க புதுவை கவர்னர் இக்பால்சிங் பரிந்துரை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் இக்பால்சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வந்தன.
இந்த நிலையில் கவர்னர் இக்பால்சிங் மீது 2 புதிய புகார்கள் எழுந்தது. தனது மகன்களை உறுப்பினர்களாக கொண்ட சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட் என்ற அமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்கினார் என்றும், புதுவையில் சொற்ப எண்ணிக்கையில் வசிக்கும் சீக்கிய சமுதாயத்துக்கு குருத்வாரா கட்ட நிலம் ஒதுக்கியதாகவும் புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்கி ஒலித்தது. கவர்னர் பதவி விலக கோரி பாரதிய ஜனதா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நாளை (புதன்கிழமை) முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment