WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, February 3


உச்சநீதிமன்றத்தில் 2ஜி ஊழல் வழக்கின் விசாரணை தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அப்போது 2ஜி வழக்கில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் அறிவித்தது. இத்தீர்ப்பு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபில், அவசர அவசரமாக நேற்று பிரதமரை அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,


அன்று இயற்றப்பட்ட அக்கொள்கையில் தான் குறைபாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதே தவிர, தற்போதைய அரசாங்கம் குறித்து தவறாக எதுடும் கூறவில்லை. நிதியமைச்சகம் அளித்த அறிவுரைகள் ஏற்று, அதை அமல்படுத்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா தவறிவிட்டார் என்றே உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. எனவே தவறான கொள்கை முடிவை எடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு பாஜக தான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


இதேவேளை 2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்ப்பதா இல்லையா என்பதனை சிபிஐ நீதிமன்றமே தீர்மானித்து கொள்ளட்டும் என உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளதை அடுத்து, ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment