வருத்தத்திற்குரிய புறக்கணிப்பு !
சிறிய பண்ருட்டி கிளைப் பிரச்சனையை காரணம் காட்டி
நமது நண்பர்கள் புறக்கணித்தனர். மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர்
மாற்று தீர்வை அளித்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மாநில
செயற்குழுவை புறக்கணித்து கலந்து கொள்ளாதது வருத்தத்துக்கு
உரியது.
கடலூர் வெப் சைட்டிலிருந்து
நமது மாநில சங்கத்தின் சில அமைப்பு பிரச்னைகள் காரணமாக
பல மாவட்டச் செயலர்களும் மாநில சங்க நிர்வாகிகளும்
மயிலாடுதுறையில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த செய்தியை நாம் அமைப்பு நலன் கருதிபகிரங்கமாக்க விரும்பவில்லை.
கடலூர் மாவட்டச் செயலர் அச்செய்தியை வெளியிட்டுள்ளதால்
அதற்கான காரணத்தை விளக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.

மயிலாடுதுறையில் நடந்த செயற்குழுவை ஒற்றுமையாக நடத்த
வேண்டும் என்று நாம் உளமாற விரும்பியதால்தான் அதற்காக
முன் முயற்சி எடுத்தோம். இது குறித்து மாநில சங்கத்தின் முக்கிய
நிர்வாகிகள், அமைப்பு பிரச்னைகளை செயற்குழு கூடும் முதல்
நாளன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை விவாதித்து
ஒத்த கருத்தை உருவாக்க முயற்சித்தோம்.
கோவை மாநில மாநாட்டு முடிவுக்கு எதிராக, அங்கீகாரத்
தேர்தலில் சென்னை தொலைபேசி மாவட்டத்தில் வாக்களிக்கும்
உரிமையுள்ள தோழரை தமிழ் மாநிலத்தில் உள்ள STR மாவட்ட
செயலராக தேர்ந்தெடுத்தது முறையற்ற செயல் என்று சென்னையில்
நடந்த செயற்குழு கூட்டத்திலேயே உறுதியாக எடுத்துரைத்தோம்.
அகில இந்திய சங்கமும் இப்பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று
கூறியுள்ள நிலையில் இந்த செயற்குழு கூட்டத்தில் அந்த தோழர்
மாவட்டச் செயலராக பங்கேற்காமல் இருந்தால் சுமுக சூழல்
உருவாகும் என எடுத்துரைத்தோம்.
எந்த கிளையையும் கலைத்து மாநாடு நடத்தி அங்கீகரிக்கும் உரிமை
சங்க அமைப்பு விதிகளின்படி மாவட்ட சங்கத்திற்கு கிடையாது.
பண்ருட்டி கிளையை கலைத்துவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களைக்
கொண்டு புதிய கிளையை உருவாக்கியது தவறான செயல், இந்த
நடைமுறை ஒருமுறை ஏற்கப்பட்டால் இனிமேல் மாவட்டச்
செயலர்கள் தங்கள் இஷ்டம்போல த்ன்னிச்சையாக செயலாற்றி
ஜனநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவர். ஆகவே
பண்ருட்டி கிளைச் செயலரே மாநாட்டை நடத்த அனுமதிக்க்வேண்டும்
என்ற இரண்டே இரண்டு தீர்வுகளை ஏற்க கோரினோம். ஏற்க மறுத்த
காரணத்தாலேயே, சென்னையில் நடந்தைப்போல மீண்டும் பிரச்னை
ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், செயற்குழுவில் பங்கேற்க
ஆவலுடன் சென்ற நாம் மிகுந்த ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும்
புறக்கணிப்பு முடிவை எடுத்து உடனே ஊர் திரும்பினோம்.
நாமெல்லாம் ஜெகன் அவர்களின் பாதையை பின்பற்ற வேண்டும்
என்று அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் உறுதி
ஏற்கிறோம்.
கே.ஜீ.போஸ் அணியினர் நம்முடன் இருந்தபோதும்கூட அமைப்பு
பிரச்னைகள் வந்தால், தோழர் ஜெகன் காட்டிய பாதை :
( LCM-Lowest Common Multiple) (மீச்சிறு பொது மடங்கு) என்ற
அனைவரும் ஏற்கக்கூடிய ஒரு நடுநிலையான தீர்வு என்பதாகும்..
( LCM-Lowest Common Multiple) (மீச்சிறு பொது மடங்கு) என்ற
அனைவரும் ஏற்கக்கூடிய ஒரு நடுநிலையான தீர்வு என்பதாகும்..
நமக்குள் தீர்க்க முடியாத பிரச்னை என்பது எதுவும் கிடையாது
என்பதே நமது ஆழமான கருத்து.
( It is possible If we bury the egos and try for a consensus as was
practised by Com.Jagan)
practised by Com.Jagan)
நமது ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு நமது சங்கத்தின்
வளர்ச்சி, வெற்றி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து
அனைவரும் முயற்சி செய்தால் அசைக்க முடியாத ஒற்றுமை
சாத்தியமே.
வளர்ச்சி, வெற்றி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து
அனைவரும் முயற்சி செய்தால் அசைக்க முடியாத ஒற்றுமை
சாத்தியமே.
சாதிக்க முடியாததை சாதித்து காட்டுவோம் (Make Impossible possible)
என்று மைசூர் அகில இந்திய மாநாட்டில் தோழர் குப்தா விடுத்த
அறைகூவல்தான் நமது நினைவுக்கு வருகிறது.
அதற்கான திசைவழியில் அனைவரும் செயலாற்ற வேண்டும்
என்பதே நமது விளைவு.
என்பதே நமது விளைவு.
...............................................................செய்தி; கோவை வலைதளம் .............................
No comments:
Post a Comment