WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, October 31

10,000 – ஜீரோ


“லாபமோ-நட்டமோ குறைந்த பட்சம் 10000 ரூபாய் போனஸ் உறுதி. இது ஒரு இமாலய சாதனை.இது ஒரு வரலாறு.” இப்படியெல்லாம் படித்தோம். பேச கேட்டோம்.
BSNLEU மட்டுமே அங்கீகாரத்தில்  இருந்த் போது நடந்த்து இது.
“அதிகமான  சம்பளம் வாங்கிக் கொடுத்து விட்டோம் போன்ஸ் எதற்கு?” இப்படியும் குரல்கள் ஒலித்தன.

தோழர் குபதா உருவாக்கிய பல ஒப்பந்தக்களையும், உத்தரவுகளையும் விமர்சித்து, கேலி செய்து, கிண்டல் செய்து ஏன் அவற்றை எரித்து சாம்பலாக்கிய நிகழ்வுகளும் நடந்தனவே.

NFTE  அங்கீகாரம் பெற்ற பின்பு போனஸ் பெற்றுத் தர எடுத்த முயற்சிகளைக் கெடுத்தொழித்த நிகழ்வுகளும் நெஞ்சில்  நிழலாடுகிறதே.

ஒற்றுமையை விரும்பாதோர் யார்? ஆனால் ஒற்றுமையின் 

பெயரால் உண்மைகள் ஒளிந்து போகக்கூடாது அல்லவா? 

இது போன்ற “ஒலிகள்” “கதிராக” வீசவில்லையே என்பதுதான் நமது ஆதங்கம். 

  நன்றி :ஈரோடு வலைத்தளம் ......

Tuesday, October 27


அங்கீகரிக்க பட்ட பண்ருட்டி கிளை செயலர்,     P முருகன் நடத்திய கிளைமாநாடு ........சங்க உணர்வுடன் தோழர்கள் கலந்து கொண்டதை பார்த்து மாநில செயலர் அங்கீகாரம் வழங்க வேண்டும் ..... 








கடலூர் ஸ்ரீதர் அணி நடத்திய பண்ருட்டி போட்டி கிளை மாநாடு .......விரல் விட்டு எண்ணிவிடலாம் தோழர்களை ........







Wednesday, October 21

அறிந்ததும்

அறிய விரும்புவதும்

கடந்த வாரம் சென்னைத்தொலைபேசிக்கு உட்பட்ட முன்னாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் (SSA) STR பகுதியில் சில தோழர்களுக்குTTA மற்றும் TM பதவிகளில் பணி நியமனத்திற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவை வெளியிட்டவர் சென்னை தொலைபேசி மாநில தலைமைப் பொதுமேலாளர்.
எனவே இந்த தோழர்கள் நமது இயக்கத்தில் எங்கு உறுப்பினர்களாக இருக்க தகுதிபடைத்தவர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்.

அமைப்பு விதி ஆய்வாள்ர்களிடமிருந்து அறிய விரும்புகிறோம். 
        ............செய்தி :ஈரோடு வலை தளம் ......

Saturday, October 17

புதுச்சேரியில் நடைபெற்ற இந்தியத்திரைப்படவிழா 2015-ல் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக குற்றம் கடிதல் தமிழ் திரைப்படம் புதுச்சேரி அரசால் தெரிவு செய்யப்பட்டு 1 லட்ச ரூபாய் பணமும் விருதும் புதுவை ருக்குமணி திரையரங்கில் 16-10-2015 அன்று அளிக்கப்பட்டது,விருதினை புதுவை முதல்வர் மாண்புமிகு ந,அரங்கசாமி அவர்கள் வழங்க இயக்குநர் பிரம்மா அவர்கள் பெற்றுக்கொண்டார்
விழா தொடங்குவதற்கு முன்பாக புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் மற்றும் புதுவைத் தமிழ்ச் சங்க செயலர் ஆகியோர் இயக்குநர் பிரம்மா மற்றும் தயாரிப்பளர் சதீசுகுமார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தபோது

Thursday, October 15

தனலட்சுமி கலை பள்ளி பாராட்டு விழா விழா நிகழ்ச்சி யில் மன்ன்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் பள்ளி நிறுவனர் தோழர் தணிகைவேல் அரசு அவர்களுடன்

Saturday, October 10

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவஞ்சலி நிகழ்ச்சியை வரும் 13.11.2015 அன்று சிறப்பாக நடத்துவதற்கான புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆலோசனை கூட்டம் இன்று 10.10.2015 நடைபெற்றது. அப்போது சிறந்த ஆய்வாளராக யுஜிசி யினால் தேர்வு செய்யப் பட்ட தோழர் ப.ச.வேல்முருகன் பாராட்டப்பட்டார். தோழர்கள் வீர.முருகையன், எல்லை.சிவக்குமார், வ.சுப்பையா, மு.சி.இராதாகிருஷ்ணன், நீலம்.அருள்செல்வி, இலட்சுமிதத்தை, அ.கலியபெருமாள், இரா.தங்கமணி, மு.ஆதிராமன், இர.இரவிச்சந்திரன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


BONUS........?

  • Postal PLB for Non Executive Employees and ED/ Casual labour.. Employees and ED may get at the rate of 3500 per month for 60 days and CL is to get 1200 rate for 60 days
  • BSNL.....??????????
என் தந்தை காலத்து போராளி, விடுதலை போராட்ட வீரர் தோழர் N குருசாமி அவர்களின் 94 வது அகவைக்கு வாழ்த்துக்கள் ........(10/10/2015)







Tuesday, October 6

வருத்தத்திற்குரிய புறக்கணிப்பு !


             சிறிய பண்ருட்டி கிளைப் பிரச்சனையை காரணம் காட்டி 
நமது நண்பர்கள்  புறக்கணித்தனர்.  மாவட்ட செயலர்  இரா.ஸ்ரீதர்  
மாற்று தீர்வை  அளித்தும்  அதனை  ஏற்றுக்கொள்ளாமல் மாநில 
செயற்குழுவை  புறக்கணித்து கலந்து கொள்ளாதது வருத்தத்துக்கு
உரியது.
                                  கடலூர் வெப் சைட்டிலிருந்து

நமது  மாநில சங்கத்தின் சில அமைப்பு பிரச்னைகள் காரணமாக
பல   மாவட்டச்   செயலர்களும்  மாநில  சங்க  நிர்வாகிகளும் 
மயிலாடுதுறையில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த செய்தியை நாம் அமைப்பு நலன் கருதிபகிரங்கமாக்க விரும்பவில்லை.

 கடலூர் மாவட்டச் செயலர் அச்செய்தியை வெளியிட்டுள்ளதால்
 அதற்கான காரணத்தை விளக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. 


மயிலாடுதுறையில் நடந்த  செயற்குழுவை ஒற்றுமையாக நடத்த 
வேண்டும் என்று நாம் உளமாற விரும்பியதால்தான் அதற்காக 
முன் முயற்சி எடுத்தோம். இது குறித்து மாநில சங்கத்தின் முக்கிய 
நிர்வாகிகள், அமைப்பு பிரச்னைகளை செயற்குழு கூடும் முதல் 
நாளன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை விவாதித்து 
ஒத்த கருத்தை உருவாக்க  முயற்சித்தோம்.

     கோவை மாநில மாநாட்டு முடிவுக்கு எதிராக,  அங்கீகாரத் 
தேர்தலில் சென்னை தொலைபேசி மாவட்டத்தில் வாக்களிக்கும்
உரிமையுள்ள தோழரை தமிழ் மாநிலத்தில்  உள்ள  STR மாவட்ட
செயலராக தேர்ந்தெடுத்தது முறையற்ற செயல் என்று சென்னையில்
நடந்த  செயற்குழு கூட்டத்திலேயே உறுதியாக எடுத்துரைத்தோம்.
அகில இந்திய சங்கமும் இப்பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று 
கூறியுள்ள நிலையில் இந்த செயற்குழு கூட்டத்தில்  அந்த தோழர் 
மாவட்டச் செயலராக பங்கேற்காமல் இருந்தால் சுமுக சூழல் 
உருவாகும் என எடுத்துரைத்தோம். 

