நேற்று மதியம் அறிவித்த மானியமில்லாத சிலிண்டர்களின் விலை உயர்வு இரவுக்குள் திரும்பப் பெறக் காரணம் இமாச்சல் மாநில தேர்தல்தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
மானியமில்லாத சிலிண்டர்களின் விலையில் ரூ.26.50 காசுகளை உயர்த்தி எண்ணெய் நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டது. இதன் காரணமாக மானியமில்லாத ஒரு சிலிண்டரின் விலை ரூ.922.50 என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் வரும் ஞாயிறன்று இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சிலிண்டர் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
மேலும், தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், இந்த சமயத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தினால், அது மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கச் செய்யும் என்றும் காங்கிரஸ் அரசு நினைத்திருக்கலாம். எனவே விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது தற்காலிகமான முடிவு தான் என்பதே உண்மை.
No comments:
Post a Comment