WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, March 16


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தொழில் அதிபர் சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனம் 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தது. ஆனால் அந்நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழஙகாமல் இழுத்தடித்ததாக அந்நிறுவனத்தின் அதிபர் சிவசங்கரன் குற்றம் சாட்டி இருந்தார். 


இதற்காக சன் குழுமத்தின் சன் டி.டி.எச். நிறுவனத்தில், மாக்ஸிஸ் துணை நிறுவனம் ரூ. 600 கோடியை முதலீடு செய்திருந்தது. ஏர்செல் கைமாறிய 30-வது நாளில் அந்நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஆண்டு தயாநிதி மாறன் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

No comments:

Post a Comment