நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, 2014-15 நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட 74 உள்கட்டமைப்பு திட்டங்களில் 23 சதவீதம் அதாவது 17 திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இந்த 17 திட்டங்களுக்காக வங்கிகள் கொடுத்த ரூ.54,056.75 கோடி கடன்தொகை வாராக்கடனாக நிலுவையில் உள்ளது. இந்த கடனில் ரூ.1,308 கோடி அசலும், ரூ.548.37 கோடி வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
வாராக்கடன் அதிகரிப்பை தடுப்பதிலும், கடனை வசூல் செய்வதிலும் வங்கிகள் தோல்வி அடைந்துவிட்டன. தொழில்துறை பின்னடைவு, லாபம் குறைந்தது, நிறுவனங்கள் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் தாமதம், எதிர்பார்ப்பைக் காட்டிலும் திட்டச்செலவு அதிகரிப்பு போன்றவைகள் வராக்கடன் அதிகரிப்புக்கு காரணங்களாகும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment