WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, December 7

சமூக உணர்வுடன் செயல்படும் சில ஆட்டோ ஓட்டுநர்கள்

+  

ஆட்டோராஜா சங்கத்தின் திருவான்மியூர் உறுப்பினர்கள். | படம்: எம்.கருணாகரன்.
ஆட்டோராஜா சங்கத்தின் திருவான்மியூர் உறுப்பினர்கள். | படம்: எம்.கருணாகரன்.
சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மீதான தவறான படிமம் ஓரளவுக்கு அகலுமாறு சில ஆட்டோ ஓட்டுநர்கள் சமுதாய நல்லுணர்வுடன் செயல்படுகின்றனர்.

ஆட்டோராஜா அமைப்பைச் சேர்ந்த பி.ஜெயக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவதினால் ஏற்படும் ஆபத்தை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.

காரணம், அவரது மகன், விபத்துக்குள்ளாகி சக்கர நாற்காலியில் முடங்கியுள்ளார்.. தன் மகனுக்கு ஏற்பட்ட விபத்து பற்றி அவர் கூறும்போது, “பணியிலிருந்து என் மகன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த வாகனம் ஒன்று மோத, முதுகுத் தண்டில் முறிவு ஏற்பட்டது. அன்று என் மகனின் வண்டி மீது மோதிய அந்த நபர் குடித்திருக்காவிட்டால் இன்று என் மகன் சக்கர நாற்காலியில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.” என்றார்.

இவர் தனது பயணிகளிடத்திலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதலின் ஆபத்தை விளக்குவதோடு, விபத்தில் முடங்கியவர்களுக்கும் ஆறுதல் அளித்துப் பேசி வருவதாக தெரிவித்தார்.

Saturday, December 6

State Bank of India Recruitment 2014 - 6425 Clerical Cadre Vacancies......!

State Bank of India Recruitment 2014 - 6425 Clerical Cadre Vacancies
Click Here to More Details: http://www.tamilanguide.in/
Qualification: B.E/B.Tech, M.E/M.Tech, BCA, MBA, B.Sc, Any Degree, Any Graduation `
Last Date For Apply Online: 09.12.2014




நெல்சன் மண்டேலா உலகை விட்டு மறைந்ததன் நினைவு நாள்...........!

தென் ஆப்ரிக்க மக்களுக்காகப் போராடி பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா இந்த உலகை விட்டு மறைந்ததன் முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மடிபா என்று தென் ஆப்ரிக்க மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய அவரது மனைவி கிரேசா மிக்கேல், மறைந்தது அவரது உடல்தான். அவரது ஆத்மா என்றும் நிலையானது. அது என்றுமே இந்நாட்டு மக்களோடு நிலைத்திருக்கும் என்றார்.
நாடு முழுவதும் அவரது நினைவு தினத்தை ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்தனர்.

Saturday, November 15

இரங்கல்...

மாநிலச் செயலர்  தோழர் பட்டாபிராமன்
அவர்களின் தாயார்  (14.11.14 )இயற்கை
எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்  கொள்கிறோம்.
அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

NFPTE -இன் வைரவிழாவை ஒட்டி தோழர்.மதிவாணன் எழுதி உள்ள கட்டுரை...


