WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Saturday, March 28
Friday, March 27
Thursday, March 26
Wednesday, March 25
Sunday, March 22
மாா்ச் 23
இந்திய சுதந்திர போரட்ட வீரர்கள்
பகத்சிங் ராஜகுரு சுகதேவ்
நினைவு தினம்........
மாலை 7 மணி லாகூர் சிறை முழுக்க மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. காற்று வழியே தூக்கிலிடும் இச்செய்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளின் காதுகளை எட்டியது. வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் மௌனம் காத்தனர்.
“இன்குலாப் ஜிந்தாபாத்”, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கத்துடன் விடைபெற்றனர் வீரமறவர்கள்.....
இந்த இடிமுழக்கத்திற்கு ஈடுகொடுத்து, லாகூர் சிறையின் மதிற்சுவர்களில் பட்டு தெறித்தது பல்லாயிரம் தோழர்களின் பதில் முழக்கம். ஒரு மணி நேரம் லாகூர் சிறையே அதிரும் அளவுக்கு கோஷம் போட்ட பின்னர், சொல்லி வைத்தாற் போன்று மீண்டும் அமைதி நிலவியது!.....
ஆம் காற்றில் கலந்த பேராசை இன்னும் நம் இதயத்தை எரியவிட்டுக் கொண்டேயிருக்கிறது!.....

Saturday, March 21
காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டம் ரத்து? : மத்திய அரசு முடிவு....!
காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த திட்டத்தையே கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி சுமார் 766 சதுரகிமீ பரப்பளவிற்கு நிலக்கரி படிமத்தின் மீது மீத்தேன் வாயு படர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை வணிக ரீதியாக எடுத்து விற்பனை செய்வதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டும் டெண்டர் வழங்கியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயத்தொழிலை அடிப்படையாக கொண்டுள்ள திருவாரூர், தஞ்சை விளைநிலங்கள் தண்ணீரின்றி பாதிக்கப்படும். குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு இத்திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது. இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளிக்கையில், மீத்தேன் திட்டத்திற்கு உரிமம் பெற்றுள்ள நிறுவனம் குறைந்தபட்ச பணியை கூட தொடங்கவில்லை. மத்திய அரசு கேட்ட சில ஆவணங்களையும், வங்கி உத்தரவாதம் உள்ளிட்டவற்றையும் ஒப்படைக்கவில்லை. கான்டிராக்ட் விதிமுறைகளை மீறியதால் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்யும் என்று கூறியுள்ளார்.
இது மீத்தேன் திட்டத்தை கைவிடும் நடவடிக்கையின் முதல் கட்டம் என்று கூறப்படுகிறது. விரைவில் மீத்தேன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறும்போது, Òதமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கடந்த ஜனவரி 28ம் தேதியன்று விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு பலன்கிடைத்துள்ளது. விரைவில் மீத்தேன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்Ó என்றார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகி டாக்டர் பாரதிச்செல்வன் கூறுகையில், Òஅரசாங்கம் இனி காவிரி படுகையில் மீத்தேன்திட்டம் செயல்படுத்தமாட்டோம் என்று அறிவிக்கவேண்டும்Ó என்றார்.
Friday, March 20
எல்லோருமே எங்களைக் கைவிட்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது. இலங்கைக்குத் திரும்ப நினைப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டு வரவும். »
Wednesday, March 18
பாஜக ஆட்சி சரியல்ல: தர்ணாவில் மோடியின் சகோதரர் சாடல்.........
மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக அரசு பூர்த்தி செய்யவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் விமர்சனம் செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய நியாயவிலை கடை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டார் மோடியின் சகோதரர் பிரஹலாத். இவர் இந்தக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆவார்.
"நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்தோம், பெரும்பான்மையையும் பெற்றன, ஆனாலும், ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்வி இது என்றே நான் நினக்கிறேன்.
சகோதரருக்கு எதிராக சகோதரர் காட்டும் எதிர்ப்பு அல்ல இது. என்னைப் பொறுத்தவரையில் என் சகோதரர் மோடி வழிபாட்டுக்குரியவர்தான். நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். ஆனால், நான் செய்யும் தொழில் இந்த மேடையில் வந்து என் சகோதரருக்கு முன்னால் எனது குரலை எழுப்ப வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலை ஒழிப்போம் என்ற செய்தியுடன் மோடி பிரதமராக இருக்கும் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இப்போது வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் பிரச்சினைகளுக்கு பாஜக அரசு பராமுகமாக இருந்தால், டெல்லியில் பாஜக என்ன சந்தித்ததோ அதனை உ.பி., பிஹார் ஆகிய மாநிலங்களிலும் சந்திக்க நேரிடும். நான் பாஜக உறுப்பினர்தான், ஆனாலும், தேசிய கட்சிகளின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நான் போராடுவேன்.
பிரச்சினைகளை தீர்ப்பதில் பாஜக அரசுக்கு உறுதிப்பாடு இல்லை" என்று கூறினார் மோடியின் சகோதரர் பிரஹலாத்.

Monday, March 16
சிற்பங்கள் தொன்மங்களைச் சித்திரிக்கின்றன: செந்தீ நடராசன் நேர்காணல்......!
செந்தீ நடராசன், கல்வெட்டு ஆய்வாளர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர். ‘பண்பாட்டுத் தளங்கள் வழியே’ ஆய்வுக் கட்டுரை நூல் இவரது முக்கியமான ஆக்கம். ‘தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ கல்வெட்டுத் துறைக்கே சிறப்புச் செய்யும் நூல். அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் நாகர்கோவிலில் வசிக்கிறார்.
அறிவியல் பட்டதாரியான நீங்கள் இத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?
என் கல்லூரித் தோழரான எழுத்தாளர் பொன்னீலன் மூலமாக நாட்டார் வழக்காற்றியலாளர் நா.வானமாமலையின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம்தான் வரலாற்றுத் துறையில் ஆர்வம் வந்தது. கல்வெட்டுத் துறைக்கு வரக் காரணம் தே. கோபால். அவர்தான் கல்வெட்டு எழுத்துகளை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார்.
கல்வெட்டுகளில் என்ன மாதிரியான எழுத்து வடிவங்கள் இருக்கின்றன?
முதலில் மொழியையும் அதன் வரி வடிவத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். வரி வடிவத்தைப் பொறுத்தவரை தமிழுக்கு ஆதியில் இருந்த வடிவம் பிராமி. அதற்கு முன்னால் வேறு வடிவம் இருந்திருக் கலாம். ஆனால் நமக்கு பிராமி வரிவடிவம்தான் சான்றாகக் கிடைக்கிறது. கி.பி.2-ம் நூற்றாண்டுக்குப் பிறகு வட்டெழுத்து வரிவடிவம் வருகிறது.
கிடைக்கப் பெற்றவற்றுள் பழமையான தமிழ் பிராமி வரிவடிவம் எது?
பழனிக்கு அருகில் பொருந்தலில் தொல்லியலாளர் கா.ராஜன் மேற்கொண்ட அகழாய்வு மண் ஜாடியில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த ஜாடியின் மேற்பரப்பில் தமிழ் பிராமி வரிவடிவம் எழுத்துகள் இருந்தன. அதற்குள்ளிருந்த நெல் மணிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வுசெய்தபோது அது கி.மு. 450 க்கும் கி.மு. 490 க்கும் இடையிலானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டு பிடிக்கப்பட்டவற்றில் இதுதான் பழமையானது.
வரிவடிவங்கள் கல்வெட்டுகளுக்காக உருவாக்கப்பட்டவையா?
தோலில் எழுதியிருக்கிறார்கள். துணியில் எழுதியிருக்கிறார்கள். ஓலைச்சுவடியில் எழுதியிருக் கிறார்கள். ஆனால் இவற்றின் ஆயுள் காலம் மிகக் குறைவுதான். கல்வெட்டுகள் அப்படிப்பட்டதல்ல. அவற்றை இப்போதும் நம்மால் பார்க்க முடிகிறது.
தமிழ் கிரந்த வரிவடிவம் எப்போது வருகிறது?
