WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, March 31

 BSNLEU boast to much about NEPP Promotion schemes. The Executives in BSNL availed 5 Promotions at an interval of every 5 years where as the Non-Executive  Employees get only two promotions that to at an interval of 8 long years. Why this discrimination?. Why BSNLEU surrendered arrears on account of NEPP?. Why it agreed for denial of reservation in NEPP scheme for SC/ST Employees?. Why it has agreed  for belated discrimination between pre and post 01/10/2000 recruities in the case of NEPP promotion?

தினம் ஒரு கேள்வி - இரண்டு

புதிய பதவி உயர்வு திட்டம் குறித்து பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் மிகப் பெரும் சாதனையாக சொல்லிக் கொள்கிறது. பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவி பெறுகிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கோ 8 ஆண்டு இடைவெளி என்பதால் இரண்டு பதவி உயர்வுகள் மட்டுமே பெறுகிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்? பதவி உயர்வு காரணமாக பெறவேண்டிய ஊதிய நிலுவையை  பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சரண்டர் செய்தது ஏன்? பதவி உயர்வில் நியாயமாக எஸ்.சி / எஸ்.டி ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டினை நிர்வாகம் மறுத்ததை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஏன் ஏற்றுக் கொண்டது? பதவி உயர்வுக்கான சேவையில் 2000 க்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் 2000 க்குப் பின் வேலையில் சேர்ந்தவர்கள் என வேறுபாடு காட்டுவதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஒப்புக் கொண்டது ஏன்?
                                     நன்றி: சென்னை இணைய தளம்.

Saturday, March 30

தினம் ஒரு கேள்வி!!

2000 அக்டோபர் முதல் தொலைத் தொடர்பு துறை பொதுத் துறையானதுதான் இன்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் எதிர் கொள்ளும் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் என பிரச்சாரம் செய்கிறார் தோழர் அபிமன்யூ. அது உண்மையானால் அவர் ஏன் 6வது தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்கிறார்? பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர்ந்து மத்திய பொதுத் துறையாக நீடிக்கும் என்பதோடு அது மீண்டும் அரசு துறையாக மாறப் போவதில்லை. நலிவடைந்த நிறுவனத்தில் ஊழியர் பிரச்னைகள் எதையும் அபிமன்யூ தீர்க்கப் போவதில்லை. அப்படியானால் ஊழியர்கள் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? பொதுத் துறை நிறுவனத்தில் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க முடியாத சங்கத்திற்கு வாக்களித்து தங்களின் வாக்குகளை வீணாக்குவானேன்?  நம்முடைய கேள்வி: டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசில் எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறாரா அபி?
                                     நன்றி: சென்னை இணைய தளம்

Thursday, March 28

ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு புகார் : நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!!


நோக்கியா செல்போன் நிறுவனம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, வருமானவரித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையை நடத்திவருகிறது. அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, வருமானவரித்துறையினர் கடந்த ஜனவரி மாதம் நோக்கியா நிறுவன அலுவலகங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். செல்போன் விலைகளை குறைத்துகாட்டி, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முழுதையும் விரைவில் செலுத்துமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 . இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக சுமார் மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Wednesday, March 27

    மகத்தான வெற்றியை நோக்கி NFTE….
   6வது தேர்தல் பிரச்சாரம் பிப்ரவரி மாதம் தொடங்கிய போது நாம் 40% வோட்டுகள் வாங்கி முதல் இடத்திற்கு வந்து விடுவோம் என்று உறுதியாக நம்பினோம். ஏனென்றால், 2004-ல் இருந்து அங்கீகாரத்தில் இருந்த BSNLEU சங்கம் உருப்படியாக எந்த சாதனையும் செய்யவில்லை என்பதே காரணம். ஆனால் நம்முடைய இந்த ஒரு மாத தேர்தல் சுற்றுபயணத்திற்கு பிறகு நாம் உறுதியாக 51% மேல் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நாடெங்கும் BSNLEU-க்கு எதிரான அலை வீசுகிறது
ஆறாவது அங்கீகார தேர்தலில் வாக்களிக்க இருப்போர் சுமார் 2,04,000 பேர். நாம் உறுதியாக  இந்தியா முழுவதும் பெருவாரியான 1,05,000 வோட்டுகள் வாங்கி முதன்மை சங்கமாக ஆகுவது உறுதி. நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடந்த

ஐந்து சரிபார்ப்பு தேர்தல்களிலும் நாம் 35% வோட்டுகள் குறையாமல் வைத்திருந்தோம். அதுவும் கடந்த 8 வருடமாக BSNLEU- சங்கம் ஒன்பது சங்கங்களின் கூட்டணியோடு பணபலம், ஆள்பலம் மற்றும் அதிகார பலம் இவை எல்லாம் வைத்திருந்தும் அவர்களால் 46% வோட்டுகள் மட்டுமே வாங்க முடிந்தது. குறிப்பாக கடந்த தேர்தலில்கூட அது பெரும்பான்மை வோட்டுகள் பெற முடியவில்லை. ஆதலால் இந்த தேர்தலில் அது 30% வோட்டுகள் வாங்குவதே கடினம்,. BSNLEU- சங்க உறுப்பினர்களே கடந்த மூன்றாடுகளாக போனஸ் இல்லாதது, LTC CUT, 10 நாள் விடுப்பினை காசாக்குதல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெறுகின்ற மருத்துவ அலவன்ஸ் பறிபோனது ஆகியவற்றால் விரக்தியின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

78.2% கிராக்கிப்படி இணைப்பு 01/01/2007-ல் இருந்து பெறாததால் சுமார் 6000 கோடி ரூபாய் தொழிலாளி இழந்துள்ளான். அதுமட்டுமல்லாமல் NEPP-ல் SC/ST ஊழியர் பதவி உயர்வில் ஒதுக்கீடு என்பதை BSNLEU சரண்டர் செய்துவிட்டதால் SC/ST ஊழியர் கடும் அதிருப்தியில் உள்ளனர். TTA தோழர்களுக்கு கடந்த 8எட்டு வருடங்களாக 30% FITMENT, PENSION BENEFIT ஆகியவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதால் SNATTA இந்த முறை NFTE-BSNL –உடன் கூட்டணி வைத்துள்ளது.

மொத்தம் 35 மாநிலங்களில்  6 மாநிலங்கள் பெரிதானவை. அவை தமிழ்நாடு,ஆந்திரா,குஜராத், கர்னாடகா, கேரளா, மஹாராஷ்டிரா ஆகும்.  இதில் கேரளாவைத் (ஒருவேளை)  தவிர மற்ற மாநிலங்களில் நாம் வெற்றி பெறுவது உறுதி ஆகிவிட்டது. கடந்த 8 வருடங்களாக எதுவும் தொழிலாளிக்கு உருப்படியாக செய்யாத BSNLEU சங்கம் தனது தவறுக்கு NFTE-BSNL –ஐ நோக்கி கைகாட்டுவதை பார்த்து தொழிலாளி கைகொட்டி சிரிக்கிறான், அதுமட்டுமலாமல் அபிமன்யு கார்ப்பரேஷ்ன் ஆனதுதான் இதற்கு காரணம் என்று கூறுவது பேதமை. கடந்த 13 ஆண்டுகளாக ITS OFFICERS கார்ப்பரேஷன் வேண்டாம் என்று இதுவரை வெளியே இருக்கவில்லையா? அதுபோல் இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தது? BSNL நிர்வாகத்தில் எதாவது நல்லது நடந்தால் அதற்கு BSNLEU காரணம் என்றும் தவறு எதேனும் நடந்தால் 8 வருடமாக அங்கீகாரத்தில் இல்லாத NFTE-BSNL தான் காரணம் என்று கூறுவதையும் தொழிலாளி நன்கு கவனித்து கொண்டுதான் இருக்கிறான். DMK சங்கத்துடன் கூட்டணி வைப்பதற்காக அதன் மந்திரிகள் தயாநிதி மற்றும் ராசா செய்த ஊழலை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள்தானே இவர்கள். ஆதலால் வரும் 6வது சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU மண்ணை கவ்வப் போவது நிச்சயம். 18/04/2013 வோட்டுகள் எண்ணி முடிக்கும்போது NFTE-BSNL முதன்மை சங்கமாக வந்திருப்பது நிச்சயம்.

சி.கே.மதிவாணன், மாநிலச் செயலர், சென்னை தொலைபேசி.

Monday, March 25


வெற்றியின் அடுத்த மைல் கல் !!

மேற்கு வங்கத்திலும் கொல்கொத்தாவிலும் புதியதாக துவங்கப்பட்டுள்ள TEU BSNL சங்கம், BSNLEUவிற்கு சவால்விடக்கூடிய வலுவான சங்கமான Telecom Employees Union (BSNL), NFTEக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.


Friday, March 22

Election special Sangamuzhakkam !!

 A colorful 20 page Election special issue of Sangamuzhakkam journal will be distributed to all the employees before 31/03/2013. Apart from Com C.K.Mathivanan many senior comrades such as Mali(Erode), Jayaraman(Cuddalore) and Subbarayan(Coimbatore) have written articles explaining the need for electing NFTE_BSNL and exposing the betrayal of BSNLEU.



Thursday, March 21

 Tepu is almost finished in Karnataka and employees have joined NFTE.                                                                          CHQ........