WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, December 12

எச்.எஸ்.பி.சி. வங்கிக் கணக்குகளில் இந்தியர்களின் ரூ.4479 கோடி கருப்புப் பணம்....


இந்தியாவுக்குள் பதுக்கப்பட்டுள்ள ரூ.14,958 கோடி கருப்பு பணம் குறித்து தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. | கோப்புப் படம்.
எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்கள் தரப்பில் ரூ.4479 கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய மிகப்பெரிய வெளிப்பாடாக எச்.எஸ்.பி.சி. பட்டியலில் ரூ.4,479 கோடிக்கு பணம் இருக்கும் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வருமான வரித்துறை இந்த கணக்கு வைத்திருப்பவர்களில் 79 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தவிர, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க இயக்குனரகம் இந்தியாவுக்குள் கணக்கில் வராத ரூ.14,957.95 கோடி கருப்புப் பணம் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tuesday, December 9

உடம்பில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்........

இயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றிலும் பல ஆச்சரியங்கள் பொதிந்துள்ளன. அதிலும் மனித உடலோ அதிசயங்கள் நிரம்பிய ஒன்று. கடுமையாக உழைக்கும் இதயம் முதல், நம்பவே முடியாத மூளை வரை நமது உடலைப் பற்றி வியக்க வைக்கும் தகவல்கள்
உலகிலேயே, ஏன் பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களிலேயே மனித மூளைதான் மிகவும் புத்திக்கூர்மை கொண்டது. மனிதர்களின் வாழ்க்கையில் 2 வயதில்தான் மூளை செல்கள் அதிகபட்சமாக இருக்கின்றன. அதேநேரம், மனித மூளை முதிர்ச்சி அடைய 20 ஆண்டுகள் தேவைப்படுகின்றன.

Sunday, December 7



சென்னையில் நடந்த அம்பேத்கர் நினைவு நாள் 

கூட்டத்தில் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் 

பங்கேற்று NFTCL சங்கத்தின் 

350-க்கும் மேற்பட்ட உருபினர்களுக்கு 

அடையாள அட்டை வழுங்கி, அம்பேத்கர் 

நினைவுகளை சிறப்பித்தார்.

சமூக உணர்வுடன் செயல்படும் சில ஆட்டோ ஓட்டுநர்கள்

+  

ஆட்டோராஜா சங்கத்தின் திருவான்மியூர் உறுப்பினர்கள். | படம்: எம்.கருணாகரன்.
ஆட்டோராஜா சங்கத்தின் திருவான்மியூர் உறுப்பினர்கள். | படம்: எம்.கருணாகரன்.
சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மீதான தவறான படிமம் ஓரளவுக்கு அகலுமாறு சில ஆட்டோ ஓட்டுநர்கள் சமுதாய நல்லுணர்வுடன் செயல்படுகின்றனர்.

ஆட்டோராஜா அமைப்பைச் சேர்ந்த பி.ஜெயக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவதினால் ஏற்படும் ஆபத்தை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.

காரணம், அவரது மகன், விபத்துக்குள்ளாகி சக்கர நாற்காலியில் முடங்கியுள்ளார்.. தன் மகனுக்கு ஏற்பட்ட விபத்து பற்றி அவர் கூறும்போது, “பணியிலிருந்து என் மகன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த வாகனம் ஒன்று மோத, முதுகுத் தண்டில் முறிவு ஏற்பட்டது. அன்று என் மகனின் வண்டி மீது மோதிய அந்த நபர் குடித்திருக்காவிட்டால் இன்று என் மகன் சக்கர நாற்காலியில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.” என்றார்.

இவர் தனது பயணிகளிடத்திலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதலின் ஆபத்தை விளக்குவதோடு, விபத்தில் முடங்கியவர்களுக்கும் ஆறுதல் அளித்துப் பேசி வருவதாக தெரிவித்தார்.

Saturday, December 6

State Bank of India Recruitment 2014 - 6425 Clerical Cadre Vacancies......!

State Bank of India Recruitment 2014 - 6425 Clerical Cadre Vacancies
Click Here to More Details: http://www.tamilanguide.in/
Qualification: B.E/B.Tech, M.E/M.Tech, BCA, MBA, B.Sc, Any Degree, Any Graduation `
Last Date For Apply Online: 09.12.2014




நெல்சன் மண்டேலா உலகை விட்டு மறைந்ததன் நினைவு நாள்...........!

தென் ஆப்ரிக்க மக்களுக்காகப் போராடி பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா இந்த உலகை விட்டு மறைந்ததன் முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மடிபா என்று தென் ஆப்ரிக்க மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய அவரது மனைவி கிரேசா மிக்கேல், மறைந்தது அவரது உடல்தான். அவரது ஆத்மா என்றும் நிலையானது. அது என்றுமே இந்நாட்டு மக்களோடு நிலைத்திருக்கும் என்றார்.
நாடு முழுவதும் அவரது நினைவு தினத்தை ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்தனர்.

Saturday, November 15

இரங்கல்...

மாநிலச் செயலர்  தோழர் பட்டாபிராமன்
அவர்களின் தாயார்  (14.11.14 )இயற்கை
எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்  கொள்கிறோம்.
அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

NFPTE -இன் வைரவிழாவை ஒட்டி தோழர்.மதிவாணன் எழுதி உள்ள கட்டுரை...


நமது தாய் சங்கமாம் NFPTE 24/11/1954. அன்று தொடங்கப்பட்டது. அதன்வைரவிழாவை கொண்டாடுவதில் நாமெல்லாம் பெருமை கொள்வோம்.
1954 முதல் 2014 வரை NFPTE ல் இந்த 60 ஆண்டுகளில் தபால் – தந்திஎன்பது 1985 ஆண்டில் தபால் துறை தனியாகவும் தொலைதொடர்புஎன்பது தனியாகவும் பிரிக்கப்பட்டது.  2000 ஆண்டில் BSNL அரசின்நிறுவனமாக மாற்றம் பெற்றது. எது எப்படி என்றாலும் NFTE – BSNLசங்கம் தான் NFPTE சங்கத்தின் நேரடி வாரிசு என்பதில் பெருமைகொள்கிறோம்.
அன்றைய தொலைதொடர்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின்மூளையில் உதிர்ந்த அபூர்வ குழந்தை தான் NFPTE என்று சொன்னால்அது மிகையல்ல. 1949 போராட்டத்தின் கசப்பான அனுபவத்தின்காரணமாக தபால், RMS, தந்தி, பொறியியல் பிரிவு மற்றும்நிர்வாகப்பிரிவு இணைக்ப்பட்டும் ஒரு சம்மேளனமாக உருவானது.
இந்திய அளவிலான அனைத்து ஒன்பது சங்கத்திற்கும் கட்டாயமானஆனால் எந்த ஒரு சங்கத்தையும் நீக்கவோ (அ) விலக்கவோ இயலாதசம்மேளனமாக NFPTE விளங்கியது. இணைந்த ஒன்பது கரங்கள் என்பதுஒன்பது சங்கத்தை குறிப்பதாக அமைந்திருந்தது. அந்த புனிதமானஇணைந்த ஒன்பது கரங்கள் சின்னத்தை  NFTE –BSNL இன்றைக்கும்தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1954க்கும் 1969 க்கும் இடைப்பட்ட 15 ஆண்டுகளாக NFPTE மட்டுமே P & Tதுறையின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருந்தது. P & T தொழிற்சங்கவரலாற்றின் இந்த பொற்காலத்தில் தான் சாதனைகள்பலநிறைவேற்றப்பட்டன. மூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு என்றபாரபட்சம் நீக்கப்பட்டது.  அனைத்து சலுகைகளும்வலிமையான போராட்டதின் காரணமாக பெறப்பட்டு அது அனைத்துதொழிலாளிகளுக்குமானதாக மாற்றம் பெற்றது.
குறைந்தபட்ச ஊதியமாம் ரூபாய் 314/- என்பதை வலியுறுத்திதேசியம்தழுவிய  வேலைநிறுத்தம் 19-09-1968ல் அனைத்து மத்திய அரசுஊழியர்களின் சார்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு எதிராகஅன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அதிகார வன்முறையைகட்டவிழ்த்துவிட்டார். தற்காலிக ஊழியர்கள் சுமார் 50,000 பேர் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். NFPTE குறிப்பாக E-3 & E-4 சங்க தோழர்கள்பழிவாங்குதலுக்கு ஆளானார்கள். NFPTE அங்கீகாரம் பறிக்கப்பட்டது.அரசின் ஆதரவுடன் INTUC துவங்கப்பட்டது. 1969 ல்ஆளும் அரசின்ஆசைக்குழந்தையாக FNPTO உதயமானது P&T தொழிற்சங்க வரலாற்றில் அது ஒரு கறுப்புதினம் என்றால் அது மிகையல்ல.
அனைத்தையும் தாண்டி தோழர்.ஞானையா மற்றும் ஓ.பி.குப்தாஇவர்களின் 6 நாள் உண்ணாவிரத போராட்டத்தின் (19-09-1969 TO 25-09-1969)அடிப்படையில் தொழிற்சங்க அங்கீகாரம் மீண்டும் பெறப்பட்டது.
1975 ல் இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலத்தில் பிறதொழிற்சங்கங்கள் அரசின் அடக்குமுறைக்கு பயந்து இருந்தபோதுபஞ்சப்படி மற்றும் பிற சலுகைகளுக்காக NFPTE தொடர்ந்து போராடியது.எரிச்சலுற்ற இந்திராகாந்தி அம்மையார் NFPTE மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். நமது தொழிற்சங்க பத்திரிக்கையாம்
 “P&T Labour“ அரசின் தொழிலாளர் விரோதகொள்கைகளை விமர்சித்து எழுதியது என்ற காரணத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவகங்களில் வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டது என்பதை பெருமையுடன் இன்றும் நினைத்துப் பார்க்கலாம்.
ஜனதா அரசின் காலத்தில், BPTEF என்ற BMS ஆதரவு தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்றது. அதன் பிறகு வந்த அரசுகள் எல்லாம் அரசியல் அடிப்படையில் தொழிலாளர்களை பிரித்து வைத்த காரணத்தால் ஒட்டுமொத்த கூட்டுபேர சக்தி என்பது பலவீனப்பட்டது.
தோழர்கள் ஞானையா,  குப்தா போன்றவர்களின் தலைமையில் போனஸ் என்பது நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ED மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது. பதவி உயர்வு, ஒரு லட்சம் ஊழியர்கள் பணிநிரந்தரம், RTP நிரந்தரம் JCM அமைப்பு போன்ற பல்வேறு சாதனைகள் உண்மையாயின. NFPTE -ன் கடைசி கவுன்சில் கூட்டம் கொல்கத்தாவில் 1986 ம் ஆண்டு நடைபற்றது.
நான் அதன் பிரதிநிதியாக அந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் கவுன்சிலர் என்ற முறையில் மூன்றாம் பிரிவு ஊழியர் சங்கத்தின் சார்பாக பங்கேற்றேன். என்னுடன் தோழர்.சுப்பராயன் மற்றும் தோழர் ஈரோடு மாலி ஆகியோர் கலந்து கொண்டதை பெருமையுடன் நினைவு கூர்கிறேன்..  

தோழர்.ஓ.பி.குப்தா  (NFPTE-ஐ உருவாக்கிய சிற்பி) அந்த கூட்டத்தில் அதனை பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த தலைவர்கள் கே.எல்.மோசா, ஆதி மற்றும் என்.ஜே.ஐயர் ஆகியோரிடம் பிரிக்க கூடாது என இருகரம் கூப்பி மன்றாடியது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

ஆனால் அந்த துயரநாளும் வந்தது. 1986-இல்  NFPTE சங்கம் NFTE  andNFPE என்ற இரண்டாக உடைந்தது.நான் கடைசி வரை அது உடையாது என்ற அசையாத நம்பிக்கையுடன் இருந்தேன்.

NFPTE என்பது இப்போது வரலாறு ஆகிவிட்ட்து. 60 வருடங்களை நாம் கடந்து விட்டோம்.  NFPTE  இன்று இல்லாவிட்டாலும் அதன் சுவையான நினைவுகளையும் நடத்திய போராட்டங்களையும் இந்த வைரவிழா நடக்கும் நாளில் நினைவு கூர்வோம். அந்த பாரம்பரியங்களோடு தொழிலாளியின் ஒற்றுமைக்கு அது கொடுக்கின்ற செய்தியாக எடுத்துக் கொள்வோம்..  

---சி.கே.மதிவாணன்
மத்திய செயற்குழு உறுப்பினர்
NFTE-BSNL
தமிழாக்கம்:காஞ்சி வலைதளம்