கி.பி.5-ம் நூற்றாண்டில் வருகிறது. சமணர்களின் மொழியான சூரகேணியும் பவுத்தர்களின் மொழியான பாலியும் பிராகிருதக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தப் பிராகிருத மொழிகளைச் சொல்ல தமிழ் எழுத்துகளில் ஒலி போதாது. பிராகிருதத்தின் உயிர் எழுத்து, மெய் எழுத்துத் தன்மைகள் வேறு. ‘எ’ குறில் கிடையாது. ‘ஒ’ குறில் கிடையாது. தமிழில் ‘க’வர்க்கம் ‘ச’வர்க்கம் கிடையாது. ஆக இந்த எழுத்துகளையும் சேர்த்துத் தமிழில் எழுத உருவானதுதான் கிரந்த வரிவடிவம்.
இந்தக் காலகட்டத்தில்தான் சமணம் இங்கு வருகிறதா?
கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே சமணர்கள் வந்துவிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் வைசாக முனிவர் தலைமையிலான சமணர்கள் சோழ, பாண்டிய நாடுகளில் சமணத்தைப் பரப்பினர். கி.மு. 3-ம் நூற்றாண்டில் அசோகர் மூலம் கிழக்குக் கடற்கரை ஓரமாகப் பவுத்தம் வருகிறது. தமிழ்ச் சங்க காலம் எனச் சொல்லப்படும் காலகட்டத்திலேயே தமிழர்களுக்கு சமணமும் பவுத்தமும் தெரியும்.
அதற்கு முன்பு இங்கு என்ன சமயம் இருந்தது?
எல்லாச் சமயங்களும் இருந்தன. பொதுவான சமயம் என்ற ஒன்று இல்லை. சங்க இலக்கியத்தில் யாகங்களைச் செய்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வைதீகம் இருந்திருக்கிறது. சமணமும் பவுத்தமும் ஆசிவகமும் இருந்திருக்கினறன. பின்னால் சங்க இலக்கியத்தை சைவர்கள் தொகுக்கும்போது சமண, பவுத்த தடயங்களை நீக்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதையும் மீறிச் சில இடங்களில் இவற்றைப் பார்க்க முடிகிறது.
உதாரணம் சொல்ல முடியுமா?
‘யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா’எனும் கணியன் பூங்குன்றனாரின் வரிகள் ஆசிவக சமயத்தின் கோட்பாட்டைப் பிரதிபலிப்பது. ‘நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவ ராடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ எனும் ஒளவையின் பாடல் பவுத்ததின் தம்மபதத்தை அப்படியே சொல்கிறது. சங்க இலக்கியத்தில் சிவன், விஷ்ணு என்ற சொற்களே இல்லை. ஒரு இடத்தில் முக்கண்ணன் என்ற சித்திரிப்பு வருகிறது. அது இந்திரனைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். அவனுக்கும் மூன்று கண்கள்.
தற்காலத் தமிழ் வரிவடிவம் எப்போது உருவானது?
கி.பி.5-ம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து வரிவடிவம்தான் கல்வெட்டுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் அதே காலகட்டத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கிட்டதட்ட இன்றைக்குள்ள தமிழ் வரிவடிவத்தில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழர்களின் எழுச்சிக்குப் பிறகு தமிழ் வரிவடிவம் பரவலாக்கம் பெறுகிறது. அது ராஜராஜ சோழனின் காலகட்டம்.
தமிழ்நாடு முழுக்க சிற்பங்களை ஆய்வு செய்திருக்கிறீர்கள். சிற்பங்களை வைத்து வரலாற்றை அறிந்துகொள்ள முடியுமா?
சிற்பங்களும் காலம் காட்டும் கருவிகளாகும். சிற்பங்கள் வழியாகத் தொன்மங்களும் வெளிப்படும். சுசீந்திரம் கோயிலின் கோபுர அடிவாரத்தில் ஒரே ஒரு சட்டகத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிற்பங்கள் அழகுணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்துபவை அல்ல. குகைகளில் ஒரு மானை வேட்டையாடுவதைப் போல ஓவியங்களை வரைகிறான். நாளை அவன் வேட்டையாடப் போவதை முன்னால் செய்து பார்த்துக்கொள்கிறான். அதை மாந்திரிகச் சடங்கு என்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கென ஒரு தனித்துவமான கோயில் கட்டிடக் கலை என ஒன்றைச் சொல்ல முடியுமா?
அப்படிச் சொல்வது சரியல்ல. தென்னாட்டுக் கலை என்று பிரிக்கலாம். கோயில்களைப் பொறுத்தவரை அது காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டு வந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. திருவட்டார் கோயிலில் உள்ள ஒரு மூன்று வரிக் கல்வெட்டு, குலோத்துங்கச் சோழனின் மெய்கீர்த்தியைச் சொல்கிறது. அதற்கு முன்பு உள்ள கல்வெட்டுகள் எங்கே போயின? ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கோயில் வேலைப்பாடுகளைக் கலைத்து மீண்டு வேலை பார்த்திருக்கிறார்கள். தமிழகக் கோயில் கட்டிடக் கலையில் ஆந்திரம், கன்னடம், தமிழகம், பல்லவம் எனப் பலவிதமான பங்களிப்புகள் உள்ளன.
சிற்பக் கலையையும் தனித்துவப்படுத்த முடியாது அல்லவா?
காலகட்டத்தைப் பொறுத்துத் தனித்துவப்படுத்த லாம். கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வளை சிற்பங்கள் கிடையாது. நேரடியாக நிற்கக்கூடிய சிற்பங்கள்தான் உணடு. விஜயநகரப் பேரரசு காலகட்டச் சிற்பங்கள் மிகவும் வளைந்தவை.
தென்னாட்டுக் கோயில்களில் மட்டும் காணக் கிடைக்கும் யாளி எதைக் குறிக்கிறது?
அது ஒரு தொன்ம, கற்பனை விலங்குதான். பிரம்மாண்டமான ஒரு உருவச் சித்திரிப்புதான் யாளி. சிங்க முகமும், யானையின் துதிக்கையும் கொண்டு இருக்கும் யாளியின் பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்காக அதன் காலடியில் ஒரு யானையும் செதுக்கப்பட்டிருக்கும். இதில் சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி எனப் பல வகை உண்டு.
சிற்பங்கள் வரலாற்றைச் சித்திரிக்க முயல்கின்றனவா?
சிற்பங்கள் வழிபாட்டு வடிவங்களாக இருக் கின்றன. இதன் வழியாக ஒரு சமய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும். கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தாயார் சந்நிதிகள் கிடையாது. சரஸ்வதி சிற்பங்கள் 11-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கிடைக்கின்றன. அதற்கு முன்பு சரஸ்வதி வழிபாடே கிடையாது. வாக் தேவி என்னும் பவுத்த தெய்வத்தைப் பின்னால் இந்து சமயம் உள்வாங்கிக் கொள்கிறது. மேலும் வழிபாட்டு தெய்வமாக மூதேவி இருந்திருக்கிறாள் என்பதையும் இன்றைக்குக் கிடைக்கும் சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது.
கல்வெட்டு அடிப்படையிலான வரலாறு ஓரளவு முழுமை பெற்றிருக்கிறதா?
இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய கல்வெட்டுகள் இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல இன்னும் படிக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றில் சில காணாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசுதான் இதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

Sunday, March 15
நிலம் கையகப்படுத்துதல்: மீண்டும் ஒரு விடுதலைப் போர்?
மனிதர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் நிலம் நிலையானது, நீடித்து இருப்பது, அதனால்தான் தொல்காப்பியர், நிலத்தை முதற்பொருளாக வைத்தார். வரலாறு என்பது நிலத்தைக் கைப்பற்றும் கதையைக் கூறுவதாகத்தான் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது.
இந்தியா என்ற நாடு உருவாகாதபோதே, பல முடியாட்சி தேசங்களாக இருந்தபோதே, நிலத்தைப் பிடிப்பதற்கான படையெடுப்புகள் நடந்தேறின. இந்தப் போர்களும் பூசல்களும் இன்னும் முடிந்தபாடில்லை. பிரித்தானியர்கள் இந்தியாவின் மீது பாய்ந்ததற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, செல்வம் கொழிக்கும் விளைச்சல் நிலங்களும் வளமான இயற்கை வளமும்.
வரலாறு என்ன சொல்கிறது?
வெறும் வணிகம் செய்ய வந்தவர்கள் இந்தியா முழுமையையும் தங்களது கைகளுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று அன்றைக்கு இருந்த அக்கறையற்ற அரச குடும்பங்கள் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கும்பணி, அடிமை இந்தியாவுக்கு அச்சாரம் போட்டது.
இன்றைக்குக் கொழித்துக்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் வேதாந்தா கும்பணியும் (இந்தியர் நடத்துவதுதான்) அப்படித்தானே செயல்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
ஒரு சாதாரண வணிக நிறுவனம் ஒரு நாட்டையே எப்படி அபகரிக்க முடியும் என்று அப்பாவித்தனமாகக் கேட்டால், அதற்கு வரலாற்றுப் பக்கங்களைத்தான் பதிலாகக் கொடுக்க முடியும். நவீன இந்தியாவின் வரலாறுகூட நில உரிமைப் போராட்டத்தில் இருந்துதான் தொடங்குகிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அல்லது நிலத்தைப் பறித்துக் கும்பணிகளுக்குக் கொடுக்கும் சட்டம் ஏதோ நமது ஆட்சியாளர்களின் மூளையில் திடீரென உதித்தது என்று நினைக்க வேண்டாம். வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள்!
விடுதலைப் போரின் வேர்
பிஹார் மாநிலம் அதோ சம்ரான், விளைச்சல் கொழிக்கும் மண். இப்பகுதி கங்கையின் கிளை ஆறுகளில் ஒன்றான பூரி கந்தகி என்ற ஆறும், பாகுபதி என்ற ஆறும் பாயும் பகுதி. இங்கே வழக்கமான இன்னல்களுக்கு இடையே உழவர்கள் உணவுப் பயிர்களை விளைவித்து, ஓரளவாவது வாழ்ந்துவந்தனர். ஏனெனில், இவர்களது நிலங்கள் ஜமீன்தார் முறை மூலமாகக் கைவிட்டுப் போய்விட்டன.
உழவர்கள் ஜமீன்தார்களுக்கு வரி கொடுத்த காலம். மேலும் ஓர் இடி இறங்கியது உழவர்கள் மீது. உழவர்கள் பயிர் செய்த நிலங்களைப் பிடுங்கிய ஜமீன்தார்கள், சாய அவுரி சாகுபடி செய்யப் பிரித்தானியக் கும்பணிகளுக்குக் கொடுத்தனர். வெடித்தது போராட்டம். காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய முதல் போராட்டமும் அதுவே. இன்றைய இந்தியாவின் உருவாக்கத்தில் முதலிடம் பெற்றதும் அந்தப் போராட்டமே.
காலம் காலமாக இதேபோன்று ரேபரேலி பகுதியில் நடந்த மிகக் கடுமையான ஆவாத் உழவர் போராட்டத்தில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பண்ணையார்களின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தங்களது பண்ணைகளைக் கைவிட்டுப் பண்ணையாளர்கள் ஓடித் தலைமறைவாகினர்.
எனவே, நிலத்தைப் பிடுங்கிக் கும்பணிகளின் கையில் கொடுப்பது என்பது ஏதோ முந்தைய காங்கிரஸ், இன்றைய பா.ஜ.க. ஆட்சிகளின் கொள்கையன்று, அது ஆங்கிலேயர்கள் ஆக்கி தந்த அருமருந்து. அதை நமது 'அக்கறையுள்ள' ஆட்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள்.
புதிய இந்தியாவை உருவாக்க அரும்பாடுபட்ட அன்றைய காங்கிரஸ்காரர்கள், பொதுவுடமையாளர்கள், பார்வர்டு பிளாக் அமைப்பினர் என்று பலரும் உழவர்களின் நிலங்களைப் பாதுகாக்கவே போராடினார்கள். 1936-ம் ஆண்டு சகஜானந்த சரஸ்வதி தலைமையில் கூடிய 'அனைத்து இந்தியக் கிஸான் சபை' கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பட்டியலைப் பாருங்கள்.
நில உச்சவரம்பு
இந்திய விடுதலை கனிந்து கொண்டிருந்த காலம். நிலத்தைப் பிரித்துக் கொடுத்தால்தான் மக்கள் அமைதியுடனும் வளத்தோடும் வாழ முடியும் என்ற உண்மை தலைவர்களுக்குப் புரிந்தது. அதன் விளைவாகப் பொருளியல் அறிஞரான குமரப்பா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு 1939-ம் ஆண்டிலேயே தனது அறிக்கையைக் கொடுத்தது. அது இன்றளவிலும் மிகவும் முற்போக்கான நிலச் சீர்திருத்த அறிக்கை.
அவர் நாடு முழுவதும் சுற்றியலைந்து பல தகவல்களைத் திரட்டி அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, 'சிறிய நிலவுடமையே அதிக விளைச்சலைத் தரும். நிலக் குவியல் விளைச்சலை அதிகரிக்காததோடு, மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்திச் சமூகக் கலகங்களுக்கு இட்டுச் செல்லும் என்று விளக்கினார். அதை அப்படியே நேருவும் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஐந்தாண்டுத் திட்டத்தில் அது எதிரொலித்தது. நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் குறிப்பாக நிலத்தில் உழுபவர்களுக்கு ஓரளவு நிலம் கிடைத்தது.
உழுபவருக்கே நிலம்
மேற்கு வங்கம், கேரளத்தில் குறிப்பிடத்தக்க அளவும் தமிழகத்தில் ஓரளவும் இது நடைபெற்றது. காங்கிரஸ் ஆண்ட மற்ற மாநிலங்களில்கூட இது நிறைவேற்றப்படவில்லை. இது நடக்காத பல இடங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திராவில் போராட்டம் வலுப்பட்டது.
பூமிதான இயக்கம் என்று விநோபா பாவே அமைதி முறையில் நாடு முழுவதும் நிலங்களைப் பெற்று நிலமற்றவர்களுக்கு வழங்க முயன்றார். அதுவும் துயரமான முறையில், போதிய அளவு பகிர்ந்தளிக்கப்படாமல் முடிந்துபோனது.
தமிழகத்தில் தஞ்சைப் பகுதியில் நிலவுடைமைப் போராட்டம் வலுவாகத் தோன்றியது. பொதுவுடமை இயக்கம் இதை முன்னின்று நடத்தியது. சர்வோதயத் தலைவர் ஜெகநாதன் 'உழுபவனுக்கே நிலம்' என்று கூறி உழுபவர்களுக்கு நிலம் பெறும் இயக்கத்தை நடத்தினார்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
Friday, March 13
'பாலியல் குற்றங்களைவிட மாட்டிறைச்சி தடை மீறலுக்கு அபராதம் அதிகம்'
ஏழைகளின் புரதச் சத்துமிக்க உணவாக திகழும் மாட்டிறைச்சிக்கு மகாராஷ்டிரத்தில் தடை விதிக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணமூல் எம்.பி., இந்த தடையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை விட பாலியல் பலாத்கார வழக்குகளுக்கு விதிக்கப்படும் தொகை குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரிணமூல் எம்.பி. தெரீக் ஓப்ரியன் மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்திருப்பது குறித்து பேசும்போது, "மாட்டிறைச்சி விவகாரத்தை நாம் மத சார்ந்த கோணத்தில் பார்க்கக் கூடாது. இந்த தடையால் சிறுபான்மையினர், தலீத் மக்கள் என தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சார்ந்த பலர் பாதிக்கப்படுவார்கள்.
வடகிழக்கு மாநில மக்கள் அனைவரும் மாட்டிறைச்சியை தங்களது முக்கிய உணவாக கொண்டிருக்கின்றனர். ஏழைகளின் புரதச் சத்துமிக்க உணவாக திகழும் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்கக் கூடியதாக இல்லை.
பலாத்கார குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனையை விட இந்த தடை உத்தரவு பயங்கரமானதாக உள்ளது. அதில், வழங்கப்படும் அபராதத் தொகையைக் காட்டிலும் மாட்டிறைச்சி தடைக்கு அபராதம் அதிகமாக உள்ளது.
இந்த தடையால் மற்ற இறைச்சிகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கோழிக்கறி, மீன் உள்ளிட்டவைகளின் விலை ஏற்கெனவே அந்த மாநிலத்தில் உயர்ந்துவிட்ட நிலையில் இந்தத் தடை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் ஏற்கெனவே 55 சதவீத அளவுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சட்டத்தால் வயது முதிர்ந்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் வேறொரு விலங்குக்கு தடை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட கடைகளில் விற்பனை செய்ய அவர்கள் அனுமதித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
ஓப்ரியன்னின் கருத்துக்கு பாஜக எம்.பிக்.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "உறுப்பினர்களுக்கு எந்த விவகாரத்தையும் எழுப்பும் உரிமை உள்ளது. ஆனால் அதனை முறையாக எழுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் விவாதத்துக்கு அனுமதிக்கக் கூடாது" என்று மாநிலங்களவை அரசியல் வவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி தெரிவித்தார்.
Tuesday, March 10
Saturday, March 7
மகளிர் தினம் கொண்டபடும் வேளையில் புதுச்சேரி விடுதலை........
சர்வதேச மகளிர் தினம் கொண்டபடும் வேளையில் புதுச்சேரி விடுதலை.தொழிற்சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் வாழ்நாள் முழுவதும் பெண்களின் உரிமைக்காகவும், முனேற்றதிற்கும் பாடுபட்வீ ரமகளிர்களை போற்றிவனங்குவோம்.
படத்தில் முதலில் உள்ளவர் ஆவனியாம்மா, முதலியார்பேட்டை பகுதியில் வாழ்ந்த இவர் ரோடியர் பஞ்சாலை தொழிலாளர். பஞ்சாலைகளில் பணியாற்றிய பெண்களை திரட்டி பிரெஞ்சு அரசுக்கு எதிராக போராடியவர். விடுதலைக்கு பின் தொழிற்சங்க ,மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முன்னிற்று பணியாற்றியவர். தனது சொத்துக்களை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எழுதிவைதவர்.
படத்தில் இரண்டாவதாக இருப்பவர் தையல்நாயகி அம்மா .இவர் திருச்சி பொன்மலை பகுதியை சார்ந்தவர்.புதுவையில் பெண்கள் அமைபை உருவாக்கிட இங்கு அனுபபட்டவர். புதுவை ராஜிய மாதர் சங்க தலைவியாகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுபினரகவும் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர்.
படத்தில் முன்றாவதாக இருப்பவர் பச்சை அம்மா. ரோடியர் மில் தொழிலாளியாக பணியாற்றிய இவர் தொழிலாளர் உரிமைக்காக நிர்வாகத்திடம் பட்டம் பெற்ற வழக்கறிஞர் போல் செயல் பட்டதால் இவரை அவுகம்மா என்று அழைத்தனர்.
படத்தில் அடுத்து இடம்பெற்று இருப்பவர் சரஸ்வதி சுப்பையா . தன் கணவரின் வழயில் தன்னை இன்ணைத்து கொண்டு தன வாழ்நாள் முழுவதும் விடுதலை இயக்கத்தில் தொடங்கி , மாதர் இயக்கத்திலும் பொதுஉடமை இயக்கத்திலும் முன்னின்று செயல்பட்டவர். புதுச்சேரி இன் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்,முதல் நகரமன்ற துணை தலைவர் என்ற பெருமைக்குரிய வர்.
தன் கணவர் சுப்பையா விருப்ப படி பல கோடி மதிப்புடைய இல்லத்தினை அரசிடம் ஒப்படைத்து மாணவர்களுக்கான ஆய்வு இல்லம் தொடங்க காரணமாக இருந்தவர்.
இத்தகைய பல தனனலமற்ற பெண்களின் வீரவரலாறு விடுதலை இயக்க வரலாற்றில் ஒளிந்து கிடக்கின்றன. அவை வெளி கொண்டுவரப்படவேண்டும்.

புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு இந்தியா உதவியது: இலங்கை பிரதமர் ரணில் பேட்டி
"இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ச அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது"»
தொடர்புடையவை: இலங்கைக்கே கச்சத்தீவு சொந்தம்... அத்துமீறும் மீனவர்களை சுடுவதில் தவறில்லை: ரணில் பேட்டி
Tuesday, March 3
மதவாதம்: துணைக்கண்டத்தின் சாபக்கேடு......!!!!
சுதந்திரச் சிந்தனையாளர்கள் எல்லோருக்குமே விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். வங்க தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வலைப்பதிவருமான அவிஜித் ராய் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மதஅடிப்படைவாதிகளால் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். வங்கதேசம், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையைப் பெற்றிருந்த அவர், தனது மனைவி ரஃபிதா இஸ்லாமுடன் நடந்து சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். தடுக்க வந்த ரஃபிதாவும் தாக்கப் பட்டுப் படுகாயம் அடைந்திருக்கிறார்.
மதப் பழமைவாதிகளைக் கண்டித்தும், மனித உரிமைகளை வலியுறுத்தியும் தொடர்ந்து இணையத்தில் எழுதிவந்ததற்காக அவிஜித் ராய் கொல்லப்பட்டிருக்கிறார். ‘அன்சர் பாங்ளா 7’ என்ற அமைப்பினர், நாங்கள்தான் கொன்றோம் என்று கூறியிருக்கிறார்கள். 1971-ல் வங்கதேசம் புதிய நாடாகப் பிறப்பதற்கு முன்னால் நடந்த அக்கிரமங்களுக்குக் காரணமானவர்களை அவர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவந்தார். அவர்களைத் தண்டிக்காமல் விடக் கூடாது என்று இடைவிடாது வலியுறுத்திவந்தார். இதனால், மதத்தை இழிவுபடுத்தி அவர் எழுதிவிட்டதாகவும் அதற்காகத்தான் தாங்கள் அவரைக் கொன்றதாகவும் கொலையாளிகள் தரப்பு தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் அமலில் இருப்பதைப் போல, மதத்தை அவமதிப்பவர் களைக் கடுமையாகத் தண்டிக்க ‘மதநிந்தனைத் தடைச்சட்டம்’ கொண்டுவரப்பட வேண்டும் என்று மதவாத அமைப்பு ஒன்று வங்க தேசத்தை வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அந்த அமைப்புதான் டாக்காவிலும் சிட்டகாங்கிலும் சிறுபான்மைச் சமூகத்தவர் மீதும் அவர்களுடைய வர்த்தக நிறுவனங்கள், தொழிலகங்கள் மீதும் தாக்குதல் நடத்திச் சேதப்படுத்தியது. பெண்களை அச்சுறுத்தியது.
மதவாதிகளைக் கண்டிப்பவர்கள் கொல்லப்படுவது ஒன்றும் வங்கதேசத்துக்குப் புதிதல்ல. ஹுமாயூன் ஆசாத், ரஜீப் ஹைதர், சகோர்-ரூணி போன்றோரும் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது மேலும் தொடருமானால், இருண்ட காலமொன்றை நோக்கி வங்கதேசம் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. வங்கதேச அரசுக்குக் கருத்துரிமையிலும் மனித உரிமையிலும் உண்மை யிலேயே நம்பிக்கை இருந்தால், அவிஜித் ராயைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இல்லாவிட்டால், நாளடைவில் மதவாதிகளின் கை ஓங்கி வங்கதேசம் சீரழிய நேரிடும். மதவாதிகள் அரசியல்ரீதியாக வலுப்பெறுவதை அனுமதித்தால் ஏற்கெனவே மிகவும் பின்தங்கியிருக்கும் நாடு மேலும் மோசமாகிவிடும்.
துணைக்கண்டத்துக்கே சாபக்கேடாகிவிட்டது மதவாதம். சகிப்பின்மை தனது புதிய உச்சத்தை எட்டிவிடுமோ என்ற அச்சத்தை பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமல்லாமல் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களும் ஏற்படுத்துகின்றன. வங்கதேசத்தில் அவிஜித் ராய் படுகொலை செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால், இந்தியாவில் இடதுசாரியான பன்சாரே சுட்டுக்கொல்லப்பட்டது, 2013-ல் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டது எல்லாம் கருத்துரிமைகள் ஒடுக்கப்படும் கொடுங்காலத்தில் நாம் வாழ்கிறோமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
வளர்ச்சியும் மதவாதமும் எதிரெதிர் துருவங்கள். ஒன்றுக்கொன்று முட்டுக்கட்டை போடுபவை. மதவாதத்துக்கும் சகிப்பின்மைக்கும் துணைக்கண்டம் காலம்காலமாகக் கொடுத்த பலிதான் வளர்ச்சி என்பதை உணரும் தருணத்தில்தான் முன்னேற்றத்தின் வெளிச்சம் நம்மீது விழும். துணைக்கண்டம் முன்னே செல்ல வேண்டிய நேரமிது!
போக்குவரத்து ஊழியர்கள் மோதல்: ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
போக்குவரத்து ஊழியர்களின் 12-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. »
Subscribe to:
Posts (Atom)