WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, May 30

சேலம் மாவட்ட மாநாடு...??????

எம்.எஸ், கஜேந்திரன், தேவராஜன், வெங்கட், ராஜா என்ற மூத்தோர் குழாம் துணைநின்று தோள் கொடுக்கட்டும்
.............................தோழர் பட்டாபி மாநில செயலர் ............
              இலவச ஆலோசனை மிகவும் நன்று .....!

Sunday, May 24

கார் வாங்க வட்டி 0% விவசாயத்துக்கோ 8%....?????



நமது உழவர்களின் வாழ்நிலை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது, தொழிலாளிகளைப் போல ஒரு புறம் உடல் உழைப்பு செய்ய வேண்டும், அதேநேரம் ஒரு முதலாளியைப் போலத் தனது சாகுபடிக்கான மூலதனத்தையும் அவர்களே திரட்டிக்கொள்ள வேண்டும். வங்கிகளின் பட்டியலில் வேளாண்மைக்குத் தரப்படும் கடன் கடைசி இடத்தில்தான் இருக்கும்.

ஏழே நிமிடங்களில் 0% வட்டிக்குக் கார் வாங்கக் கடன் கிடைக்கும் (சந்தேகம் இருந்தால் இணையதளங்களைப் பாருங்கள்), ஆனால் வேளாண்மை கடனுக்கான வட்டி 8 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக உயருகிறது! விவசாயிகளுக்கு நம் நாடு அளிக்கும் மதிப்பு இதுதான்.

உழவன் சாகுபடிக்கான அனைத்து இடுபொருள்களையும் வாங்க வேண்டும், அதை வளர்த்துப் பயிராக்கிக் களை எடுப்பது முதல் அறுவடைவரைக்கும் செலவு செய்ய வேண்டும். அதைச் சந்தையில் கொண்டுபோய் விற்கும்போது, அதை அடிமாட்டு விலை கேட்கும் தரகர்களிடம் விற்க வேண்டும். விற்ற பின்னர் கந்து வட்டிக்காரர்களுக்குப் பத்து வட்டிக்கு மேல் அழ வேண்டும். பின் எப்படி அவர்களுடைய பிள்ளைகளைப் படிக்கவைப்பது, இதர தேவைகளை நிறைவு செய்வது?

மாவோயிஸ்ட் குறித்த தீர்ப்பு: காங்கிரஸ், இந்திய கம்யூ. வரவேற்பு....!


"மாவோயிஸ்டாக இருப்பது என்பதே குற்றமாகிவிட முடியாது' என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

"இந்திய அரசியலைப்புச் சட்டத்துடன் மாவோயிஸக் கொள்கைகள் ஒத்துப்போகாவிட்டாலும் மாவோயிஸ்டாக இருப்பது என்பதே குற்றமாகிவிடாது; மாவோயிஸ்ட் என்பதால் மட்டுமே ஒருவரை காவல் துறை கைது செய்ய முடியாது; ஒரு தனி நபரோ அல்லது இயக்கமோ வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஒருவர் தனக்கு விருப்பமான கருத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை என்பது அடிப்படையான மனித உரிமையாகும்' என்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்தத் தீர்ப்பில் கூறியிருந்தது.

ஷியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கேரள சிறப்பு காவல் படையினர் கைது செய்திருந்தனர். அவரை விடுதலை செய்து, நீதிபதி முகமது முஸ்தாக் மேற்கண்டவாறு தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ சனிக்கிழமை கூறியதாவது:

மாவோயிஸ்டாக இருப்பது என்பதே குற்றமாகிவிட முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. காங்கிரஸின் கருத்தும் இதுதான்.

ஆனால், மாவோயிஸ்டுகளாக உள்ள சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கேரள காவல் துறை கைது செய்கிறது. ஒருவர் கொண்டுள்ள கொள்கையின் அடிப்படையில் யாரையும் கைது செய்வதில்லை.

வறுமை காரணமாகவே மாவோயிஸம் வளர்கிறது. பின் தங்கிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள உதவும்.

மாவோயிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், அதை கொள்கை ரீதியாக எதிர்கொள்ளவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் பி.சி.சாக்கோ.

டி.ராஜா கருத்து: கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா கூறியதாவது:

குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்றுகிறார் என்பதாலேயே ஒருவரை குற்றவாளியாகவோ, தேசத் துரோகியாகவோ சித்திரிக்க முடியாது. கொள்கைகள் அடிப்படையில் குற்றத்தை தீர்மானிக்க முடியுமெனில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சட்டத்துக்கு உட்பட்ட அமைப்பாகவே கருத முடியாது. ஏனெனில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் "ஹிந்துராஷ்டிரம்' கொள்கையானது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று ராஜா கூறினார்.

Friday, May 15

தோழர்களே....
மிக நீண்ட தாமதத்திற்குப் பின் நடத்தப்பட்ட 
JCM தேசியக்குழுக்கூட்டத்தில்
ஆகட்டும் பார்க்கலாம் என்ற பாணியிலேயே
பல பிரச்சினைகள் கையாளப்பட்டுள்ளன. 
தலமட்டங்கள்  முதல்  தலைமை மட்டங்கள் வரை
கூட்டு ஆலோசனைக்குழு கூட்டங்கள்
பெயரளவுக்கே நடத்தப்படுகின்றன. 
இந்நிலை மாற வேண்டும்.  
நியாயமான ஊழியர் பிரச்சினைகள் 
உரிய முறையில் பேசித்தீர்க்கப்பட வேண்டும் 
என்பதுவே ஊழியர்  எதிர்பார்ப்பு.
...........NFTE KARAIKUDI............

Thursday, May 14



பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.54,000 கோடி......!


நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, 2014-15  நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட 74 உள்கட்டமைப்பு திட்டங்களில் 23 சதவீதம் அதாவது 17 திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இந்த 17 திட்டங்களுக்காக  வங்கிகள் கொடுத்த ரூ.54,056.75 கோடி கடன்தொகை வாராக்கடனாக நிலுவையில் உள்ளது. இந்த கடனில் ரூ.1,308 கோடி அசலும், ரூ.548.37 கோடி  வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
வாராக்கடன் அதிகரிப்பை தடுப்பதிலும், கடனை வசூல் செய்வதிலும் வங்கிகள் தோல்வி அடைந்துவிட்டன. தொழில்துறை பின்னடைவு, லாபம்  குறைந்தது, நிறுவனங்கள் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் தாமதம், எதிர்பார்ப்பைக் காட்டிலும் திட்டச்செலவு அதிகரிப்பு போன்றவைகள்  வராக்கடன் அதிகரிப்புக்கு காரணங்களாகும் என்று அவர் தெரிவித்தார்.

Wednesday, May 13

தோழர்களே...
ERP என்னும் இந்த சாத்தானின் வேதத்தால் 
நாம் படும் துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.. 
மாவட்டத்தில் பணி புரியும் அதிகாரிகள் 
கூலாக மாநிலத்தைக் கைகாட்டுவதும்.. 
மாநில அலுவலகத்தில் தொலைபேசியை தொடாமல் இருப்பதும்...
நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது...
வெறும் ஆர்ப்பாட்டங்களும்.. 
அம்பலப்படுத்துதலும்..
சாத்தானின் வேதத்தை சரி செய்து விடாது...

உறுதியான போராட்டம்...
ஒன்றுபட்ட போராட்டம்..
தலமட்டங்களில் போராட்டம்...
தலைநகரில் போராட்டம்....
இதுவே...
சாத்தானை அசைக்கும் சாத்தியக்கூறாகும்..
தயாராவோம் தோழர்களே...
........ NFTE KARAIKUDI....... 

Saturday, May 9

கோவை மாவட்ட மாநாட்டின் .....
புதிய நிர்வாகிகளுக்கு .......
நமது  வாழ்த்துக்கள்......