WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Monday, March 31
Sunday, March 30
Saturday, March 29
Thursday, March 27
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு!!
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று
வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தீர்மான குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அரசு அதிகாரி தயன் ஜெயதிலகே, 2009ல் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபின் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறியதால் சர்வதேச நாடுகள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்மான குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அரசு அதிகாரி தயன் ஜெயதிலகே, 2009ல் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபின் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறியதால் சர்வதேச நாடுகள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Wednesday, March 26
- செய்தி துளிகள்! .
- TTA ஆளெடுப்பு விதி TTA RECRUITMENT RULES நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்குப்பின்னர் BSNL BOARD ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் 2012ல் JAO தேர்வெழுதி தோல்வியுற்ற பொதுப்பிரிவு OC தோழர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க இயலாது என BSNL நிர்வாகம் கைவிரித்துள்ளது. ஆயினும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் விரைவில் JAO தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CHQ NEWS
- Guide lines for constitution of Local councils at circle HQR and SSA levels. F. No.-BSNL/1-1/SR/2014, dt-20-03-2014.
- Corporate office released final welfare grant to circles for the year 2013-14. Letter No.-13-3/2013-14-BSNL-(WL)/221, Dated:-20-03-2014.
- BSNL declared 2014-15 as devote year on “Improved Quality of Mobile services”. D.O. from Director(CM). Letter No.-MOB-14/Trai Report/2014, Dated:- 19-03-2014.
- JCM மாநில மற்றும் மாவட்ட குழுக்கள் அமைக்கும் போது அந்தந்த மாநில, மாவட்டம் சார்ந்த உறுப்பினர்களை வைத்து தான் அமைக்க வேண்டும் என BSNL நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது,
- 2013-14ம் ஆண்டிற்கான இறுதிக்கட்ட சேமநல நிதி ஒதுக்கீடு FINAL WELFARE GRANT இன்று 20/03/2014 அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.3,95,46,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்திற்கு 37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.2014-2015 ஆண்டை "செல்பேசி சேவை மேம்பாட்டு ஆண்டாக" (“Improved Quality of Mobile services”) BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tuesday, March 25
கடலூரில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தலைவர்கல் சி.கே.மதிவாணன், மாலி, கடலூர் செயராமன்,கோவை சுப்புராயன், பாண்டியின் அசோக்ராஜ், முதுபெரும் தலைவர் கடலூர் ரகு, கம்யூனிச இயக்கத்தின் தலைவர் அப்பாதுரை மற்றும் தொழிற்சங்க முன்னோடிகள் பங்கேற்றனர். விழா நடந்த கடலூர் தொலைபேசி நிலைய வளாகள் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தது. அவ்விழாவில் சில காட்சிகள் உங்களுக்காக....
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுக எங்களை கை கழுவிவிட்டது: ஆர். நல்லகண்ணு
தமிழக முதல்வரின் நடவடிக்கையை பார்க்கும்போது, எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே எங்களைவிட்டு அதிமுக பிரிந்திருப்பதாகத் தெரிகிறது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு கூறினார்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இதுவரையில்லாத திருப்புமுனையாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்தியப் பொருளாதாரத்தை அந்நிய முதலாளிகளுக்கு அடகுவைத்த காங்கிரஸ் கட்சியையும், மதவெறி பாஜகவையும் எதிர்த்து இடதுசாரிகள் இணைந்து களம் இறங்கியுள்ளன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் இந்திய அளவில் 14 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி உருவானது. இதில் அதிமுகவும் பங்கேற்றது. மேலும், தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு இடம் ஒதுக்குவதாகவும் அதிமுக அறிவித்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதிமுகவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பேச்சையும், நடவடிக்கையையும் பார்க்கும்போது எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே எங்களை கூட்டணியில் இருந்து விலக்கிவிட்டதுபோலத் தோன்றுகிறது. மோடி தலைமையில் ஏற்படும் பாஜக ஆட்சிதான் இந்தியாவுக்கே விமோசனம் அளிக்கும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இது ஆபத்தான நிலை. ஆகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனநாயக அடிப்படையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இணைந்துள்ளன. தமிழகத்தில் இடதுசாரிகள் போட்டியிடும் 18 இடங்களைத் தவிர்த்து, பிற இடங்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.
Monday, March 24
Subscribe to:
Comments (Atom)
















