WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, March 31

முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!!


மேரிலாண்ட் மருத்துவ மையத்தில் முகம் சிதைந்த ஒருவருக்கு, உடல் உறுப்பு தானம் செய்த ஒருவரது முகப் பகுதிகளை எடுத்து பொருத்தி மருத்துவர்கள் செய்துள்ள முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவரின் சாயல் புதிய முகத்தில் இல்லை என்பதுதான் வெற்றிக்கு அடிப்படையே.

Tuesday, March 27

BSNL's Rs 30,000-crore cash reserve plummets to Rs 2,500 crore in FY11


The reasons for this steep fall in cash reserves are payment of Rs 18,500 crore 
towards 3G spectrum and broadband wireless access (BWA) spectrum auction 
price and payment of Rs 5,301 crore to LIC towards group leave encashment 
scheme
Telecom Minister Kapil Sibal has informed the Parliament that state-run telecom firm 
BSNL''s cash reserve plummeted to Rs 2,500 crore in 2010- 2011 from Rs 30,000 crore 
two years back.
"As per the audited books of account, cash reserve of BSNL has gone down from Rs 
30,343 crore as on March 31, 2010 to Rs 2,500 crore on March 31, 2011," Telecom 
Minister Kapil Sibal told Lok Sabha in a written reply.
The reasons he attributed to this steep fall in cash reserves are payment of Rs 18,500 
crore towards 3G spectrum and broadband wireless access (BWA) spectrum auction 
price and payment of Rs 5,301 crore to LIC towards group leave encashment scheme.
Added to this is the Payment of Rs 2,900 crore on implementation of revised pay scale 
and Rs 392 crore in tax liabilities, he said.  
Sibal said that declining revenues and increasing expenditure also added to the burden.
He said that the state owned telco is facing fierce competition from private operators and 
decreasing average revenue per user accounted for decline in revenues, while increased 
expenditure resulted from large legacy work force whose wages accounted for 50 per 
cent of the revenue.
Minister of State for Communications and IT Milind Deora in response to a question told 
the Parliament that BSNL has recovered Rs 988 crore against the outstanding dues 
which stood at Rs 5,231 crore as on November 30, 2011.
BSNL has sought continuation of support from the government towards rural wireline 
connections on phasing out of access deficit charge (ADC).
"Telecom Regulatory Authority of India (telecom regulator) has made an interim 
recommendation of Rs 600 crore as support," he said.
Sibal also said that consolidation of infrastructure, strengthening of revenue streams 
through focus on broadband and enterprise business, focus on customer care and push 
on data usage are some steps the company is taking in this regard.

Sunday, March 25

இலங்கை அகதி முகாம்களில் அடிப்படை வசதிக்கு ரூ25 கோடி!!!


தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் குடும்ப மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு, பிஏ படிப்புக்கு ரூ1,200, பி.எஸ்.சி ரூ1,250, எம்.ஏ ஸீ1330, எம்.எஸ்.சி ரூ1650, டிப்ளமோ ரூ850, பி.இ. ரூ2,750, மருத்துவம் ரூ4700, கால்நடை மருத்துவம் ரூ1,400, சட்டம் ஸீ860, வேளாண்மை அறிவியல் ரூ2,850 ஊக்கத் தொகையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், இலங்கை தமிழர் அகதி மாணவர்கள் 1000 பேர் பயன் பெறுவர். இதற்காக அரசுக்கு ரூ20.98 லட்சம் செலவு ஏற்படும். அகதிகள் முகாமில் இயங்கும் 416 மகளிர் சுய உதவி குழுவுக்கு ஒரு தடவை மானியமாக ஒவ்வொரு குழுவுக்கும் ரூ10,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

புத்தக வெளியிட்டு விழா!!


தோழர். சி.கே.மதிவாணன் அவர்கள் 
தொலைத்தொடர்புத் துறையில் நடந்த ஊழல்களை
அம்பலமாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு திருச்சி
தோழர்கள்,எஸ்.காமராஜ், எம்.பாலகுரு ஆகியோரின்
முயற்சியால் புத்தகமாக வெளியிடப்படுகிறது.                   
                 நாள் :12-04-2012 மாலை 
இடம் :ஏ.கே.நாயக் பவன், சென்னை.
    தலைமை : தோழர். எஸ்.மாலி, தலைவர் CACT 
                   புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை :
 தோழர். ஆர். நல்லகண்ணு CPI அவர்கள்
                      அனைவரும் பங்கேற்போம் ! 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு, அவ்வப்போது அகவிலைப்படியை உயர்த்தி அரசு வழங்கி வருகிறது. இந்த வகையில், தற்போது ஏழு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 

காசோலைகள் 3 மாதம் மட்டுமே செல்லும்!

வங்கி காசோலைகள் மற்றும் வரைவோலைகளை பயன்படுத்த புதிய விதிகளை நிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வரைவோலைகள் மற்றும் காசோலைகள் கையெழுத்திட்ட குறிப்பிட்ட தேதியில் இருந்து 6 மாதங்கள் செல்லுபடியாகும் முறை தற்போது உள்ளது.
இந்நிலையில், 6 மாதம் கால நிலையை 3 மாதங்களாக குறைத்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

பெட்ரோல் விலையை ரூ.8 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு!!!


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலையை லீற்றருக்கு ரூ.8 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனங்களின் வசம் உள்ளன.

Thursday, March 22

BSNL Corporate Office issued order regarding notification of Room Rent for indoor treatment under BSNLMRS

நிலக்கரி கனிம சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.10 லட்சத்து 67 ஆயிரம் கோடி இழப்பீடு!!


2004 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 155 ஏக்கர்கள் நிலக்கரி, கனிம வளச் சுரங்க ஒப்பந்தங்களை 100


நிறுவனங்களுக்கு ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு ரூ.10 லட்சத்து 67 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என மத்திய தலைமை தணிக்கைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்விவகாரத்தினால் நாடாளுமன்றில் எதிர்கட்சிகளினால் சலசலப்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

Sunday, March 18

இலங்கை விவகாரதில் தீக்குளிக்கப் போகிறேன் கருணாநிதி கூறுகிறார்.

இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் குறித்த பிரச்சினையில், மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் விடயத்தில், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

கருணாநிதி போராளி அல்ல - ராமதாஸ் கடும் தாக்கு!

திமுக தலைவர் கருணாநிதி உண்மையிலேயே போராளியாக இருந்தால் தீக்குளிக்கப் போகிறேன் என்றெல்லாம் பேச மாட்டார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Saturday, March 17

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்புக்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு !!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம் 9.5 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக குறைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
   

Friday, March 16


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தொழில் அதிபர் சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனம் 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தது. ஆனால் அந்நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழஙகாமல் இழுத்தடித்ததாக அந்நிறுவனத்தின் அதிபர் சிவசங்கரன் குற்றம் சாட்டி இருந்தார். 


இதற்காக சன் குழுமத்தின் சன் டி.டி.எச். நிறுவனத்தில், மாக்ஸிஸ் துணை நிறுவனம் ரூ. 600 கோடியை முதலீடு செய்திருந்தது. ஏர்செல் கைமாறிய 30-வது நாளில் அந்நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஆண்டு தயாநிதி மாறன் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

தனி நபர் வருமானவரி உச்சவரம்பு 2 லட்சம்!!

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக நிர்ணயம்,கார்ப்பரேட் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை, 2 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றால் வரி இல்லை ,ரூ2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 10% வரி. ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20% வரி. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 30% வரி.

Thursday, March 15

நாளை பொது பட்ஜெட் தாக்கல்!!

நிதி ஆண்டுக்கான பொதுபட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை காலை 11 மணி அளவில் தாக்கல் செய்கிறார்.

Tuesday, March 13


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 
பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக- ஒளிப்பட ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் சிறிலங்கா அரசாங்கம் அது பற்றிய எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, March 4



கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் காரணங்களினால், மணைகள் வாங்குவதற் கான விருப்பக் கடிதங்களைப் கொடுக்கும் கால அவகாசம், 15/03/2012 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

இந்திய ராணுவத்திற்கு புதிய தலைமைத் தளபதி !!




இந்திய ராணுவத்திற்கு லெப்டினன்ட் ஜெனரல் விக்ரம் சிங், புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 59. பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று (03.03.2012) இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் உள்ள ஏறத்தாழ 13 லட்சம் படைவீரர்களுக்கு தலைமை ஏற்கவுள்ளார்.