நமது தாய் சங்கமாம் NFPTE 24/11/1954. அன்று தொடங்கப்பட்டதுஅதன்வைரவிழாவை கொண்டாடுவதில் நாமெல்லாம் பெருமை கொள்வோம்.
1954 முதல் 2014 வரை NFPTE ல் இந்த 60 ஆண்டுகளில் தபால் – தந்திஎன்பது 1985 ஆண்டில் தபால் துறை தனியாகவும் தொலைதொடர்புஎன்பது தனியாகவும் பிரிக்கப்பட்டது.  2000 ஆண்டில் BSNL அரசின்நிறுவனமாக மாற்றம் பெற்றதுஎது எப்படி என்றாலும் NFTE – BSNLசங்கம் தான் NFPTE சங்கத்தின் நேரடி வாரிசு என்பதில் பெருமைகொள்கிறோம்.
அன்றைய தொலைதொடர்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின்மூளையில் உதிர்ந்த அபூர்வ குழந்தை தான் NFPTE என்று சொன்னால்அது மிகையல்ல. 1949 போராட்டத்தின் கசப்பான அனுபவத்தின்காரணமாக தபால், RMS, தந்திபொறியியல் பிரிவு மற்றும்நிர்வாகப்பிரிவு இணைக்ப்பட்டும் ஒரு சம்மேளனமாக உருவானது.
இந்திய அளவிலான அனைத்து ஒன்பது சங்கத்திற்கும் கட்டாயமானஆனால் எந்த ஒரு சங்கத்தையும் நீக்கவோ (விலக்கவோ இயலாதசம்மேளனமாக NFPTE விளங்கியதுஇணைந்த ஒன்பது கரங்கள் என்பதுஒன்பது சங்கத்தை குறிப்பதாக அமைந்திருந்ததுஅந்த புனிதமானஇணைந்த ஒன்பது கரங்கள் சின்னத்தை  NFTE –BSNL இன்றைக்கும்தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1954க்கும் 1969 க்கும் இடைப்பட்ட 15 ஆண்டுகளாக NFPTE மட்டுமே P & Tதுறையின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருந்தது. P & T தொழிற்சங்கவரலாற்றின் இந்த பொற்காலத்தில் தான் சாதனைகள்பலநிறைவேற்றப்பட்டனமூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு என்றபாரபட்சம் நீக்கப்பட்டது.  அனைத்து சலுகைகளும்வலிமையான போராட்டதின் காரணமாக பெறப்பட்டு அது அனைத்துதொழிலாளிகளுக்குமானதாக மாற்றம் பெற்றது.
குறைந்தபட்ச ஊதியமாம் ரூபாய் 314/- என்பதை வலியுறுத்திதேசியம்தழுவிய  வேலைநிறுத்தம் 19-09-1968ல் அனைத்து மத்திய அரசுஊழியர்களின் சார்பாக நடைபெற்றதுபோராட்டத்திற்கு எதிராகஅன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அதிகார வன்முறையைகட்டவிழ்த்துவிட்டார்தற்காலிக ஊழியர்கள் சுமார் 50,000 பேர் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்NFPTE குறிப்பாக E-3 & E-4 சங்க தோழர்கள்பழிவாங்குதலுக்கு ஆளானார்கள்NFPTE அங்கீகாரம் பறிக்கப்பட்டது.அரசின் ஆதரவுடன் INTUC துவங்கப்பட்டது. 1969 ல்ஆளும் அரசின்ஆசைக்குழந்தையாக FNPTO உதயமானது P&T தொழிற்சங்க வரலாற்றில் அது ஒரு கறுப்புதினம் என்றால் அது மிகையல்ல.
அனைத்தையும் தாண்டி தோழர்.ஞானையா மற்றும் ஓ.பி.குப்தாஇவர்களின் 6 நாள் உண்ணாவிரத போராட்டத்தின் (19-09-1969 TO 25-09-1969)அடிப்படையில் தொழிற்சங்க அங்கீகாரம் மீண்டும் பெறப்பட்டது.
1975 ல் இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலத்தில் பிறதொழிற்சங்கங்கள் அரசின் அடக்குமுறைக்கு பயந்து இருந்தபோதுபஞ்சப்படி மற்றும் பிற சலுகைகளுக்காக NFPTE தொடர்ந்து போராடியது.எரிச்சலுற்ற இந்திராகாந்தி அம்மையார் NFPTE மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார்நமது தொழிற்சங்க பத்திரிக்கையாம்
 “P&T Labour“ அரசின் தொழிலாளர் விரோதகொள்கைகளை விமர்சித்து எழுதியது என்ற காரணத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவகங்களில் வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டது என்பதை பெருமையுடன் இன்றும் நினைத்துப் பார்க்கலாம்.
ஜனதா அரசின் காலத்தில், BPTEF என்ற BMS ஆதரவு தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்றதுஅதன் பிறகு வந்த அரசுகள் எல்லாம் அரசியல் அடிப்படையில் தொழிலாளர்களை பிரித்து வைத்த காரணத்தால் ஒட்டுமொத்த கூட்டுபேர சக்தி என்பது பலவீனப்பட்டது.
தோழர்கள் ஞானையா,  குப்தா போன்றவர்களின் தலைமையில் போனஸ் என்பது நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ED மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டதுபதவி உயர்வுஒரு லட்சம் ஊழியர்கள் பணிநிரந்தரம், RTP நிரந்தரம் JCM அமைப்பு போன்ற பல்வேறு சாதனைகள் உண்மையாயினNFPTE -ன் கடைசி கவுன்சில் கூட்டம் கொல்கத்தாவில் 1986 ம் ஆண்டு நடைபற்றது.
நான் அதன் பிரதிநிதியாக அந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் கவுன்சிலர் என்ற முறையில் மூன்றாம் பிரிவு ஊழியர் சங்கத்தின் சார்பாக பங்கேற்றேன். என்னுடன் தோழர்.சுப்பராயன் மற்றும் தோழர் ஈரோடு மாலி ஆகியோர் கலந்து கொண்டதை பெருமையுடன் நினைவு கூர்கிறேன்..  

தோழர்.ஓ.பி.குப்தா  (NFPTE-ஐ உருவாக்கிய சிற்பி) அந்த கூட்டத்தில் அதனை பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த தலைவர்கள் கே.எல்.மோசா, ஆதி மற்றும் என்.ஜே.ஐயர் ஆகியோரிடம் பிரிக்க கூடாது என இருகரம் கூப்பி மன்றாடியது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

ஆனால் அந்த துயரநாளும் வந்தது. 1986-இல்  NFPTE சங்கம் NFTE  andNFPE என்ற இரண்டாக உடைந்தது.நான் கடைசி வரை அது உடையாது என்ற அசையாத நம்பிக்கையுடன் இருந்தேன்.

NFPTE என்பது இப்போது வரலாறு ஆகிவிட்ட்து. 60 வருடங்களை நாம் கடந்து விட்டோம்.  NFPTE  இன்று இல்லாவிட்டாலும் அதன் சுவையான நினைவுகளையும் நடத்திய போராட்டங்களையும் இந்த வைரவிழா நடக்கும் நாளில் நினைவு கூர்வோம். அந்த பாரம்பரியங்களோடு தொழிலாளியின் ஒற்றுமைக்கு அது கொடுக்கின்ற செய்தியாக எடுத்துக் கொள்வோம்..  

---சி.கே.மதிவாணன்
மத்திய செயற்குழு உறுப்பினர்
NFTE-BSNL
தமிழாக்கம்:காஞ்சி வலைதளம்        

Thursday, November 13

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்.

அதிசயம் ஆனால் உண்மை .
1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
2)அதை இரண்டால் பெருக்கவும்..
3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...
அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்.
மற்ற (2 digit) எண் உங்களின் வயது..!

2010ஆம் ஆண்டு மசில் போலி என்கவுண்டர் : 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை; சலுகைகள் பறிப்பு.....


2010ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் மசில் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 3 இளைஞர்களை சுட்டுக் கொன்ற வழக்கை விசாரித்து வந்த ராணுவ நீதிமன்றம், 2 மூத்த அதிகாரிகள் உட்பட 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாதிகள் என்று கூறி அப்பாவி இளைஞர்கள் 3 பேரை என்கவுண்டர் செய்த ராணுவ வீரர்களின் இந்த மோசமான செயலால் காஷ்மீர் எல்லையில் சுமார் 2 மாதங்களுக்கும் மேல் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இது குறித்து விசாரித்த ராணுவ நீதிமன்றம், சம்பவத்தில் ஈடுபட்ட 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், அவர்களது அரசு சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

Wednesday, November 12

மவுலானா எனும் மகத்தான இந்தியர் .......


நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்
பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.
பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
நீதிமன்றத்தில் கர்ஜனை
1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:
“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் கிடைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.
எழுச்சியூட்டும் எழுத்து
மேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.
பிரிவினையை ஏற்காதவர்
1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.
பிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.
பாகிஸ்தான் எதிர்ப்பு
சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.
பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.
2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.
- சேயன் இப்ராகிம், அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).