WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, December 25




மாநில சங்க செயற்குழு கூட்டம்.


NFTE –BSNL,  தமிழ்மாநில சங்கம்.. மாநில சங்க செயற்குழு கூட்டம். இடம்:-மாநில சங்க அலுவலகம்,கிரீம்ஸ் ரோடு, சென்னை. நாள்;-03/01/2020,  வெள்ளிக்கிழமை அறிவிப்பு தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 03/01/2020 அனறு தோழர் பி.காமராஜ், மாநிலத்தலைவர் தலைமையில் காலை சரியாக 09 00 மணிக்கு துவங்கி நடைபெறும்.. ஆய்படுபொருள் விருப்ப ஓய்வு திட்டம்-பிந்தைய நிலை. சங்க அமைப்பு –உறுப்பினர் எண்ணிக்கை, இதர பிரச்ச்னைகள் மாநில மாநாடு நிதி…                  தோழமையுடன் K. நடராஜன், தமிழ்மாநிலசெயலர் ..

Friday, October 18

உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

 18/10/2019 அன்று நாடு முழுவதும் நடைபெறவிருந்த
BSNL அனைத்து சங்க உண்ணாவிரதப் போராட்டம் 
 நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின் 
அடிப்படையில் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 17/10/2019 நடந்த பேச்சுவார்த்தையில்
NFTE, BSNLEU, AIBSNLEA , SNEA, FNTO, BSNLMS, SNATTA, 
ATM BSNL, BSNL OA  மற்றும் TOA BSNL 
ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.
காலை 10 மணியளவில் DIRECTOR(HR)
இயக்குநர்(மனிதவளம்) மற்றும் உயர் அதிகாரிகளுடனும்...
மாலை 03 மணியளவில் CMDயுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பிரச்சினைகளின் தீர்வில் நிர்வாகம் அளித்த உறுதிமொழிகளின் பேரில்
நமது உண்ணாவிரதப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் உறுதிமொழிகள்
  • செப்டம்பர் மாதச்சம்பளம் 23/10/2019 அன்று வழங்கப்படும்.
  • ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கான நிதி விரைவில் வழங்கப்படும்.
  • BSNL புத்தாக்கம் குறித்து 23/10/2019ம் தேதி வாக்கில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
  • மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவிற்குப்பின் BSNLக்கு வங்கிக்கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.


நிர்வாகத்தின் வேண்டுகோள்
  • சேவைத்தரத்தை உயர்த்த வேண்டும்.
  • செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • வருவாயை உயர்த்த வேண்டும்.


பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது மேலும் அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற செயல்களால் BSNL சேவை முற்றாக முடங்கிப்போயுள்ள நிலை நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டப்பட்டது. நிர்வாகம் ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளது. மேலும் BSNL நிர்வாகத்தின் வெளிப்படையற்ற தன்மையும்,  நடவடிக்கைகளும், தொழிற்சங்கங்களை மதிக்காத போக்கும் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. வருங்காலங்களில் நிர்வாகத்திற்கும் சங்கங்களுக்கும் இடையில் நல்லுறவு பேணப்படும் எனவும், COMMUNICATION GAP எனப்படும் பரிமாற்ற இடைவெளி இனி இருக்காது எனவும் நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட முன்னேற்றங்களின் அடிப்படையில் 18/10/2019 அன்று நடைபெறவிருந்த அகில இந்திய உண்ணாவிரத அறப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 30/10/2019 அன்று AUAB அனைத்துசங்க கூட்டமைப்பு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிமுடிவெடுக்கும்.   
                                          செய்தி..காரைக்குடி  
அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)....இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் .....  

Sunday, March 3

AIRPORTS AUTHORITY OF INDIA ஊழியர்களின் ஊதியமாற்றம்...

AIRPORTS AUTHORITY OF INDIA  
ஊழியர்களின் ஊதியமாற்றம்

AIRPORTS AUTHORITY OF INDIA நிறுவன ஊழியர்களுக்கு
01/01/2017 முதல் ஊதியமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கமான AAEU உடன் ஏற்பட்ட
ஊதிய உடன்பாட்டின் அடிப்படையில்
ஊதியமாற்றம் அளிக்கப்படுகின்றது.

AAI நிறுவனத்தில் ஏறத்தாழ 17,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வந்த AAI நிறுவனத்தை
மூடிவிட வழக்கம்போல் மத்திய அரசு முயற்சித்தது.
பலகட்டப்போராட்டங்களுக்குப் பின்
தற்போது அவர்களுக்கு ஊதியமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஊதியமாற்றத்தில் சில துளிகள்…

15 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்…
ஜனவரி 2017 அன்று 119.5 சத IDA முழுமையாக இணைக்கப்படும்.
குறைந்தபட்ச அடிப்படைச்சம்பளம் NE-1 ரூ.25,000/-
அதிகபட்ச அடிப்படைச்சம்பளம் NE-10 ரூ.40,000/-
வீட்டுவாடகைப்படி 24.. 16.. 8 சதம் என வழங்கப்படும்…
உற்பத்தியோடு இணைந்த ஊதியம் PLP வழங்கப்படும்…
பல்வேறு படிகள் தொடர்ந்து வழங்கப்படும்…
மூன்று ஆண்டுகளுக்குப்பின் நிதிநிலை ஆராயப்படும்.
லாபம் இல்லையெனில் படிகள் நிறுத்தப்படும்.

தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வந்தாலும்
AAI ஊழியர்கள் முழுமையான
15 சத ஊதியமாற்றத்தை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது.
ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில்
இருப்பதுவும் ஒரு காரணமாகும்.

முழுமையான ஊதியமாற்றத்தை அடைந்து
AAI ஊழியர்கள் இன்று இறக்கை கட்டிப்பறக்கின்றனர்…

சிறகொடிந்த BSNL ஊழியர்களோ…
AAIக்குப் பொருந்தும் அளவுகோல்
BSNLக்குப் பொருந்தாதா?
என்ற நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்….