எந்த கிளையையும் கலைத்து மாநாடு நடத்தி அங்கீகரிக்கும் உரிமை 
சங்க அமைப்பு விதிகளின்படி மாவட்ட சங்கத்திற்கு கிடையாது. 
பண்ருட்டி கிளையை கலைத்துவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களைக்
கொண்டு  புதிய கிளையை உருவாக்கியது தவறான செயல், இந்த
நடைமுறை ஒருமுறை ஏற்கப்பட்டால் இனிமேல் மாவட்டச் 
செயலர்கள் தங்கள் இஷ்டம்போல த்ன்னிச்சையாக செயலாற்றி
 ஜனநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவர். ஆகவே 
பண்ருட்டி கிளைச் செயலரே மாநாட்டை நடத்த அனுமதிக்க்வேண்டும் 
என்ற இரண்டே இரண்டு தீர்வுகளை ஏற்க கோரினோம். ஏற்க மறுத்த
காரணத்தாலேயே, சென்னையில் நடந்தைப்போல மீண்டும் பிரச்னை
ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், செயற்குழுவில் பங்கேற்க
ஆவலுடன் சென்ற நாம் மிகுந்த ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும்
புறக்கணிப்பு முடிவை எடுத்து உடனே ஊர்  திரும்பினோம்.

நாமெல்லாம் ஜெகன் அவர்களின் பாதையை பின்பற்ற வேண்டும் 
என்று அவரது பிறந்த நாளிலும் நினைவு  நாளிலும் உறுதி
ஏற்கிறோம்.

கே.ஜீ.போஸ் அணியினர் நம்முடன் இருந்தபோதும்கூட அமைப்பு 
பிரச்னைகள் வந்தால், தோழர் ஜெகன்  காட்டிய  பாதை :
LCM-Lowest Common Multiple) (மீச்சிறு பொது மடங்கு) என்ற 
அனைவரும் ஏற்கக்கூடிய ஒரு நடுநிலையான தீர்வு என்பதாகும்..
  
நமக்குள் தீர்க்க முடியாத பிரச்னை என்பது எதுவும் கிடையாது 
என்பதே நமது ஆழமான கருத்து. 

( It is possible If we bury the egos and try for a consensus as was  
practised by Com.Jagan) 

நமது ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு நமது சங்கத்தின் 
வளர்ச்சி, வெற்றி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து 
அனைவரும் முயற்சி செய்தால் அசைக்க முடியாத ஒற்றுமை 
சாத்தியமே.

சாதிக்க முடியாததை சாதித்து காட்டுவோம் (Make Impossible possible)
என்று மைசூர் அகில இந்திய மாநாட்டில் தோழர் குப்தா விடுத்த
அறைகூவல்தான் நமது நினைவுக்கு வருகிறது. 

அதற்கான திசைவழியில் அனைவரும் செயலாற்ற வேண்டும் 
என்பதே நமது விளைவு.  
...............................................................செய்தி; கோவை வலைதளம் .............................

Thursday, October 1

அக்டோபர்  2015
IDA  உயர்வு 

01/10/2015 முதல் 
5.3 சத IDA  
உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்தப்புள்ளிகள்  
107.9 ஆகும்.

FORUM CALLS FOR MASSIVE DEMONSTRATION FOR BONUS ON 06/10/2015:

The meeting of the FORUM held in New Delhi has decided to conduct a Nationwide demonstration on 06/10/2015 for payment of PLI(BONUS).Accordingly in Chennai telephones the FORUM will organize demonstration during lunch hour on 06/10/2015 at CGM’s office and other centers. A meeting of the Circle secretaries has been called to discuss about this demonstration on 01/10/2015 at 03.00PM in BSNLEU office at Flower Bazaar complex. The meeting will be chaired by FORUM chairman C.K.Mathivanan and conducted by Deputy conveners S.Lingamurthy and Shanmugasundarajan. All Branch secretaries and office bearers are requested to plan for a massive demonstration in Chennai telephones to win back our right for Bonus.