இலக்கியத்துக்கான நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மோ யான்(57), உணர்ச்சிகரமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். நிதர்சனத்தின் மாயத்தன்மை, நாட்டுப்புற வழக்குகள், வரலாறு, சமகாலம் அனைத்தையும் இணைக்கும் வகையில் இவரது எழுத்துகள் உள்ளன என நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.
மோ யான் என்பது அவரின் புனைப்பெயராகும். இயல்பில் அதிகமாகப் பேசும் வழக்கமுடைய மோ யான், "பேசாதே' என்ற அர்த்தமுடைய இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் சீனக்குடிமகன் மோ யான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment