WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, September 20

The three day CEC of BSNLEU !!!!


vi) The CEC has directed the CHQ to take efforts for the implementation of a NewRecognition Rule in BSNL, based on Proportionate Representation. The CEChas empowered the Central Secretariat to work out other details of theproposed rule.                                                                                         

 சென்ற வாரம் ஜெய்ப்பூரில் கூடிய BSNLEU அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் புதிய அங்கீகார விதிகளை உருவாக்க வேண்டும் என்று
எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது

Sunday, September 18


உற்பத்தியுடன் இணைந்த போனஸ் திட்டத்தில் 
வராத மற்ற மத்திய அரசு ஊழியர்க்கு 30 நாள் போனஸ்
அதாவது ரூ.3454/- வழங்கப்படும். 


 BSNL ஊழியர்க்கு என்ன ? என்ற கேள்விக்கு சென்ற
ஆண்டே போனஸை அடகு வைத்துவிட்டார்கள் என்பதே!


12-09-11 அன்று BSNL நிர்வாகம் அமைச்சருக்கு சமர்பித்த
VRS திட்டம்ரூ.11000 கோடி செலவு செய்து லட்சம் ஊழியர்களை
வீட்டுக்கு அனுப்பினால் ரூ.36,000 கோடி சம்பள செலவு மிச்சம்.
அதன் மூலம், P&L Accountல் லாபத்தை காட்டி, பிறகு BSNL ஐ 
Stock Exchangeல் List செய்து Shareகளை விற்பதுதான் உள்நோக்கம்

Monday, September 12

அகில இந்திய சங்கம் மற்றும் மாநில சங்கம் அறைகூவல் MRS/ LTC க்கு   எதிரான  உத்தரவை நீக்க கோரி மாவட்ட தலை நகரில் 13-09-2011 அன்று  
                          உண்ணா விரதம், போராட்டம்        
                       (BWA) சார்பாக நடைபெறும் 
             

Sunday, September 11


வணக்கம்!!!!!
          புதிய விலாசத்தில் இருந்து பேசுகிறேன் 
                                இரா.தங்கமணி,                                               
          
     வீடு பராமரிப்புவேலைகள் காரணமாக 
       வேலைகள் அதிகம் இருந்ததால் ,

       கடந்த சில நாட்களாக உங்களை 
        சந்திக்கவில்லை ,மன்னிக்கவும் .
       இனி  புதிய விலாசத்திலிருந்து தொடரலாம் !!! 


                                   இரா .தங்கமணி NFTE(BSNL)
                                   NO,11,  ஐந்தாவது குறுக்கு 
                                   கவிக்குயில் நகர் ( சாரம்)
                                           புதுச்சேரி-605013

Saturday, August 27

ராகுலின் பேச்சால் ஹசாரே ஏமாற்றம்!!!

12வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்: ஆபத்தான நிலையில் அன்னா ஹசாரே
       
        மோசமடையும் ஹசாரே உடல்நிலை; உண்ணாவிரதம் முடிவு பெறுமா ?

Thursday, August 25

பணிந்தது மத்திய அரசு, லோக்பால் குறித்து விவாதிக்க சம்மதம்!!!

முடிவுக்கு வருகிறது ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம்!!!
            
            உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக லோக்பால் மசோதாவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்து உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நாடாளுமன்றத்தில் நாளை இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்று ஹசாரேவுக்கு எழுத்து மூலம் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 


வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு வழி செய்யும் வகையில் அவை விதி 184 ன் கீழ் லோக்பால் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், முழு அளவில் நாளை விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 


இது குறித்த நடைமுறைகளை தயாரிக்கும் பணியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரவீண் குமார் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Monday, August 22

ஓயமாட்டோம்...!!!!

பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி ஆகியோரிடம் மட்டுமே லோக்பால் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.