WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, August 15

ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு.....!




தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் லேண்ட்லைன் வாயிலாக செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: லேன்ட்லைன் வாயிலாக மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது.

தற்போது மேலும் வாடிக்கை யாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.

மேலும் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட்லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் இணைப்பு (இன்ஸ்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் மற்ற வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் எனவும் அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேடையிலொருவன் பொய்குரைப்பான்
தாவி மேடையேறித்
தலையிற்குட்ட முடியவில்லை........
நல்லவன் போல் நடித்திடுவான்
நாவின் வார்த்தை சுத்தமில்லை ......

Wednesday, August 10

NFTE(BSNL) க்கு  வந்த ....சோதனை ....!!!

பிள்ளையார் பட்டியில் விரிந்து ......

மதுரையில்  முறிந்து ......
வேலூரில் ஒட்டப்பட்டுள்ளது .......
ஒற்றுமை வலுப்படும் என நம்பு வோமாக.....!!
                                      .......இரா. த ...            

Tuesday, August 2



தோழர்.ஜெயராமன்
பணி நிறைவு பாராட்டு விழா
06/08/2016 - சனிக்கிழமை - காலை 10 மணி 
 TOWN HALL - கடலூர் 
தலைமை: தோழர்.C.K. மதிவாணன் 
வாழ்த்தரங்கம் - கவியரங்கம் - பட்டிமன்றம் - நூல் வெளியீடு 
வாழ்த்துரை 
பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள்

தோழர்.முத்தரசன் 
தோழர்.மகேந்திரன்
தோழர்.திருமலை - AIYF
தோழர்.நல்லக்கண்ணு  

தொழிற்சங்கத்தலைவர்கள் 
தோழர்.மாலி 
தோழர்.இரகுநாதன் 
தோழர்.இலட்சுமணன் AITUC 
 தோழர். கு.பாலசுப்பிரமணியன் 
மற்றும் இயக்க  முன்னணித்தலைவர்கள் ....
வாருங்கள்  தோழர்களே...
வாழ்த்துங்கள் தோழர்களே...

Sunday, July 24

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...


ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...
👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿
🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿
🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿
🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿
🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿
🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿
🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿
🗣
👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿
🗣
👉🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿
🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿
🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿
🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿

Tuesday, July 12

சொஸைட்டி கடனுக்கு வட்டி குறைப்பு !
* 1 சதவீதம் 11-7-2016 முதல் குறைக்கப்படுகிறது.
* அடுக்குமாடிக் கட்டிடப் பணி 2016 ஆகஸ்ட்
மாதம் துவங்கப்படும் !
Telecom Society reduced the rate of interest as per our request on 24-06-16.
We thank the Board of Directors of our Telecom cooperative society for reducing
the rate of interest by 1% from the existing 16% as on date in the board's meeting held today. This will be effective from today
(11-07-2016).
The work for the construction of Flats at Vellanur near Avadi will begin in the month of August 2016 positively after fulfilling all the formalities and completing the required procedures.
It may be recalled that our National Forum leaders had met the management of Telecom Society on 24-06-16 and presented a memorandum on the demands including reduction of rate of
interest and beginning of Flat Construction work at Vellanur land.
As per today's decision the rate of interest will be 15%
with effective from 11-07-2016.