WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, October 27

பக்ரீத் பண்டிகை!! வாழ்த்துகள்!!


                                                                  வாழ்த்துகள்!!
                                                        

ஏழை குடும்பத்தினருக்கு வீடு கட்ட ரூ.4 கோடிக்கு கற்பை ஏலம் விட்ட கல்லூரி மாணவி !!


பிரேசிலை சேர்ந்தவர் கேத்ரீனா மிக்லியோரினி (20). உடற்பயற்சி கல்லூரி மாணவியான இவர் ஆன்- லைனில் தனது கற்பை ஏலம் விட்டார். எனவே, அவரது கற்பை விலைக்கு வாங்க கடும் போட்டி நிலவியது. இந்தியாவை சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி, அமெரிக்காவை சேர்ந்த ஜேக்மில்லர், ஜேக்ரைட் உள்பட 15 பேர் ஏலம் கேட்டனர். 

அவர்களில் இந்தியாவை சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி முன்னணியில் இருந்தார். இருந்தும் ஜப்பானை சேர்ந்த நாட்சு என்பவர் அவரது கற்பை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தார். இந்த பணத்தை கொண்டு பிரேசிலில் உள்ள தனது சொந்த மாகாணமான சாண்டா காத்ரீனாவில் ஏழ்மையில் வாடும் குடும்பத்தினருக்கு வீடு கட்டி தந்து உதவ இருப்பதாக கேத்ரீனா மிக்லியோரினி தெரிவித்துள்ளார். 

Thursday, October 18

அன்னிய முதலீட்டை எதிர்த்து !!

அன்னிய முதலீட்டை எதிர்த்து நவம்பர் 20-ந் தேதி முதல் மாவட்டம் வாரியாக பேரணி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் முடிவு. 

ஐ.ஏ.எஸ். அசோக் கெம்கா 19 ஆண்டில் 43 முறை டிரான்ஸ்பர்!!


சோனியா காந்தியின் மருமகன் வதேரா அரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலம் வாங்கி குவித்த விவகாரம் தொ டர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா திடீரென இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 

ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் கடந்த 19 ஆண்டுகளில் 43 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற அதிர் ச்சி தகவல் தற்போது கிடைத்து உள்ளது. 

Friday, October 12


TTA 40 % LDCE for 2011 Notified - Date of Exam 6-1-2013- Vacancies 323 (Open 187+ SC 86 + ST 50)- Negative Marks Scheme - Last Date for Application 31-10-2011- Prepare Well- See all the Model Papers- SSA DS May arrange Classes
                                                                             TN circle........

பெண்களை ஆபாசமாக சித்தரித்து செல்போன்களில் எஸ்.எம்.எஸ்.!!

செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ்., படம் அனுப்பினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்து புதிய சட்டம் வருகிறது. 

சிரியாவின் பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கியது துருக்கி!!


சிரியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை இடைமறித்து, அதிலிருந்த தகவல் தொடர்பு சாதனங்களை துருக்கி பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிரியா இராணுவம் கடந்த 3ஆம் திகதி எல்லையில் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 5 பேர் உயரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக துருக்கி பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என துருக்கி அறிவித்திருந்தது. மேலும் தங்கள் விமான நிலையத்தின் வழியாக எந்த ஆயுத தளவாடங்களும் செல்ல விடக்கூடாது என அரசு முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சிரியா தலைநகர் டமாஸ்கள் நோக்கி ஏ 320 ஏர்பஸ் விமானம் சென்றது.

180 பேர் பயணிக்கக் கூடிய சிரியாவிற்கு சொந்தமான இந்த விமானத்தில் 33 பயணிகள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஆயுதங்கள் கடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, இந்த விமானத்தை துருக்கி போர் விமானங்கள் இடைமறித்து அங்காராவில் இறக்கின.

இந்த விமானத்திலிருந்த இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது என்று துருக்கி அரசு கூறியுள்ளது.

சீன எழுத்தாளருக்கு நோபல் பரிசு!!


இலக்கியத்துக்கான நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோ யான்(57), உணர்ச்சிகரமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். நிதர்சனத்தின் மாயத்தன்மை, நாட்டுப்புற வழக்குகள், வரலாறு, சமகாலம் அனைத்தையும் இணைக்கும் வகையில் இவரது எழுத்துகள் உள்ளன என நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

மோ யான் என்பது அவரின் புனைப்பெயராகும். இயல்பில் அதிகமாகப் பேசும் வழக்கமுடைய மோ யான், "பேசாதே' என்ற அர்த்தமுடைய இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் சீனக்குடிமகன் மோ யான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, October 9

Watermelon could help prevent heart attack, curb weight!!

A new US study has found a daily slice of watermelon could help prevent heart disease by halting the build-up of harmful cholesterol and also be a help in weight control.

உலகிலேயே மிகவும் வயதான பெண் 132 வயதில் மரணம் !!


 உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை படைத்த பெண், தனது 132வது வயதில் இறந்தார்.
ஜார்ஜியாவை சேர்ந்த பெண் ஆன்டிசா கிவிசாவா. இவர் ரஷ்யாவில் கடந்த 1880ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பிறந்தார் என்று இவரது பாஸ்போர்ட் மூலம் தெரிகிறது. மற்றபடி இவரது உண்மையான வயதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இவர் சமீபத்தில் இறந்தார்.
இவர் இறப்பிற்கு முன், ஜார்ஜியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சாசினோ என்ற கிராமத்தில் தனது 42 வயது பேரனுடன் வசித்து வந்தார். இவர் தனது 85 வயது வரை தேயிலை பறிக்கும் பணிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யா பல துண்டுகளாக உடைந்த போது ஏற்பட்ட உள்நாட்டு போர்களில் இவரது உண்மையான பிறந்தநாளை நிரூபிக்கும் ஆதாரங்கள் தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Friday, October 5

Forum of unions/Associations of BSNL !!


Meeting held on 04-10-2012 and decided to conduct programme of Action for ITS absorption:

 (1) 11-10-2012 Lunch hour demonstration at circle/SSA/Corporate office at HQR. 11-10-2012 to 13-10-2012 Savingrams to PM, DOT MOC, Cabinet Secretary, CMD BSNL, Secretary, 

(2) 15-10-2012 Day long Dharna/Circle/SSA/ Corporate office at HQRs,

(3) 26-10-2012 March to PM’s house/Parliament at Delhi/March to Rajbhawan at circle/to Collectarate in SSA HQR,

 (4) 29-10-2012 to 03-11-2012 Day long Hunger Strike SSA/Circle/C.O. at HQR (1000 hrs to 1800 hrs),
 (5) Indefinite strike, if necessary. 
                         
                                                                         chq..........

Thursday, October 4

ஊழல் சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி, பார்லி., குழுவில் இடம்!!


ஊழல் வழக்குகளில் சிக்கி, சிறை சென்று, ஜாமினில் வெளியில் வந்துள்ள, சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி ஆகியோர், பார்லிமென்ட் நிலைக் குழுக்களின் உறுப்பினர்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழலில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டவர், காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் இவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதேபோல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் சிக்கிய, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆகியோரும், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மூவருமே, தற்போது ஜாமினில் வந்துள்ளனர்.இந்நிலையில், இவர்கள் மூவரும், பார்லிமென்ட்டில் உள்ள, பல்வேறு நிலைக் குழுக்களின் உறுப்பினர்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, October 3

மாநில செயற்குழு!!

                                                      NFTE(BSNL)                                                  
மதுரையில் தமிழ் மாநில செயற்குழு     07-10-2012 ல் நடைபெறும்