WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, September 20

சொஸைட்டி வட்டிப் பிரச்னையும் BSNLEUவின் கபட நாடகமும்..........

சொஸைட்டி வட்டிப் பிரச்னையும் BSNLEUவின் கபட நாடகமும்:சென்ற முறை,  சொஸைட்டி  BSNLEUவின்  முழுக் கட்டுப்பாட்டில் இருந்தபோது சாதாரண கடனுக்கான  வட்டி விகிதம் 16.5 சதம். அப்போது, வட்டியை குறைக்க வேண்டும் என்று நமது சங்க ஆதரவு   டைரக்டர்கள் மற்றும்  RGB உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, " ஐயோ அது சாத்தியமில்லை ! வட்டியை குறைத்தால்  சொஸைட்டி திவாலாகிவிடும் ! " என்று  பேசியவர்தான் முன்னாள் இயக்குனர்( BSNLEU) அன்புமணி. சென்ற RGB  தேர்தலுக்கு பிறகு  காட்சிகள் மாறின. 
BSNLEU கூட்டணி சொஸைட்டி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. நமது  கூட்டணியின் வசம் சொஸைட்டி நிர்வாகம் வந்தது. ஒவ்வொரு சதமாக, இருமுறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. மொத்தத்தில்  வட்டி விகிதம் 14.5 சதமாக ஆனது. உறுப்பினர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.சென்ற ஆண்டு நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியைப்  பிடித்தார். நல்ல காலம் பிறக்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்.ஆனால், நாட்டு  மக்களுக்கு மட்டுமல்லாது, நமது  சொசைட்டி உறுப்பினர்களுக்கும் நல்ல காலம் பிறப்பதற்கு பதிலாக கெட்ட காலம் பிறந்தது. இதுநாள் வரை விவசாயிகளுக்கு வழங்கிய சலுகை வட்டியிலேயே வங்கிகள் நம்மை போன்ற ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கும் கடன் வழங்கி வந்தது. அந்த முறையை அடியோடு மாற்றி, சலுகை வட்டி தரக் கூடாது என்று உத்திரவு பிறப்பித்தது மோடி அரசு. அதன் காரணமாக நமது கூட்டுறவு சங்கமும் ஏற்கனவே  வாங்கிய கடனுக்கு அதிக வட்டி தர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. தவிர்க்க முடியாமல் உறுப்பினர்களுக்கு வழங்கிய கடனுக்கான  வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெறும் வாயை மெல்பவனுக்கு  அவல் கிடைத்ததுபோல, தோல்வியில் துவண்டு போயிருந்த அன்புமணி கம்பெனி உயிர்த்தெழுந்தது.ஆகா ! வட்டி உயர்வு அநியாயம் !!   ஏற்க மாட்டோம் !!  என்று  நீட்டி முழக்கி தமிழக சொஸைட்டி உறுப்பினர்களிடம் மட்டுமல்லாது, உறுப்பினர் அல்லாதவர்களிடமும் தங்களது வழக்கமான கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் மோடிதான் காரணம் என்று மேடை தோறும் பிரசங்கம் செய்பவர்கள்,  இந்த வட்டி உயர்வு பிரச்னையில் மட்டும் மோடி அரசின் மோசடித்தனத்தை தோலுரிக்காமல்,  அன்புமணி தலைமையில் தற்போதைய இயக்குனர் குழுவை சந்தித்து கையெழுத்து படிவத்தை கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பது ஏன் ?வட்டி குறைப்பில் இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை  இருக்குமானால்  இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது, மோடி அரசை எதிர்த்து அல்லவா ? அதை விட்டுவிட்டு, பொறுப்பேற்றவுடன் வட்டியை குறைத்த இயக்குனர் குழு மீது பாய்வது ஏன் !!வெள்ளானூர் நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு என்பது சென்ற இயக்குனர் குழு காலத்திலேயே முடிவாகிவிட்டதோடு, சென்ற தேர்தலில் ஆகப் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட்ட,  இனி மாற்ற முடியாத முடிவு....  சோழியன் குடுமி சும்மா ஆடுமா ! இவர்களது உள்நோக்கம் அடுத்த அங்கீகாரத் தேர்தல் !இந்தியாவெங்கும் பொய்ப்பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் பெற்றாலும்  தமிழகத்தில இவர்களது பாச்சா இது நாள் வரை பலிக்கவில்லை  !
 

BSNLEUவின் பன்னிரெண்டாண்டு  அங்கீகார காலத்தில் சொல்லிக்
 கொள்ள சாதனை ஏதுமில்லை...போனஸ் இல்லை,  ஊதிய 
மாற்றத்தில் குளறுபடிகள் என்ற வேதனைகளே தொடர்கதையாகி வருகிறது.  இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் ஜெயிக்க 
வேண்டும் என்ற நப்பாசையில்தான் இந்த வட்டி குறைப்பு 
ஆர்ப்பாட்டம் எனும்  கபட நாடகம்  ! 
                 BSNLEUவின்  பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம் !! 
                                 உண்மையை எடுத்துரைப்போம் !! 
        தமிழகத்தில் NFTE-BSNL சங்க வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் !! COURTESY : NFTE-BSNL KOVAI WEBSITE. 


 

Saturday, September 19

நேதாஜி ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு........

கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநகரக் காவல் துறை ஆணையர் சுரஜித் கர் புரகயாஸ்தா.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
 மத்திய அரசிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மேற்கு வங்க அரசு தன்னிடம் இருந்த ஆவணங்களை வெளியிட்டிருப்பது இந்த பிரச்னையின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
 நேதாஜி தொடர்பாக மேற்கு வங்க உள்துறையிடம் இருக்கும் 64 ரகசிய ஆவணங்களும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 11ஆம் தேதி அறிவித்திருந்தார்.
 அதன்படி, கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்கள் முன்னிலையில் அந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
 நிகழ்ச்சியில் கொல்கத்தா மாநகர காவல் துறை ஆணையர் சுரஜித் கர் புரகயாஸ்தா கலந்து கொண்டு, நேதாஜியின் உறவினர்களிடம் கணினிமயமாக்கப்பட்ட நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் கொண்ட டி.வி.டி.யை வழங்கினார்.
 கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டகத்தில் அந்த 64 ஆவணங்களும் தற்போது வைக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை முதல் அந்தக் ஆவணங்களைப் படித்துப் பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையர் சுரஜித் கர் தெரிவித்தார்.
 64 ஆவணங்களில் 55 ஆவணங்கள் கொல்கத்தா மாநகர போலீஸாரிடமும், எஞ்சிய 9 ஆவணங்கள் மாநில காவல் துறையிடமும் இருந்தன. கோப்புகளில் மொத்தம் 12 ஆயிரத்து 744 பக்கங்கள் உள்ளன.
 நேதாஜியின் குடும்பத்தினர் வரவேற்பு:
 நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டிருப்பதை அவரது குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.
 இதுகுறித்து நேதாஜியின் பேரன் சந்திர போஸ் கூறியதாவது:
 இது மிகவும் சரியான நடவடிக்கை; மத்திய அரசும் தன்னிடம் இருக்கும் 130 ரகசிய ஆவணங்களையும் வெளியிட வேண்டும். அந்த ஆவணங்களை கடந்த 70 ஆண்டு காலமாக ரகசியமாக வைத்திருந்து நாட்டு மக்களுக்கு சில தலைவர்கள் துரோகமிழைத்து விட்டனர். அந்தத் தலைவர்களை அம்பலப்படுத்தும் வகையில், ரகசிய ஆவணங்களை வெளியிடுவது மத்திய அரசின் கடமையாகும் என்றார் சந்திர போஸ்.
 நேதாஜியின் மற்றொரு குடும்ப உறுப்பினரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான கிருஷ்ணா போஸ் கூறுகையில், "ரகசிய ஆவணங்களை வெளியிட்டு, துணிச்சலான நடவடிக்கையில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அவரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது; இதுபோல் மத்திய அரசும் தன்னிடமிருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும்' என்றார்.
 பின்னணி: இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் ஓரணியாகவும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகள் மற்றொரு அணியாகவும் போரிட்டன. இதில், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் உதவியுடன் இந்தியாவுக்கு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று தரும் முயற்சியில் நேதாஜி ஈடுபட்டார்.
 இதற்காக ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் உதவியுடன் வெளிநாட்டில் இருந்த இந்தியர்களைத் திரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ.) உருவாக்கி, பிரிட்டனுடன் நேதாஜி போரிட்டார். இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகள் தோல்வியடையவே, நேதாஜியின் முயற்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டது.
 முடிவில், பிரிட்டனின் கைகளில் சிக்காமல் இருப்பதற்கு அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கு விமானம் மூலம் நேதாஜி கடந்த 1945ஆம் ஆண்டு தப்பிச் சென்றார். அப்போது நேதாஜி சென்ற விமானம் தைவான் நாட்டில் விபத்துக்குள்ளானதாகவும், இதில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை நேதாஜியின் ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் நம்ப மறுக்கின்றனர்.
 இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த ஆவணங்களை வெளியிட மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அவற்றை வெளியிட்டால், சில நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
 மத்திய அரசும் வெளியிட மம்தா வலியுறுத்தல்
 மேற்கு வங்க அரசு வெளியிட்டதுபோன்று, மத்திய அரசும் தன்னிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
 கொல்கத்தாவில் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள காவல் துறை அருங்காட்சியகத்துக்கு மம்தா வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
 ஆவணங்களில் சில கடிதங்களும் உள்ளன. அவற்றில், 1945ஆம் ஆண்டுக்குப் பிறகும் நேதாஜி உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
 அந்த ஆவணங்களை முழுவதும் படித்துப் பார்க்க எனக்கு நேரமில்லை. சிலவற்றைப் படித்தேன். 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு சில தகவல்களை இடைமறித்து எழுதப்பட்ட கடிதங்கள், ஆவணங்களைப் படித்தேன். அவை, நேதாஜியின் குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டதை சூசகமாகத் தெரிவிக்கின்றன.
 நேதாஜிக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவில்லை. இது துரதிருஷ்டவசமானதாகும். எத்தனை காலத்துக்கு இதை ரகசியமாக நீங்கள் வைத்திருப்பீர்கள்? நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் இதுவொரு தொடக்கமாகும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். மத்திய அரசும் தன்னிடமிருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றார் மம்தா.

Thursday, September 3


வருந்துகிறோம்
திருநெல்வேலி மாவட்டத் தலைவர் தோழர் பாபநாசம் அவர்களின் மனைவி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.
உற்ற துணையை இழந்து வாடும் தோழர் பாபநாசம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்..........
ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5

நம் நாட்டில் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்' எனப் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்குத்தான் வழங்கி இருக்கிறார்கள் இல்லையா? இறைவனுக்குக்கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான். அறிவு விதையை நமக்குள் விதைக்கும் ஆசிரியர்களை ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்றும், ‘ஏற்றி விடும் ஏணி’ என்றும் பெருமையாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் போற்றும் நாளான ஆசிரியர் தினம் எப்படி வந்தது?

1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதிதான் நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவரது பிறந்த தினத்தைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடிவருகிறோம். இவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு துணைத் தலைவரும்கூட.

இவர் எங்கே பிறந்தார் தெரியுமா? அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்குட்பட்ட திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி என்ற கிராமத்தில்தான் பிறந்தார். இவர் தொடக்கக் கல்வியைத் திருத்தணியில்தான் படித்தார். உயர் நிலைக் கல்வியைப் படிப்பதற்காகத் திருப்பதிக்குப் போனார். ராதாகிருஷ்ணின் சிறு வயது காலம் திருத்தணி, திருப்பதியிலேயே கழிந்தது. பள்ளிப் படிப்பை முடிந்ததும் கல்லூரிக்குப் போக வேண்டுமில்லையா?

அதற்காக அப்போது வேலூருக்குப் போனார். அங்குள்ள ஊரிஸ் கல்லூரியில்தான் ராதாகிருஷ்ணன் படித்தார். 17 வயதாகும்போது சென்னைக்கு வந்து மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குதான் தத்துவப் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் மேலும் பல உயர் படிப்புகளைப் படித்தார். இப்படி அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய படித்தார்.

அப்படி அவர் படித்ததற்குப் பலனும் கிடைத்தது. தனது திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். பின்னர் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

இளம் வயதிலேயே ராதாகிருஷ்ணன் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் நிறைய சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார். அவையெல்லாம் அவருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெருமை சேர்த்தன. பல நாடுகளிலும் அவரைக் கவுரவிக்கும் வகையில் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு தெரியுமா? 133 டாக்டர் பட்டங்கள்! இவை எல்லாமே கல்வியால் அவர் கண்ட பலன்கள்.

கல்வியில் சிறந்த விளங்கிய ராதாகிருஷ்ணன் ஆசிரியர்கள் என்றால் மிகவும் மதிப்பு கொடுப்பார். இவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சில மாணவர்களும், நண்பர்களும் அவரிடம் போய், அவரது பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அப்போது அவர் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஆசிரியர்களைப் போற்றும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதனால், 1962-ம் ஆண்டு முதல் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இத்தனைக்கும் இவர் பள்ளி ஆசிரியர்கூட இல்லை. கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். இருந்தாலும் பள்ளி, கல்லூரி என்று பேதம் இல்லாமல் எல்லாருமே ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கல்வி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வார்கள். அப்படிச் சிறப்பு பெறக் கல்வியைப் புகட்டும் உங்கள் ஆசிரியர்களைக் கொண்டாடத் தயாராகிவிட்டீர்களா?

‛இ-பைலிங்’ மூலம் வருமான வரித் தாக்கல்: 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு....



‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2014-15-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாகும். எனினும், வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 5 நாட்களுக்கு சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. இதில், மாத சம்பளக்காரர்கள், மூத்தக் குடிமக்கள், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் நேரடியாக வந்து தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், ரீபண்ட் பெறுபவர்கள் ‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் மட்டுமே வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 2

இன்று நடை பெற்ற வேலை நிறுத்த போராட்டம் ...(.புதுச்சேரி)