WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, June 11

தொலைபேசி இணைப்பில் முறைகேடு: அடுத்த கட்ட விசாரணைக்கு தயாராகிறது சி .பி.ஐ........


பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. அடுத்தக் கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தில்லிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்த விவரம்: கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், தனது வீடு இருக்கும் ராஜாஅண்ணாமலைபுரம் போட்கிளப் வீட்டுக்கு வழங்கப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக சன் டி.வி. நிறுவனத்துக்கு வழங்கியதாக புகார் கூறப்பட்டது. இதற்காக தயாநிதிமாறன் தனது வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்துக்கு (சுமார் 4 கிலோ மீட்டர் தூரம்) பைபர் கேபிள் அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு மூலம் ரூ. 400 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, புது தில்லியில் சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக தயாநிதிமாறன் வீடு உள்பட பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர், இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வாரமாக சென்னை தியாகராய நகர் கிரி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தில்லியைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை செய்தனர்.
குறிப்பாக, சன் டி.வி. நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் சன் டி.வி.யின் தலைமை நிர்வாகியாக இருந்த சரத்குமார் ரெட்டி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டது.
தில்லிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்: இந்நிலையில் சென்னையில் முகாமிட்டிருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கள்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள், விசாரணையில் பங்கேற்றவர்கள் அளித்த வாக்குமூலத்தையும் எடுத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் அடுத்தக் கட்ட விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கவே தில்லிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதிமாறன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment