WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, March 7

மகளிர் தினம் கொண்டபடும் வேளையில் புதுச்சேரி விடுதலை........




சர்வதேச மகளிர் தினம் கொண்டபடும் வேளையில் புதுச்சேரி விடுதலை.தொழிற்சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் வாழ்நாள் முழுவதும் பெண்களின் உரிமைக்காகவும், முனேற்றதிற்கும் பாடுபட்வீ ரமகளிர்களை போற்றிவனங்குவோம்.
படத்தில் முதலில் உள்ளவர் ஆவனியாம்மா, முதலியார்பேட்டை பகுதியில் வாழ்ந்த இவர் ரோடியர் பஞ்சாலை தொழிலாளர். பஞ்சாலைகளில் பணியாற்றிய பெண்களை திரட்டி பிரெஞ்சு அரசுக்கு எதிராக போராடியவர். விடுதலைக்கு பின் தொழிற்சங்க ,மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முன்னிற்று பணியாற்றியவர். தனது சொத்துக்களை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எழுதிவைதவர்.
படத்தில் இரண்டாவதாக இருப்பவர் தையல்நாயகி அம்மா .இவர் திருச்சி பொன்மலை பகுதியை சார்ந்தவர்.புதுவையில் பெண்கள் அமைபை உருவாக்கிட இங்கு அனுபபட்டவர். புதுவை ராஜிய மாதர் சங்க தலைவியாகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுபினரகவும் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர்.
படத்தில் முன்றாவதாக இருப்பவர் பச்சை அம்மா. ரோடியர் மில் தொழிலாளியாக பணியாற்றிய இவர் தொழிலாளர் உரிமைக்காக நிர்வாகத்திடம் பட்டம் பெற்ற வழக்கறிஞர் போல் செயல் பட்டதால் இவரை அவுகம்மா என்று அழைத்தனர்.
படத்தில் அடுத்து இடம்பெற்று இருப்பவர் சரஸ்வதி சுப்பையா . தன் கணவரின் வழயில் தன்னை இன்ணைத்து கொண்டு தன வாழ்நாள் முழுவதும் விடுதலை இயக்கத்தில் தொடங்கி , மாதர் இயக்கத்திலும் பொதுஉடமை இயக்கத்திலும் முன்னின்று செயல்பட்டவர். புதுச்சேரி இன் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்,முதல் நகரமன்ற துணை தலைவர் என்ற பெருமைக்குரிய வர்.
தன் கணவர் சுப்பையா விருப்ப படி பல கோடி மதிப்புடைய இல்லத்தினை அரசிடம் ஒப்படைத்து மாணவர்களுக்கான ஆய்வு இல்லம் தொடங்க காரணமாக இருந்தவர்.
இத்தகைய பல தனனலமற்ற பெண்களின் வீரவரலாறு விடுதலை இயக்க வரலாற்றில் ஒளிந்து கிடக்கின்றன. அவை வெளி கொண்டுவரப்படவேண்டும்.

No comments:

Post a Comment