முடிவுக்கு வருகிறது ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம்!!!
உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக லோக்பால் மசோதாவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்து உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் நாளை இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்று ஹசாரேவுக்கு எழுத்து மூலம் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு வழி செய்யும் வகையில் அவை விதி 184 ன் கீழ் லோக்பால் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், முழு அளவில் நாளை விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்த நடைமுறைகளை தயாரிக்கும் பணியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரவீண் குமார் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.